Saturday, April 30, 2011

நாவலில் நான் வாழ்ந்த நகரத்தின் முந்தைய தோற்றம்

நான் படித்த நாவல்
என்னுடைய நண்பர் ஒரு புத்தகம் தந்தார்.1959-ல் எழுதிய அது சமூக நாவலா.....சரித்திர நாவலென்றும் கூறலாம்.ஒரு முச்சந்தி. அங்கே ஒரு புளிய மரம்.இரவு இரண்டு மணிக்கு மரத்தை கொப்ளான் வெட்ட முயற்சிக்கிறான்.தாமோதர ஆசான் சமயோசிதமாக மரம் வெட்டப்படுவதை தடுக்கிறார்.அந்த புளிய மரத்தின் கதையை கூறுகிறார் 80 வயதான ஆசான்........புளிய மரத்தின் எதிர்புறம் புளிக்குளம் ;தெற...்குப் பக்கம் காற்றாடி மரத்தோப்பு; மேற்குப் பக்கம் சாலை வழியில் போனால் கழுவந்தட்டு.........அவைகளெல்லாம் இப்போதும் நாகர்கோவிலில் வெவ்வேறு வடிவுடனும் வேறு பெயர்களுடனும் காட்சி அளிக்கின்றன

”அற்புதமான செய்திகள். சரித்திர ஆசிரியர்கள் புளியமரத்தின் கதையை எல்லாம் எழுதமாட்டார்கள்”..... நாவல் ஆசிரியரே எழுதிய வரிகள்.மரத்தை காப்பாற்றிய ஆசான் எங்கோ போய் திரும்பி வரவில்லை.........தோப்பில் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. தோப்பு பூங்காவாக மாறுகிறது.கழுவந்தட்டு இன்று ராமவர்மபுரம்........புளிக்குளம்தான் பூங்காவின் எதிர்புறம் உள்ள பேரூந்து நிலையம்......புளியமரம்.........?

எழுதியவர்.......?

சுந்தர ராமசாமி.

Face Book

உன் எண்ணமும் என் எண்ணமும்


உன் வரியை தினமும் நான் வருடுவதும்

நான் பதிவு செய்யும் படத்தை நீ ‘ லைக்’ பண்ணுவதும்

உன் எண்ணம் பற்றி நான் ‘கம்மென்ற்’ அடிப்பதும்

என்னை முகமறியா பலருக்கு நீ ‘நண்பரா’க்குவதும்

உன்னை உன் வரி பார்த்து நான் போற்றுவதும்

என்னுளம் நோகாமல் வரும் நின் கருத்துக்களும்

வரிகளும் வருந்தாமல் பதிவாகும் என்வரிகளும்

நாள்தோறும் நான் வாழ்த்துவதும் நீ மகிழ்வதும்

இனம் புரியா இன்பம்தானே தினமும்.......

மனதுக்கு இதமாக இருப்பதும் உண்மைதானே

எனக்கு இது ஒரு ரசிகமணியின் வட்டத்தொட்டி போலே....

உனக்கு மாலை நேரப் பொழுது போக்கு

எனக்கு அதுதான் ‘டானிக்கு’...........

”உன் முகம் நான் பார்ப்பதும் என் முகம் நீ பார்ப்பதும்”

இன்பமாய் இருக்கையில் உன் முகம் காட்டாதிருந்தால்

என்ன சொல்ல உன்னிடம்...... என் மனம் பித்து பிள்ளை

உன் மனம் ‘------’

முகநூல் எனக்கு ஒரு போதி மரம்......

தெரியாத பல விசயங்களை, செய்திகளை தரும் நூல்...

மறந்து போன பல திறமைகளுக்கு மறு வாழ்வு தரும் நூல்...

பத்திரிகை புறம் தள்ளும் நம்மை அரவணைக்கும் நூல்.....

எத்தனையோ கூறலாம் ...இத்தனை தான் இன்று என்மனதில்......

நாயுடன் ஒரு அனுபவம்

 
Posted by Picasaகாலை......5 மணி....எனை விட்டுப் பிரியாத என் நண்பன் டெலிபோண் மணிபோல்
க்ரீங்க்...க்ரீங்....அலறினது (மொபைல் தான் என் நண்பன்)....எனக்கு பிடிக்காதது
அதனிடம் இதுவும் ஒன்று...

சுரத்தே இல்லாமல் எழுந்தேன்......கடமைகளும் முடிந்தன......

நடக்கப் போவதா..... வேண்டாமா......
மணி 5.45 ( காலையில் நடப்பது பக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு மைதானத்தில்) இன்று ஞாயிறு. ஆள் அரவமே இருக்காது.என்ன செய்ய......

”நடந்து விட்டு வாருங்கள்”...... இது என் மனைவியின் கட்டளை....
என் ஆயுளைக் கூட்ட எண்ணி சபரிமலை போய் வந்த பின் நடக்காததால் வலுக் கட்டாயமாக என்னை அனுப்பிவைத்தாள். நானும் துக்ளக் வாங்கலாமே என்ற எண்னத்தில் சாலையில் நடந்து போனேன்.

பக்கத்து வீட்டு நாயும் என்னோடு வந்தது. அவ்வப்போது எங்க வீட்...டுக்கு வந்து போகும். அல்போண்சா ஸ்கூல் நெருங்கும் போது..........இன்னமும் விடியவில்லை.இருள் கருமை நிறம் மாறப்போகிற சம்யம்....இடது பக்கமுள்ள சந்தில் இருந்து ஒரு நாயின் உறுமல்...சற்றும் அசராமல் நாய் (நண்பன்) வந்து கொண்டே இருந்தது. ..... நாலைந்து நாய்கள் ஒரே பாய்ச்சலாக எங்களை நோக்கி வந்தது.

என்னுடன் வந்த நாய் சண்டை இட தயார் இல்லையென்றாலும் திரும்பிப் போகவும் தயங்கியது (இக்கட்டில் இருந்த என்னை விட்டு போக .....)

உடனே என் கூட வந்த நண்பனை விரட்டினேன்.

அது புத்தி சாலி. புறமுதுகிட்டு ஓடியது......அந்த தெரு நாய்கள் வெற்றிக்களிப்பில் பழைய இடத்திற்கே போய் விட்டது. அவைகள் சொன்ன செய்தி:-” இது எங்கள் தெரு. உன்னுடன் இனி அது இங்கெ வந்தால்..... தொலைத்து விடுவோம்.....” நல்லகாலம்

(என்னை ஒரு ஜந்துவாகக் கூட நாலு நாய்களும் பார்க்கவில்லை)

மாநிலச் சண்டை, நதிநீர்ச் சண்டை, ஜாதிச் சணடை.......ஓ1....இவையெல்லாம் நமக்கோ.

ஒரு வழியாக ஒரு மணிக்கூர் கழிந்து . வீடு வந்து சேர்ந்தேன்.

நாய்ச் சண்டை பற்றி கூறினேன்.

நல்ல காலம். 14 ஊசியில் இருந்து தப்பினீரகள். ....இனிமேல் வெளிச்சம் வந்த பின் நடக்க போங்கள்...தெருவில் எல்லாம் போக வேண்டாம் .....

அய் ஜாலி...... அடுத்த ஞாயிறன்று நடக்க வேண்டாம்....முகனூல் நண்பர்களிடம் வரிகளாடலாமே.....

என் அப்பாதான் என் முதல் பிள்ளை

தவமாய் தவமிருந்து


முதியவர் முன்னே செல்ல

நானவர் பின்னே நடக்க

“அப்பா...பள்ளம்..பர்த்துப் போப்பா”..

“ எனக்கும் கண்ணு இருக்குல்லா?”

நடை தொடர்கிறது........


“அப்பா..அப்பா தண்ணி கிடக்கு வழுக்கீராம பாத்துப்போணும்”

“ என்னடா நினச்சிருக்க மனசுலே. நான்

என்னடே சின்னப்புள்ளையா....தொண தொணண்ணு....பேசாம வாடே”

“இன்று நீயும் எனக்கு பிள்ளை தானெப்பா”

திரும்பினார் அப்பா ...வாய் பேசவில்லை இப்போ

கண்கள் பேசியது......தழும்பிய நீர் வடிந்து கொண்டே

இருந்தது கன்னங்கள் வழியாக..........தனயன் நான் தாயானேன்

எம்மா.......எம்மா........

 
Posted by Picasaஎன் அன்னையே....

முதல் அன்னம் கன்னம் நெருங்க

எந்தனுக்கு தந்த என் அன்னையே

பந்தமாய் பாசமுடன் மகவாய்

வந்துதித்த எனை வாரியணைத்த தாயே

மூவைந்து வருடம் உருண்டோடின நேற்றோடு

...
நீ எனைவிட்டு வானுலகம் போன அந்நாள்

இன்று மகளிர் தினம் ,உனக்குத் தெரியுமா...

என்னன்னையாம் உன் போன்ற தாயும்

பெண் தானே வஞ்சமில்லா நெஞ்சமே

உனை வணங்குகிறேன் இன்றும்....

உனை நானின்று எப்படிக் கூப்பிடுவது

அன்னையே..... தாயே....சரியாய் இல்லையே.

வாயால் சத்தம் போட்டுனை கூப்பிடுகிறேன்...

அம்மா......அம்மா.....எம்மா.........எம்மா....

உன் செவியில் கேட்கிறது..... எனக்கும் புரிகிறது

நான் கூப்பிட்டால் கேட்காமலா இருப்பாய்...

மறைந்தாலும் மறவாத என் அம்மையே

நான் இங்கு நலம்.. நீஅங்கு நலமா?.....

கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப் பயணம்.....2

படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்…2.by Thankappan Arumugaperumal on Friday, April 29, 2011 at 7:22pm.

……….விமானம் புறப்படுமுன் ஒரு பொம்மை நகர்ந்து முன்னே

சென்றது.....ஓ..ஓ...., பணிப்பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

முன்பகுதியில் உள்ள செயரில் இருந்து சீட் பெல்ட்டை எப்படி

போடவெண்டும் என அவள் அணிந்து காட்டினாள்.....

நாங்கள் போய் இருந்த உடனே அதனை சரியாக மாட்டி ஒரு விதமான

எதிர்பார்ப்பில் இருந்தோம்….என் காதோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை......

மனம் இருக்கிறதே அது ஒரு குரங்கு... விமானத்தின் வேகத்தை விட மன வேக அதிகம்

தான்.”திரு முருக கிருபானந்த வாரியார் சிரித்து விட்டுப் போனார்.”......

நான் என் மனைவியைப்பார்த்தேன்......பூரித்துப்போன முகம்.....விமானம்

மிக மிகச் சரியான நேரத்தில் எங்கள் மகிழ்ச்சியை சுமந்து கொண்டு பறக்க
ஆரம்பித்தது.......பெல்ட் தேவை இல்லையே ....ஒரு கலக்கமும் வயிற்றிலும் இல்லை,முகத்திலும் இல்லை.

ஜன்னல் மூலம் வெளியே மேகக்கூட்டத்தை பார்த்தோம்......

மேகங்களில் முருகனையும் சிவனையும் தேடினாள் என் மனைவி......ஒரு குரல்..... “Do you want anything”…..தண்ணீர் தந்தாள்.

