Wednesday, February 27, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்......3


 • எதிர்வினை ஆற்றாமலேயே ஒன்றினைக் கடந்து செல்லும்போது மிக நல்லது நடக்கின்றது; ஒவ்வொன்றிற்கும் எதிர்வினை ஆற்றும்போது நல்லது நடக்காமலே போய்விடும்.
 • நீ எப்படி தியானம் செய்கின்றாயோ, அப்படியே நீ ஆகின்றாய்.
 • யாருக்கு குரு அமையவில்லையோ அவர்தான் பாரம்பரிய மரபைப் பற்றி நிற்கின்றார். யாருக்கு குரு அமைகின்றாரோ,அவருக்கு குருவே மரபாகிறார்.
 • அன்பு, பக்தி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதனை புரிகின்றவர்தான் யோகி ஆகின்றார்.
 • எந்தவித உணர்வுமின்றி மனதின் அகத்திலிருந்து மனதின் புறத்திற்கு ஆன்மீகத் தேவையை முழுமையாக அடைவதற்கு விடப்படும் அழைப்புக்குரலே பிரார்த்தனை எனப்படுகிறது.
 • தகுதியான நபர் அவரது அன்புக்கரங்களால் நமக்கு உணவளிக்கும் போது அது தெய்வீக அமிர்தமாகிறது.
 • சார்பின்மை,விருப்பத்தேர்வின்மை,எதிர்பார்ப்பின்மை இவைகளே சேவையின் முக்கியமான அம்சங்கள்..
 • வேலைக்குக் கிடைக்கும் பரிசு இன்னும் கூடுதலான வேலை. அந்தக்கூடுதலான வேலையினைச் சரியாகச் செய்யும்போது கிடைக்கும்பரிசுதான் தலைசிறந்த பரிசு

 • முழுமையான அன்பினில்தான் முழுமையான (மாஸ்டரிடத்து) சார்ந்திருத்தல் உள்ளது. முழுமையான சார்ந்திருத்தலில்தான் முழுமையான சரணாகதி உள்ளது.

 • நாம் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் மாஸ்டரின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றோம்.
 • ஆஸ்ரமம் என்பது ஒருவர் ஆன்மீகத்தில் வளர்வதற்கு மாஸ்டரோடு இருப்பதற்காகச் செல்லும் இடம்..
 • நிலையான நினைவு மட்டுமே எப்போதும் மாஸ்டரோடு இருப்பதற்கு சரியாக உதவும் உபாயம் ஆகும்..
 • இறந்தகாலத்திலிருந்து அளிக்கப்படும் விடுதலையே சுத்திகரிப்பு.
 • உண்மையான அப்யாசி என்பவர் முழுக்கவும் ஒழுங்குமுறையுடன் வாழ்பவர்.
 • பக்திக்கு எடுத்துச்செல்லும் படிக்கட்டாக சேவையை எடுத்துக்கொள்ளலாம்.
 • முழுமையான நம்பிக்கையிலிருந்துதான் முழுமையான கீழ்ப்படிதல் வளரமுடியும்.
 • ஆன்மீகம் என்பது பரிணாம வளர்ச்சிக்கான பாதை; பரிணாம வளர்ச்சி என்பது உணர்ந்து அனுபவிக்கப்படவேண்டும்.

 • ஒரு நல்ல தந்தையாகவோ அல்லது ஒரு நல்ல தாயாகவோ இருக்க முடியாத ஒருவர் ஒரு நல்ல அப்யாசியாக இருக்க முடியாது.
 • தெய்வீக அருள் என்பது தானாக நிகழ்வதில்லை. அது உன்மீது பொழிவதும் தானாக நிகழலாம்.;ஆனால் அதை நீ விரும்பி பெற்றுக் கொள்வது தானாக நிகழ்வதாக இருந்திட முடியாது. நீ உன் இதயத்தைத் திறந்து கொள்வதன் மூலமே இது சாத்தியமாகிறது

மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

Tuesday, February 26, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்......2


