- ஒருவர் அவர் அடைய வேண்டிய இலட்சியத்தை எப்போதுமே அவர் முன்னே வைத்திருப்பாரேயெனில், அவருடைய பார்வையில் மாஸ்டர் மட்டுமே லயித்திருப்பார்; ஏனெனில் மாஸ்டரே சகஜ மார்க்கத்தின் உண்மையான இலட்சியம்.
- ஒரே பிராணஹுதியாலேயே ஒருவரின் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
- நம் மனதிலும் உணர்விலும் மாஸ்டர் இருந்தால் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றியடையும்.
- நிதானம், சமநிலை இரண்டையும் காப்பாற்றுபவர்களால் மட்டுமே கடவுளை உணர முடியும்.
- ஆன்மீகக் கோவிலைக் கட்டுவதற்கு முக்கியமாக நமக்கு உதவிடும் இரண்டு கருவிகள் சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும் ஆகும்; அன்பு என்பது அதன் அஸ்திவாரம்.
- சுத்திகருப்பும் தியானமும் நம் பரிணாம வளர்ச்சிதனை எட்டுவதற்கு பெரிதும் துணை புரிகின்றன.
- நீ உண்மையைப் பேசும் விதத்தில் அன்பு தோன்றுகிறது.
- ஒழுங்கு முறையின்றி அன்பு இயங்கிட முடியாது.
- ஒழுக்கம் என்பது அந்தந்த தருணங்களுக்கு ஏற்ப ஒத்திசைந்து செல்வது ஆகும்.
- அன்பில்லா ஆச்சார நெறிகள் அனைத்தும் ஏமாற்று வித்தையே.
- மாஸ்டரை நினைவு கொள்ள முயல்வதன்
மூலமும், அடைந்த நினைவை நிலையாக தக்க வைத்துக் கொள்வதன் மூலமும் அவர் மீதான அன்பை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். - இப்போது எதனைச் செய்ய வேண்டுமோ அதனை இப்போதே செய்.
- பக்தி என்பது உன் கடமையை முழுமையாகச் செய்வதாகும்.
- மாற்றத்தை உருவாக்கும் உன்னதமான பணியில் இணைந்து பணியாற்றிடும் அனைவரும் பிறவா நிலையில் மாஸ்டரோடு இணைகின்றனர்.
- பற்றுறுதியோடு செய்யப்படும் ஒவ்வொரு செயலும்,விவரிக்க இயலாத முறையில் மாஸ்டருடைய ஆற்றலை அவருக்கு தெரிந்தோ தெரியாமலேயோ வெளிப்படுத்துகின்றது.
- எப்போது ஆசை மனத்திரையிலிருந்து அகலுகின்றதோ, அப்போது வாழ்க்கை ஒழுங்கு படுகிறது.
- வாழ்வின் இறுதி இலட்சியமே கடவுள்.
- மாஸ்டரிடத்து பற்றினை வளர்த்தால் லோகாயுத விஷயத்தில் பற்றின்மை இயல்பாகவே தன்னை வந்து ஒட்டிக்கொள்ளும்
- சத்தியத்தை நோக்கி உள்ளார்ந்த விழிப்புநிலை ஏற்படுவதே அன்பாகும்.
மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166
என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்
Tuesday, February 26, 2013
சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்......2
Monday, February 25, 2013
சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்.....1
சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்.....1 (1 முதல் 17 வரை )
1)
சாதனா என்பது அஸ்திவாரம்;
அஸ்திவாரமின்றி வீடில்லை
2)
மாற்றம் என்பது முன்னேற்றத்திற்கு உதவிடும் உபகரணம்.
3)
ஒழுங்குமுறையோடு வாழும் வாழ்க்கையையே, ஒழுக்கமாகும்.
4)
மாஸ்டரை நம்முடையவர் என எடுத்துக் கொண்டு அவரை நம்முடைய
இதயத்தோடும், ஆன்மாவோடும்
முழுக்க நேசிக்கும் போது தான் நிலையான
நினைவு சாத்தியமாகிறது.
5)
நீ உருவாக்கியது
உன்னிடம் இருந்து அகலும்போது அவர் உருவாக்கியது உன்னை வந்தடையும்..
6)
மாஸ்டரிடம் காட்டும் பக்தி என்பதும், அன்பு என்பதும்
ஒரு குழந்தை தன் தாயின் அரவணப்பைத்
தவிர வேறு எதனையும் விரும்பாததுக்கு ஒப்பாகும்.
7)
அனைத்தையும் உள்வாங்கி, எதனையும்
வெளிப்படுத்தாதவர் தான் காணமுடியாத கடவுள்.
8)
தெய்வீகம் எதுவோ அதனை உணர்வதுதான் பரிணாம வளர்ச்சி.
9)
தமது வாழ்க்கையை எவர் ஒருவர் தியாகம் செய்திடத் தயாராக
இருக்கிறாரோ அவரே மாஸ்டரை நேசிப்பதாக சொந்தம் கொண்டாடமுடியும்.
10)
ஒரே ஒரு இலக்கினைக் கொண்டிருப்பவருக்கு அதை அடைவது ஒன்றே
பிரச்சினையாக இருக்கும் .
ஆனால் பொதுவாக மக்கள் நிறைய இலக்கினைக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு
நிறையவே பிரச்சினைகள்
இருக்கின்றன.
11)
சுயநலத்தோடு எழுப்பப்படும் ஒவ்வொரு வேண்டுகோளும், விண்ணப்பமும்,பிரார்த்தனையும்
நமக்காக கடவுள்அருள்பாவித்து வேலை செய்வதை தடை செய்கிறது.
12)
ஒவ்வொருவர் இதயத்திலும்
அத்தியாவசியமாக இருக்க வேண்டியது துணிவு மட்டுமே..
13)
அன்புடனும் நல்லநோக்குடனும் செயல்படுபவர் எவரோ அவரே மாஸ்டர்
விரும்பிய வண்ணம் ஆகின்றார்.
14)
கடவுளால் உதவி செய்ய முடியாத சூழ்நிலைகளில் கூட குருவினால்
உதவிடமுடியும்
15)
சரணாகதியடையும்போது ,நாம் எதில்
சரணாகதி அடைகின்றோமோ அதுவாக ஆகின்றோம்.
16)
மாஸ்டரிடத்து வளரும் பற்று ,உலகப்பற்றிலிருந்து
நம்மை விடுவிக்கும் தீர்வாக அமைகின்றது.
மாறுவதின் இரகசியம் உன்னை மாற்றுவதில் தான் இருக்கிறது.
மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .
தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166
Monday, February 4, 2013
என் பள்ளியில் நான் கண்ட ஆசிரியர்கள்
1961-62-இல் பூதப்பாண்டி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பில் சேரும்போது பொறியியல் பிரிவு,விவசாயப்பிரிவு என bifurcated course-இல் சேர்ந்துபடிக்கலாம்.கணிதத்தில் அதிக மார்க்கு எடுத்தவர்களுக்கு பொறியியல்பிரிவு கிடைக்கும்.சயின்ஸில் கூடுதல் மார்க்கு எடுத்தவர்களுக்கு விவசாயப் பிரிவு கிடைக்கும்.
இந்த இரண்டு பிரிவு மாணவர்களும் ஒரே வகுப்பில் தமிழ் ,ஆங்கிலம், படிப்பார்கள். Standard X-B.
Standard X-A இல்பெண்கள் படிப்பார்கள்.இவர்களுடன் 4 அல்லது 5 பையன்களும் சேர்ந்தார்கள்.
நானும் குறத்தியறையில் சேர்ந்து படித்த கண்ணனும் பூதப்பாண்டி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தோம். அவன் 9-A. நான் 9-B. வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சேர்ந்து தான் சாப்பிடுவோம்.... ஒன்றாகவே பள்ளிநேரம் முடிந்ததும் குறத்தியறை விலக்குவரை நடந்து செல்வோம்.அதன் பிறகு நான் கடுக்கரைக்குப் போவேன். அவன் மேல்கரை நோக்கிச் செல்வான்.
அடுத்த வருடம் தொடக்கத்தில் நாங்கள் இருவரும் பத்தாம் வகுப்பில் படிப்பதற்கான பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது நான் எதனையும் தேர்ந்தெடுக்காமல் இருந்து விட்டேன். கண்ணன் என்னிடம் சொன்னான்.” நான் பொறியியல் பாடம் எடுத்துப் படிக்க பேர் கொடுத்திருக்கேன். நீயும் பேர் கொடு. நாம் இருவருமே ஒரே வகுப்பில் இருந்து படிக்கலாம்; மேலும் நமக்கு உயிரியல் ,தாவரவியல் பாடங்கள் கிடையாது , சமூகவியல் பாடம் படிக்கணும் ஆனால் பரிட்சை எழுதினால் போதும் 35 மார்க்குக்கு குறைவாக எடுத்தாலும் போதும் ” என்றான்.
நானும் அவன் சொன்னான் என்பதற்காகவே பேர் கொடுத்தேன். விதி வேறுவிதமாக செயல் பட்டது. மார்க்கு அடிப்படையில் தேர்வு செய்ததில் எனக்கு நான் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது. அவனுக்கு கிடைக்கவில்லை.மிகவும் மனம் நொந்து போயிற்று. நான் எனது வகுப்பு ஆசிரியரிடம் போய் எனக்கு பொதுப் பிரிவுப் பாடமே போதும் என்று முறையிட்டேன். பலனில்லை....... நானும் அவனும் வெவ்வேறு வகுப்புகளில் எங்கள் படிப்பைத் தொடர்ந்தோம்
நான் Composite mathematics ,General Engineering,Engineering Science பாடங்கள் படித்தேன்.கணித பாடம் எடுத்த ஆசிரியர் அல்போன்ஸ்ராஜ்.,General Engineering பாடம் சென்னையில் இருந்து சந்தானம் என்பவர் எடுத்தார் . அவர் பாலிடெக்னிக் படித்தவர் .
பத்தாம் வகுப்பு முடிந்து 11 -ஆம் வகுப்பு ........
கணிதப் பாடம் எடுத்தவர் புதியதாக வந்த தலைமை ஆசிரியர் மாதவ ஐயர் . மிக நன்றாக பாடம் நடத்தினார். அவர் என்னிடம் வகுப்பில் x axis ,y axis பற்றி சொல்லி ஏதோ ஒரு கேள்வி கேட்டார் . தெரியாது என்றதும் அவருக்கு மிகவும் கோபம் வந்து என்னைப் பார்த்து, “ நாணம் இல்லையாடா உனக்கு ? பத்தாம் கிளாசில படிச்சது தெரியாம நிக்கிறியே.......”
“போன வருஷம் படிக்கல்ல ?......” நானும் சக மாணவர்களும் சேர்ந்து சொன்னோம்
யார் உங்களுக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு எடுத்தா?.....
அல்போன்ஸ்ராஜ் சார்.......
அடுத்த நாள் மாலை 4 மணிக்கு Extra class. நடக்கும். க்ராப் நோட்டு வாங்கிற்று வாங்க என சொன்னார். மறுநாள் மாலை 4 மணிக்கு வகுப்பில் காத்திருந்தோம்.
சார் வந்தார்..... வந்தவர் அல்போன்ஸ் சார்......
சிரித்துக் கொண்டே பாடம் நடத்தினார்......... ஒரு வாரம் வகுப்பு.......
வருட முடிவில் Group போட்டோ,Social Day ....... பிரியா விடை பெற்று எல்லோரும் Autograph வாங்கினோம்......
எங்கள் வகுப்பாசிரியர் விடுமுறையில் அல்லது மாற்றலாகிச் சென்றாரா...? தெரியாது..... புதிய ஒருவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்....மாணவர்கள் அவரிடம் ஆட்டொகிராப் வாங்க போனோம்.
அவர்,” என்னடா...... என்னை உங்களுக்குத் தெரியாதே!.........”
அமைதியாய் நின்றோம்.
என்னமோ எழுதி கையெழுத்துப் போட்டார்.....
என் முறை வந்ததும் அவரிடம் கொடுத்தேன்.
“என்னடே...... நீ ...... வளரவே இல்ல.... சின்ன பையனா இருக்க..... உனக்கெல்லாம் Engineering College -ல இடம் கிடைக்காதே... உனக்கு எந்த ஊரு...?”
”கடுக்கரை” நான் சொன்னேன்.
சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்த அவர் ,” ஆறுமுகம் பிள்ளை அண்ணாச்சியின் மகனா....!” என்றார்.
நல்ல படிக்கணும். என் ஆட்டோக்ராபில் எழுதி என்னிடம் தந்தார்.
”உயரமாக வளர்.... உயர்ந்த எண்ணம் கொள்” .........எழுதியவர் பழனிவேல் சார்.
பள்ளிப் பருவம்......... விடை பெற்றுச் சென்றது......

Wednesday, January 30, 2013
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே…
கடுக்கரையில் உயர்நிலைப்பள்ளி
இல்லாத அந்த வருடத்தில் அதாவது 1960-இல் பூதப்பாண்டி சர்.சி.பி.ராமசாமிமுதலியார் உயர்நிலைப்
பள்ளிக்கூடத்தில் 9-ஆம் வகுப்பில் அவன் சேர்ந்து படித்தான். வசதி இருந்தும் நடந்து
தான் பள்ளிக்கூடத்துக்கு செல்வது தான் அவனுக்கும் பிடித்திருந்தது.
அவனுடன் ஆனந்தம்பிள்ளை,
வேலப்பன்,அய்யப்பன் மற்றும் பலர் தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்வார்கள்.
இரண்டு வழிகள் உண்டு. ஒன்று குறத்தியறை, தெரிசனம்கோப்பு வழியாக பஸ்களெல்லாம் செல்லும்
சாலை. மற்றொன்று கடுக்கரை ஆற்றங்கரை வழித்தடம். தெள்ளாந்தி வழியாக சென்று சானல் அருகே
செல்லும் பதைவழியாகப் போய் வயல் வரப்பில் வரிசையாக நடந்து செல்வது அனைவருக்குமே ஆனந்தமாய்
இருக்கும்.மாலையிலும் நடந்தே பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வருவார்கள்.
வகுப்பாசிரியர்
சமூகப்பாடம் நடத்தி அவ்வப்போது வகுப்பில் டெஸ்ட் எழுதச் சொல்வார். ஒரு தடவை அதிக மார்க்கு (மதிப்பெண்) எடுத்தவர்களுக்கு
ருபாய் பத்து பரிசளிப்பதாகச் சொன்னார். டெஸ்டும் நடந்தது. அவன் தான் அதிக மார்க்கு
எடுத்தான். மார்க்கு எடுத்த விவரம் ஆசிரியர் சொல்வதற்கு முன்னரே மாணவர்கள் அனைவருக்கும்
தெரிந்து விட்டது.
அவனுடன் படித்தவர்களில்
வசதி குறைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில்
சாம்ராஜும் ஒருவன். தனக்கு கிடைத்த பரிசுத்தொகயை சாம்ராஜுக்கு கொடுத்தால் சாம்ராஜுக்கு
பிரயொஜனமாக இருக்குமே என்ற எண்ணத்தில் தனது சக நண்பர்களிடம் அதைப்பற்றிக் கூறினான்.
ஒருவன் கூட அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
வகுப்புக்கு ஆசிரியர்
வந்தார்…. விடைத்தாளை அனைவருக்கும் கொடுத்தார்.
“ யாரப்பா கூடுதல்
மார்க்கு எடுத்தது ?”
அவன் எழுந்து நின்றான்.
“ உன் பேரென்ன?” ஆசிரியர் கேட்டார்.
அவன் தன் பெயரைச்
சொன்னான்.
ஆசிரியர் பரிசுத்தொகையை
அவனுக்கு கொடுக்க அவர் அமர்ந்திருக்கும் மேசை பக்கம் வரும்படி அழைத்தார்.
மிகவும் மகிழ்வுடன்
எழுந்து நின்று, “சார்….. எனக்குத் தரவேண்டிய
ருபாயை சாம்ராஜுக்கு கொடுங்க சார்…. அவன் மிகவும் பாவம்…” என்று சொன்னான்.
அவன் சொன்னதும்
ஆசிரியர் முகம் சிவப்பாய் மாறியது…… கோபக் குரல் ஆவேசமாய் பாய்ந்தது……
அவனைப் பாத்து
,” நீ என்னடே…. பெரிய பணக்காரன்….இந்தக்காசு உனக்குப் பிச்சக்காசு…. மிகவும் அதிகமாகவே
கோபப்பட்டு பேசினார்.
அவனுக்கு ஒன்றுமே
புரியவில்லை….. தன்னை எதற்காக திட்டுகிறார்….. மாணவர்கள் மத்தியில் கூனிக் குறுகிப்
போனான்.
நல்லது செய்ய நினைத்த
தனக்கு வந்த நிலைகண்டு வருந்தினான்…. கண்களில் நீர்….
மறுநாள் வகுப்பாசிரியர்
வந்தார். வகுப்பில் இருந்த அவன் அமைதியாய் நொந்த உள்ளத்தோடு முந்தினநாள் ஏற்பட்ட மனவலி
மாறாமல் ஒரு அமைதியற்ற நிலையில் அமர்ந்திருந்தான்.
ஆசிரியர் அவனை
பெயர் சொல்லி அருகே அழைத்தார். பரிசுத்தொகையைக் கொடுத்தார். சாம்ராஜையும் அழைத்தார்.
அவனை அந்தப் பணத்தை சாம்ராஜிடமே கொடுக்கச் சொன்னார்.
அவன் செய்த தப்பு
என்னவென்று புரிந்ததால் ஆசிரியர் மீதுள்ள மதிப்பு மேலும் கூடியது.
காலச்சக்கரம் சுழன்றது…….
கல்லூரியில் ஆசிரியராய் பணியில் இருந்தபோது பொன்னப்பநாடார் காலனியில் வீடெல்லாம் கட்டி
வசித்து வந்தான். ஒருநாள் அதே காலனியில் தற்செயலாக ஒருவரைப் பார்த்தான். ஹோலி க்ராஸ்
கல்லூரிச் சாலை கடைவீதியில் உள்ள ஒருவீட்டில் இருந்து வெளியே வந்த அவர் அவன் பயணம்
செய்த பஸ்ஸில் ஏறினார்.அவன் எழுந்து அவருக்கு இடம் கொடுத்தான். அவர் அவனை அறியவில்லை.
அவனே அவரிடன் தான் பூதப்பாண்டி பள்ளியில் படித்த உங்கள் மாணவன் என அறிமுகப்படுத்தினான்.
உன் பேரென்ன ?
அவர் கேட்டார்.
”பொன்னப்பன்”.
அவன் சொன்னான்.
’அப்பம் நீ கடுக்கரை
ஆறுமுகம்பிள்ளை அண்ணாச்சியின் மகன்லா…!’ என்றார்.
ஓய்வு பெற்ற வயதிலும்
மிகக் கனிவாகப் பேசியது மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
அந்த ஆசிரியர்
இன்றில்லை.
அவர் திரு. மரியேந்திரன்.
Monday, January 21, 2013
நான் எழுதிய பதில் கடிதம்.......
அன்பு மிகு அண்ணன்,
நலம்.நலம் அறிந்து
மிக்க மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்
கடிதம்(9-11-12) கிடைத்தது. எதிர் பாராமல்
உங்கள் மதிப்பு மிகு வரிகள் பாராட்டும் வரிகளாகக் கண்ணில் பட்டதும் நான் அடைந்த உற்சாகத்துக்கு
அளவே இல்லை. மேலும் நன்றாக எதையாவது எழுத வேண்டும்; நீங்கள் பார்த்துப் படித்துப் புகழும்படியாக
எழுதுவது அமைய வேண்டும்; ஒரு பேராசையும் உத்வேகமும் மனதில் எழுகின்றன.
மலர்க் குழுவில்
நானும் ஒருவன் – இது நான் பெற்ற வரம்.
என் கட்டுரை மலரில்
இடம் பெறுவதற்குக் காரணம் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. பெ.ஆறுமுகம்பிள்ளை.
எல்லாப் புகழும்
எம் தலைவருக்கே.
‘எங்கள் உரை ‘ படித்தீர்களா ? நன்றாக இருந்ததா ?
அதை எழுதியதும் நான் என்பதால் அதற்கு எத்தனை மதிப்பெண் என்று அறிய விரும்பும் மாணவன்
போல் கேட்கிறேன்.
ஒவ்வொரு தடவையும்
தந்தை போல் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. கரம்
கூப்பி வணங்குகிறேன்.