பைசா கேட்க வில்லை..... எல்லாமே ப்ரீயாகத் தருவார்கள்

என்ற நினைப்பில் ஜுஸ் கேட்டாள் என் மனைவி....மறக்காமல்


100 ரூபாய் வாங்கிவிட்டு 2 டின் ஜூஸ் தந்தாள். எங்கள் முன்னால் உள்ள செயரின் பின்னால் அந்த செயரோடு ஒட்டியிருந்த பலகையை மேசையாக்கி அதன் மீது ஜூஸ் டின்னை வைத்து குடித்தோம்....ஒரு வயது பையனின் தாயிடம் மிகவும் பாசமாக எதுவும் தேவையானால் பட்டனை அழுத்துங்கள் என்று கூறிய பணிப்பெண்ணின் பரிவைக் க்ண்டேன். அவள் பேசியது மலையாளம். Jet Airways magazine எடுத்து படிக்க முயன்றேன். முடியவில்லை.....ஜன்னல் என்னை ஈர்த்தது....வெளியே பார்த்தால் எனக்கு ஒரே ஆச்சரியம் கலந்த சந்தேகம்......விமானம் நகரவே இல்லையா?..... மிதக்கிறதா?.... ”ஆம் நகரவே இல்லையே ஏன்” ....என் மனவி என்னைக் கேட்டாள். பள்ளிக்கூடத்தில் படித்த அறிவுப்பொறி என்னைப் பேச வைத்தது......”பூமியும் சுற்றுகிறது.......அதன் மீது நாமும் (விமானம்) பறப்பதால் நிற்பது போல் உண்ர்கிறோம்”....சரியா....தவறா.....தெரியவில்லை ....அவளுக்குப் புரிந்ததா.....அதுவும் தெரியவில்லை.....எப்பொழுதும்போல் புரிந்தது போல் தலையாட்டினாள்.....மெல்ல ஒரு குரல் அறிவிப்பு....’” நாம் இப்பொழுது இவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.சரியான நேரத்தில் 12 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்து விடுவோம்’”......சில நிமிடங்களில் உயரம் குறைந்தது......வெளியே மேகமும் விமானமும் பறந்து கொண்டிருந்தன...என் கையில் இருந்த மேகஸீனை வைக்கவா...எடுத்துக்கலாமா....என் மனைவிக்கு எடுக்க மனமில்லை....அந்தநேரம் அருகில் வந்த Air hostess “ it is only for you, you can take it with you” எனக் கூறினாள். நன்றியோடு எடுத்துக் கொண்டேன். மறுபடியும் வெளியே கடல் குளம் போலவும் வீடுகள் ,தென்னை மரங்கள், பள்ளி.....சின்ன பொம்மைபோல் இருப்பதைக் கண்டு ரசித்தேன்.....ரசித்தோம்......அய்யோ இறங்கச் சொல்கிறார்களே.......மனமில்லாமல் விமானத்தில் இருந்து வெளியே வந்தோம்......என் மனைவி என்னிடம் இன்னமும் ஒரு தடவை விமானத்தில் போகவேண்டும் என கூற ‘சரி’ என்று தலையாட்டினேன்.


வெளியே வந்து என் மகன் சின்னவனைத் தேடினேன்......9.30 மணிக்கே காரில் வீட்டில் இருந்து வந்தவன் பாலராமபுரத்தில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.12.45 க்கு நாங்கள் காரில் பயணம் செய்தோம்.........

ஏன் இவ்வளவு சந்தோசம்....சந்திரமண்டலத்திற்கே போய் வந்தது போன்ற சந்தோசம்...... ஏன்......சிறுபிள்ளையா......முதியவரானால் சிறுபிள்ளைதானோ.......

என் மனைவி ஆசைப்பட்டாள்...... நல்ல மகளாய்,தங்கையாய் ஒரு கிராமத்தில் பிறந்து என் கிராமத்துக்கு வந்து நல்ல மருமகளாய், மனைவியாய் பின் பாசமுள்ள தாயாய் அன்பான மாமியாராய் , பாட்டியாய் தன் வாழ்நாள் முழுவதுமே ”பணிப்பெண்” ணாகவே என் நிழலாகவே இருக்கும் அவள் அடைந்த சந்தோசமே என் சந்தோசம்.......

இளைஞனே! ஒரு விமான டிக்கெட் எடுத்து உன் தாயிடம் தந்தையிடம் கொடு.......நன்றிப்பெருக்கால் துடிக்கும் தழும்பும் அவர்களின் கண்களைப் பார்......ஒரு தடவையாவது அவர்கள்
வானில் பறக்கட்டும்.......நாங்கள் விமான நிலயத்தை அடைந்து உள்ளே போகுமுன் எங்கள் மருமகனிட்ம் நான் கூறிய வார்த்தை“ நன்றி”.......இதைப் படிக்கும் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..... நன்றி.........இன்று தேதி 29 . நான் பிறந்தது இதே நாள் 1947.

கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப்பயணம்.....1

படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்....1
.by Thankappan Arumugaperumal on Thursday, April 28, 2011 at 6:27am.

சனிக்கிழமை,எல்லாவாரங்களிலும் வரும்

இனிய நாள்......

அனைவருக்கும் பிடிக்கும் நாள் காரணம்

மறுநாள் காலை,மாலை தொல்லைஇல்லாநாள்.

எனக்கு எல்லா நாளுமே ஞாயிறுதானே.என்

மனம் கவர்ந்த நாள் சனிக்கிழமை.அதுவும் ஏப்ரலில்

ஒன்பதாம் நாள் வந்த சனிக்கிழமை மறக்கமுடியாத

இனிய நாள்.....வானில் நான் என் மனைவியுடன்

பறந்த நாள்...இனியும் நான் இதுபோல் பயணம்

செய்யலாம், இருப்பினும் முதல் விமான அனுபத்தை

தந்த சனிக்கிழமை ஒரு வசந்த நாள் எனக்கு....

அந்த சனிக்கிழமை அதிகாலையில் துயிலெழுந்து

ஏழு மணிக்கே பெங்களூருவில் வீட்டில் இருந்து

என் மருமகன் துணையுடன் கிழம்பினோம்.....

ஒன்பது மணிக்குமுன்பே விமானநிலையத்தில்...

மருமகனின் அனுபவ ஆலோசனைகளைப் பெற்ற

நான் பல தடவை போனது பொன்ற பாவனையுடன்

பாதுகாப்பு சோதனைகளையெல்லாம் வெற்றிகரமாக

முடித்து விட்டு காத்திருப்போர் அரங்கை அடைந்தோம்

அழகான இருக்கைகள் எங்களை அழைத்தன......

எனக்கு மாத்திரமே தெரிந்த படபடப்பும் நெஞ்சத்துடிப்பும்

சீரான நிலைக்கு வந்தபின் தான் என் கண்கள் தன்

பணிதனை ஆரம்பித்தன...மேலும் கீழும் வட்டமிட்டும்

கண்கள் பார்த்தன......என்மனமோ நான் காண்பதென்ன

கனவா?...... நம் நாட்டில் தான் இருக்கிறோமா.!...... ஒரே வியப்பு

நேரம் இருக்கிறது 9.50 க்கு......அரங்கில் எது வேண்டுமானாலும்

கிடைக்கும். எதையாவது வாங்கலாம்; ...ஆசையுடன் நாங்கள்

முதலில் T-shirt வாங்க நினத்து விலையைப் பார்த்தோம்.தலை

கிறு கிறுவென சுற்றியது......பேனா விலை கேட்டேன்.மினிமம்

ஆயிரம் ருபாய்........எதையாவது ஒன்று வாங்கியே ஆகணும்.

வாங்கினேன்.....அது ஒரு சிறிய கையடக்கமான புத்தகம்.

விலை 99/- (பெரியார் ஈ.வெ.ராமசாமி) ஆங்கில நூல்......

’காப்பி குடிப்போமா’..என் மனைவி கேட்டாள்....குடிப்போமே

என 50 ரூபாய் கொடுத்து இரண்டு காப்பி கேட்டேன்........

80/- என கூறினான். 30/- கொடுத்தேன்......ஒரு காப்பிக்கு 80/-

என்றான்.....கேட்டதைக்கொடுத்து காப்பியை வாங்கி சீனியை நானே எடுத்து

கலக்கி குடித்தேன்.(அழகான சிறிய ப்ளாஸ்டிக் கரண்டியால்).பேப்பர்

இலவசமாக எடுத்து படிக்கலாம் என என் அறிவுக்கு எட்டியபோது

மணி 9.50 .கைக்கு எட்டியது கண்ணுக்கு கிடைக்கல.ஒரு வழியாக

விமானத்தில் பணிபெண்ணின் அன்பாக ஆங்கிலத்தில் வரவேற்க நாங்கள்

போய் இருந்தோம்.விமானம் பறக்க ஆரம்பித்தது....என் மனம் சந்தோசவானத்தில்

பறந்தது......பணிப்பெண் ..... (தொடரும்)