திங்கள்
23 may 2011
நீங்கள திங்களின்று இனிய நாளாக பொழுதினைக் கழித்திடல் வேண்டும் என விரும்புகிறேன்.அன்பான காலைவணக்கம் உங்களுக்கும் உறவினர் அனைவருக்கும்
செவ்வாய்
24 may 2011
வாயினால் வாழ்த்துவதை விட பதிவு செய்யும் வாழ்த்துக்கு வாழ்னாள் அதிகம். செவ்வாய் இன்று கையால் பதிவு செய்திடும் காலை வணக்கம். திவ்யமான வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
புதன்
25May 2011
புத்தம் புதிய புதன் காலையில் புத்துணர்ச்சியோடு தத்தம் பணிதனை துவங்கிட வாழ்த்துவதுடன் அன்பான காலை வணக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்
வியாழன்
26 May 2011
இரவெல்லாம் கண்துஞ்சாமல் வானில் மின்னிய விண்மீன்கள் தூங்கும் நேரம் நெருங்குது. விடியலை நோக்கி பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரமது. அது தானே காலைக்கதிரவன் கண்விழித்து எழுந்திடும் நேரம். வியாழன் இன்று நாள் இனிதாக விழங்கிட வாழ்த்துவதுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் காலை வணக்கத்தினை
வெள்ளி
27 May 2011
பள்ளம் தனை நோக்கி பாய்ந்தோடும் வெள்ளம் தானே வெள்ளந்தியாக வாழ்ந்திடும் கானக மக்கள் பரிகிடும் பானகமான மினரல் வாட்டர்..உள்ளம் துள்ளி விளையாடும் வெள்ளிகாலையில் உள்ளன்போடு என் காலை வணக்கத்தை பதிவு செய்கிறேன்…
சனி
28 May 2011
கனிவான வார்த்தைகள் மனதினை ஈரமாய் நனைக்கும்போது நெருப்பாய் சுட்டிடும் கடினமான சொற்களை தவிர்த்து விடுதல் தானே நலம் பயப்பதாய் இருக்கும்....சனிக்கிழமை இன்று இனிதாய் பவனிக்கட்டும்....காலை வணக்கம்
ஞாயிறு
29 May 2011
ஞாயிறின் அதிக ஆதிக்கம் அதுதான் அக்னியின் வீச்சு இன்றோடு போச்சு என்ற பேச்சு நிலவுகிறது .... எழுஞாயிறு நம்மைத் தழுவும் நேரம் நெருங்குது .இப்போ மணி காலை ஐந்தரை. நித்திரை கலையும் காலைநேரம். எந்தன் அன்பான வணக்கம் உந்தனுக்கு.
AGNI STAR
by Thankappan Arumugaperumal on Sunday, May 29, 2011 at 7:34am
விடை கொடுப்போம் அக்னி நட்சத்திரத்துக்கு
கேலண்டரில் இன்றைய தேதியில் அக்னிநட்சத்திர தோஷ நிவர்த்தி என்றிருந்தது........காலையில் வழக்கம்போல் நடப்பதற்கு வெளியே போனேன்.... வானில் மேகத்தை கிழித்துக் கொண்டு சூரியன் தன் கதிர்களை வீசமுயன்று கொண்டிருக்கிறது.......போச்சு கேலண்டரில் போட்டதெல்லாம் என எண்ணிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்........என்ன ