உணர்வுகளின் உதயம்
கருவானேன் உருவானேன்
உருண்டேன் புரண்டேன்
வெளியே வந்தேன் விழுந்தேன்
படுத்தேன் சுவைத்தேன்
தவழ்ந்தேன் உருண்டேன்
கவிழ்ந்தேன் அழுதேன்
எழுந்தேன் தடுமாறினேன்
பிடித்தேன் எழுந்தேன்
நடந்தேன் விழுந்தேன்
நின்றேன் ஓடினேன்
ருசித்தேன் உண்டேன்
படித்தேன் வளர்ந்தேன்
பார்த்தேன் இரசித்தேன்
விளையாடினேன் நண்பனானேன்
ஒட்டினேன் உறவாடினேன்
சேர்ந்தேன் உழைத்தேன்
சந்தித்தேன் சிந்தித்தேன்
ஓய்வெடுத்தேன் உழைத்தேன்
பிரிந்தேன் வாடினேன்
படுத்தேன் தேடினேன்
வீழ்ந்தேன் பிரிவேன்
சேருவேன் பிறப்பேன்
எழுதியவர் திரு பெ.ராசப்பன்
கடுக்கரை
22-04-2015