வீட்டில் அனைவரையும்
அன்பாய் விசாரித்து எழுதியதையும் கூற வேண்டுகிறேன்.
இப்படிக்கு
தம்பி தங்கப்பன்.
நாகர்கோவில்
15-12-2012
Sunday, January 6, 2013
கருத்தரங்கம் ஒன்றில் பேசியது-----2
ஒன்றின்
நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
இலக்கியம்,
புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் கூத்துக்கள் பெற்றுக் கொண்டது
போல், பழைய நாடகங்களில் அல்லது
கூத்துக்களில் இருந்து இன்றைய இலக்கியம் பல கூறுகளை எடுத்துக் கொண்டதும் உண்டு
உதாரணமாக
சிறிய காப்பியமான பாரதியின் பாஞ்சாலி சபதம் . இது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக
இருந்த “திரவுபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்த காப்பியமாகும்
.
.
தமிழில் நாடக நூல்
இல்லை என்கிற குறையும் பின்னாட்களில் மனோன்மணியத்தின் வரவால் நீங்கிற்று. (ஆனாலும்
இது ஒரு தழுவல் நாடகம் என்கிற குறையும் உண்டு.)
இவ்வாறு, கூத்து அல்லது
நாடகம் என்ற நிகழ்த்துக்கலை, தமிழ்
இலக்கியத்தோடு நெருக்கமாகவே உள்ளது.
என்
உரையை முடிக்குமுன் நான் சமீபத்தில்
படித்த ஒரு தகவல்.
நீலகிரி மாவட்ட வனப்பிரதேசத்தில் வாழும் கோத்தர்களின் நடனங்கள் ஆதிகாலத்தவை..
பக்தியை முன்னிறித்தி ஏராளமான வாய்மொழிப்பாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன. நாதஸ்வர வடிவிலான
கட்டைக் குழலான கொல் என்னும் ஊது
கருவி, கொப் எனும் இசைக்கருவி, தபக், பர்,
குணர் ,…. போன்ற தோல் கருவிகள், மூலம் இசைத்து பாடுகிறர்கள். கொப் என்னும்
இசைக்கருவி விலங்குகளின் கொம்புகளால் ஆனது. இப்போது செம்பால் செய்யப்படுகிறது.
இவர்களில் ஆண்கள் ஆடும் ஆட்டத்தின் பெயர் கண்மு ஆட்டு. பெண்கள் ஆடுவது பெமு ஆட்டு. இன்றும் தினை விதைப்புத் திருவிழா,
அறுவடைத்திருவிழா, மாடுகளுக்கு உப்பு புகட்டும் திருவிழா, கில்லிப் பண்டிகை என
விழாக்கள் கொண்டாடி தங்களுடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
பொம்மலாட்டக்
கலயைப் போற்றும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 21-ஆம் தேதி உலக
பொம்மலாட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
நமது
பாரம்பரியக் கலைகள் அழியாமல் காத்திட, தமிழ் நாட்டு உயர்கல்வித்துறை பாடுபட்டுக்
கொண்டிருக்கிறது.
தஞ்சைத்
தமிழ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நாடகத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. பாளையாங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார்
வழக்காற்றியல் பட்ட மேற்படிப்புத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இது போல் அனைத்துக் கல்லூரிகளிலும்
தமிழ்த்துறையில் கூத்து மற்றும் நாடகத்துறை, தமிழ்ப்பாடத்தின் பகுதியாக வரவேண்டும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும்
இருக்க வேண்டும்.
இந்தக்
கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அனைத்தும் நிகழ்த்துக்கலைகளுக்கும் தமிழுக்கும்
பெருமை சேர்க்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.
நாடகத்தமிழ் வளம் பெற தரம் வாய்ந்த
படைப்புகளை உருவாக்கிட உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நான்
பேசிய தமிழில் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.
திறம்பட
மிகச் சிறப்பாக கருத்தரங்கத்தை நடத்திய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் Dr.
சாந்தாள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் Dr.தெ.வே.ஜெகதீசன் ,மற்றும்
தமிழ்த் துறைப்பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்து
மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
வாய்ப்பளித்தமைக்கு
என் நன்றியைப் பதிவு செய்து விடை பெறுகிறேன்.