 • ஒருவர் அவர் அடைய வேண்டிய இலட்சியத்தை எப்போதுமே அவர் முன்னே வைத்திருப்பாரேயெனில், அவருடைய பார்வையில் மாஸ்டர் மட்டுமே லயித்திருப்பார்; ஏனெனில் மாஸ்டரே சகஜ மார்க்கத்தின் உண்மையான இலட்சியம்.
 • ஒரே பிராணஹுதியாலேயே ஒருவரின் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
 • நம் மனதிலும் உணர்விலும் மாஸ்டர் இருந்தால் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றியடையும்.
 • நிதானம், சமநிலை இரண்டையும் காப்பாற்றுபவர்களால் மட்டுமே கடவுளை உணர முடியும்.
 • ஆன்மீகக் கோவிலைக் கட்டுவதற்கு முக்கியமாக நமக்கு உதவிடும் இரண்டு கருவிகள் சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும் ஆகும்; அன்பு என்பது அதன் அஸ்திவாரம்.
 • சுத்திகருப்பும் தியானமும் நம் பரிணாம வளர்ச்சிதனை எட்டுவதற்கு பெரிதும் துணை புரிகின்றன.
 • நீ உண்மையைப் பேசும் விதத்தில் அன்பு தோன்றுகிறது.
 • ஒழுங்கு முறையின்றி அன்பு இயங்கிட முடியாது.
 • ஒழுக்கம் என்பது அந்தந்த தருணங்களுக்கு ஏற்ப ஒத்திசைந்து செல்வது ஆகும்.
 • அன்பில்லா ஆச்சார நெறிகள் அனைத்தும் ஏமாற்று வித்தையே.
 • மாஸ்டரை நினைவு கொள்ள முயல்வதன்
  மூலமும், அடைந்த நினைவை நிலையாக தக்க வைத்துக் கொள்வதன் மூலமும் அவர் மீதான அன்பை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
 • இப்போது எதனைச் செய்ய வேண்டுமோ அதனை இப்போதே செய்.
 • பக்தி என்பது உன் கடமையை முழுமையாகச் செய்வதாகும்.
 • மாற்றத்தை உருவாக்கும் உன்னதமான பணியில் இணைந்து பணியாற்றிடும் அனைவரும் பிறவா நிலையில் மாஸ்டரோடு இணைகின்றனர்.
 • பற்றுறுதியோடு செய்யப்படும் ஒவ்வொரு செயலும்,விவரிக்க இயலாத முறையில் மாஸ்டருடைய ஆற்றலை அவருக்கு தெரிந்தோ தெரியாமலேயோ வெளிப்படுத்துகின்றது.
 • எப்போது ஆசை மனத்திரையிலிருந்து அகலுகின்றதோ, அப்போது வாழ்க்கை ஒழுங்கு படுகிறது.
 • வாழ்வின் இறுதி இலட்சியமே கடவுள்.
 • மாஸ்டரிடத்து பற்றினை வளர்த்தால் லோகாயுத விஷயத்தில் பற்றின்மை இயல்பாகவே தன்னை வந்து ஒட்டிக்கொள்ளும்
 • சத்தியத்தை நோக்கி உள்ளார்ந்த விழிப்புநிலை ஏற்படுவதே அன்பாகும்.

  மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

  தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166
   

Monday, February 25, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்.....1


  சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்.....1                (1 முதல் 17 வரை )
1)   சாதனா என்பது அஸ்திவாரம்அஸ்திவாரமின்றி  வீடில்லை
2)   மாற்றம் என்பது முன்னேற்றத்திற்கு  உதவிடும் உபகரணம்.
3)   ஒழுங்குமுறையோடு வாழும் வாழ்க்கையையே, ஒழுக்கமாகும்.
4)   மாஸ்டரை நம்முடையவர் என எடுத்துக் கொண்டு அவரை நம்முடைய இதயத்தோடும், ஆன்மாவோடும் முழுக்க நேசிக்கும் போது தான்  நிலையான நினைவு சாத்தியமாகிறது.
5)   நீ உருவாக்கியது  உன்னிடம் இருந்து அகலும்போது அவர் உருவாக்கியது உன்னை வந்தடையும்..
6)   மாஸ்டரிடம் காட்டும் பக்தி என்பதும், அன்பு என்பதும் ஒரு குழந்தை தன் தாயின் அரவணப்பைத் தவிர வேறு எதனையும் விரும்பாததுக்கு ஒப்பாகும்.
7)   அனைத்தையும் உள்வாங்கி, எதனையும் வெளிப்படுத்தாதவர் தான் காணமுடியாத கடவுள்.
8)   தெய்வீகம் எதுவோ அதனை உணர்வதுதான் பரிணாம வளர்ச்சி.
9)   தமது வாழ்க்கையை எவர் ஒருவர் தியாகம் செய்திடத் தயாராக இருக்கிறாரோ அவரே மாஸ்டரை நேசிப்பதாக சொந்தம் கொண்டாடமுடியும்.
10)  ஒரே ஒரு இலக்கினைக் கொண்டிருப்பவருக்கு அதை அடைவது ஒன்றே பிரச்சினையாக இருக்கும் . ஆனால் பொதுவாக மக்கள் நிறைய இலக்கினைக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன.
11)  சுயநலத்தோடு எழுப்பப்படும் ஒவ்வொரு வேண்டுகோளும், விண்ணப்பமும்,பிரார்த்தனையும் நமக்காக கடவுள்அருள்பாவித்து வேலை செய்வதை தடை செய்கிறது.
12)  ஒவ்வொருவர்  இதயத்திலும் அத்தியாவசியமாக இருக்க வேண்டியது துணிவு மட்டுமே..
13)  அன்புடனும் நல்லநோக்குடனும் செயல்படுபவர் எவரோ அவரே மாஸ்டர் விரும்பிய வண்ணம் ஆகின்றார்.
14)  கடவுளால் உதவி செய்ய முடியாத சூழ்நிலைகளில் கூட குருவினால் உதவிடமுடியும்
15)  சரணாகதியடையும்போது ,நாம் எதில் சரணாகதி அடைகின்றோமோ அதுவாக ஆகின்றோம்.
16)  மாஸ்டரிடத்து வளரும் பற்று ,உலகப்பற்றிலிருந்து நம்மை விடுவிக்கும் தீர்வாக அமைகின்றது.
              
       17)   ன்னை      நீ மாற்றும்  போது இந்த உலகம் மாறுகிறது.பிரபஞ்சம்     
மாறுவதின் இரகசியம் உன்னை மாற்றுவதில் தான் இருக்கிறது.


        மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

          

Monday, February 4, 2013

என் பள்ளியில் நான் கண்ட ஆசிரியர்கள்

1961-62-இல் பூதப்பாண்டி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பில் சேரும்போது பொறியியல் பிரிவு,விவசாயப்பிரிவு என bifurcated course-இல் சேர்ந்துபடிக்கலாம்.கணிதத்தில் அதிக மார்க்கு எடுத்தவர்களுக்கு பொறியியல்பிரிவு கிடைக்கும்.சயின்ஸில் கூடுதல் மார்க்கு எடுத்தவர்களுக்கு விவசாயப் பிரிவு கிடைக்கும்.
இந்த இரண்டு பிரிவு மாணவர்களும் ஒரே வகுப்பில் தமிழ் ,ஆங்கிலம், படிப்பார்கள். Standard  X-B.
Standard X-A இல்பெண்கள்  படிப்பார்கள்.இவர்களுடன்  4 அல்லது 5 பையன்களும் சேர்ந்தார்கள்.

நானும் குறத்தியறையில் சேர்ந்து படித்த கண்ணனும் பூதப்பாண்டி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தோம். அவன் 9-A.   நான் 9-B. வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சேர்ந்து தான் சாப்பிடுவோம்.... ஒன்றாகவே பள்ளிநேரம் முடிந்ததும் குறத்தியறை விலக்குவரை நடந்து செல்வோம்.அதன்  பிறகு  நான் கடுக்கரைக்குப் போவேன். அவன் மேல்கரை நோக்கிச் செல்வான்.

அடுத்த வருடம் தொடக்கத்தில் நாங்கள் இருவரும் பத்தாம் வகுப்பில் படிப்பதற்கான பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது நான் எதனையும் தேர்ந்தெடுக்காமல் இருந்து விட்டேன். கண்ணன் என்னிடம் சொன்னான்.” நான் பொறியியல் பாடம் எடுத்துப் படிக்க பேர்  கொடுத்திருக்கேன். நீயும் பேர் கொடு. நாம் இருவருமே ஒரே வகுப்பில் இருந்து படிக்கலாம்;  மேலும்  நமக்கு  உயிரியல் ,தாவரவியல் பாடங்கள்  கிடையாது , சமூகவியல் பாடம் படிக்கணும்  ஆனால்  பரிட்சை எழுதினால் போதும் 35 மார்க்குக்கு  குறைவாக எடுத்தாலும்  போதும் ” என்றான்.