நன்றி…..
வணக்கம்…..
கருத்தரங்கம் ஒன்றில் பேசியது-----1
புது ஆண்டு 2013.-ல் 3-1-13 முதல் 5-1-13 வரை தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை ஒரு கருத்தரங்கத்தினை மிக நேர்த்தியாக நடத்தி முடித்தது. ஒருங்கிணைப்பாளர் திரு.தெ.வே.ஜகதீசன் எனை அன்போடு அழைத்ததை ஏற்று இறுதி நாள் நிகழ்வில் நானும் பேசினேன்.
”பழந்தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்துக்கலைகளும் அவற்றின் நீட்சியும்” என்பது தான் கருத்தரங்கத்தின் தலைப்பு.
நான் தயாரித்து வைத்திருந்த அனைத்தும் முதல் நிகழ்வில் கிட்டத்திட்ட எல்லா பேச்சாளர்களும் பேசிவிட்டனர். எதனைப் பேசுவது என்ற கலக்கம் என் மனதில் எழுந்தது. ஆனாலும் உலக வலைத்தளம் கைகொடுத்தது. தினகரன் தீபாவளி மலரும் உதவிற்று.
நான் பேசியது:-
அனைவருக்கும் என் அன்பான மாலை நேரத்து வணக்கம்.
தனித்துவம் வாய்ந்த இந்தத்
தமிழ் கருத்தரங்கத்தில் கழிந்த மூன்று நாட்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ,ஒருவர்
அல்லது பலர் அரங்கமேடையில் நிகழ்த்தும் பொம்மலாட்டம், நாடகம் ,கூத்து, நடனம்,வில்லுப்பாட்டு போன்ற நாட்டார் கலைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை பலரும் அழகு தமிழில் வாசிக்கக் கேட்டிருப்பீர்கள்.
மனிதன்
தனது துன்பச் சூழலில் இருந்து விடுபட, அதில் இருந்து மீள்வதற்கு கலைகளின் துணையை நாடுவது
இயல்பாக இருந்த காரணத்தால் நிகழ்த்துக்கலைகள் உருவாயின.
கால
மாற்றத்தால் நம் உணவு,உடை மாறின. உழைப்பவர்கள் போற்றிய நிகழ்த்துக் கலைகளும் மாறிற்று
. பகுத்தறிவின் பேரால் பல கலைகள் புறக்கணிக்கப்பட்டன. பாரம்பரிய கலைகள் பல இன்றைய தொழில் நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்கு பலியாயின..
நமது
குமரி மாவட்டத்தில் இருந்த அறுபத்தி மூன்று வகையான நிகழ்த்துக் கலைகளில் பதினொரு கலைகள் மட்டுமே
எஞ்சியிருக்கின்றன என்பதை நாட்டார் வழக்காற்றியல்
அறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
நாடகத்தின்
முதல் நிலை தெருக்கூத்து..கோவில் திருவிழாக்களிலும் தெருவில் முச்சந்தியை மேடையாக்கி
கூத்து மூலம் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தார்கள். கூத்து என்பதன் வளர்ச்சியே
நாடகம் என்று மாறியது. நாடகத்திற்கு பண்ணை
என்ற ஒரு பெயரும் உண்டு.
நாடு + அகம் என்பதே நாடகம். நாடு என்பது மக்கள்.
அகம் என்பது மக்களின் உள்ளங்கள். மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவமே நாடகம்.
ஒரு
நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம்,வருங்காலம்- மூன்றையும் தன்னகத்தே காட்டுவது நாடகம்.
நாட்டு
நடப்பை , நாட்டின் கலாச்சாரத்தினை,நாகரீகத்தை நாடகம் பார்த்து தான் மக்களால் அறிய முடிந்தது.,
கூத்தைப் பின்னுக்குத் தள்ளிய நாடகமும்
இன்று
காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பொம்மலாட்டத்தின் இன்னொரு பரிணாமம் என்று சொல்லப்படும்
திரைப்படம் வந்தது. கிராமங்களில் நாடகம் போடுவது குறைந்து போய் பின் அறவே நின்று போயிற்று
ஒன்றின்
நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
தொடரும்
Subscribe to:
Posts (Atom)