நானும் அவன் சொன்னான் என்பதற்காகவே பேர் கொடுத்தேன். விதி வேறுவிதமாக செயல் பட்டது. மார்க்கு அடிப்படையில் தேர்வு செய்ததில் எனக்கு நான் கேட்ட பாடப்பிரிவு  கிடைத்தது. அவனுக்கு கிடைக்கவில்லை.மிகவும் மனம் நொந்து போயிற்று. நான் எனது வகுப்பு ஆசிரியரிடம் போய் எனக்கு பொதுப் பிரிவுப் பாடமே போதும் என்று முறையிட்டேன். பலனில்லை....... நானும்  அவனும் வெவ்வேறு வகுப்புகளில் எங்கள் படிப்பைத் தொடர்ந்தோம்

நான் Composite mathematics ,General Engineering,Engineering Science பாடங்கள் படித்தேன்.கணித பாடம் எடுத்த ஆசிரியர் அல்போன்ஸ்ராஜ்.,General Engineering பாடம் சென்னையில் இருந்து சந்தானம் என்பவர் எடுத்தார் . அவர் பாலிடெக்னிக் படித்தவர் .

பத்தாம் வகுப்பு முடிந்து 11 -ஆம் வகுப்பு ........

கணிதப் பாடம் எடுத்தவர் புதியதாக வந்த தலைமை ஆசிரியர் மாதவ ஐயர் . மிக நன்றாக பாடம் நடத்தினார். அவர் என்னிடம் வகுப்பில்  x axis ,y axis பற்றி சொல்லி ஏதோ ஒரு கேள்வி கேட்டார் . தெரியாது என்றதும் அவருக்கு மிகவும் கோபம் வந்து என்னைப் பார்த்து, “ நாணம் இல்லையாடா உனக்கு ? பத்தாம் கிளாசில படிச்சது தெரியாம நிக்கிறியே.......”

“போன வருஷம் படிக்கல்ல ?......”  நானும் சக மாணவர்களும் சேர்ந்து சொன்னோம்

யார் உங்களுக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு எடுத்தா?.....

அல்போன்ஸ்ராஜ் சார்.......

அடுத்த நாள் மாலை 4 மணிக்கு Extra class. நடக்கும். க்ராப் நோட்டு வாங்கிற்று வாங்க என சொன்னார். மறுநாள் மாலை 4 மணிக்கு வகுப்பில் காத்திருந்தோம்.

சார் வந்தார்..... வந்தவர் அல்போன்ஸ் சார்......

சிரித்துக் கொண்டே பாடம் நடத்தினார்......... ஒரு வாரம் வகுப்பு.......

வருட முடிவில் Group  போட்டோ,Social Day ....... பிரியா விடை பெற்று எல்லோரும் Autograph வாங்கினோம்......

எங்கள் வகுப்பாசிரியர் விடுமுறையில் அல்லது மாற்றலாகிச் சென்றாரா...? தெரியாது.....  புதிய ஒருவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்....மாணவர்கள் அவரிடம் ஆட்டொகிராப் வாங்க போனோம்.

அவர்,” என்னடா...... என்னை உங்களுக்குத் தெரியாதே!.........”

அமைதியாய் நின்றோம்.

என்னமோ எழுதி கையெழுத்துப் போட்டார்.....

என் முறை வந்ததும் அவரிடம் கொடுத்தேன்.

“என்னடே...... நீ ...... வளரவே இல்ல.... சின்ன பையனா இருக்க..... உனக்கெல்லாம் Engineering College -ல  இடம் கிடைக்காதே... உனக்கு எந்த ஊரு...?”

”கடுக்கரை” நான் சொன்னேன்.

சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்த அவர் ,” ஆறுமுகம் பிள்ளை  அண்ணாச்சியின் மகனா....!” என்றார்.

நல்ல படிக்கணும். என் ஆட்டோக்ராபில் எழுதி என்னிடம் தந்தார்.

  ”உயரமாக வளர்.... உயர்ந்த எண்ணம் கொள்” .........எழுதியவர் பழனிவேல் சார்.

பள்ளிப் பருவம்......... விடை பெற்றுச் சென்றது......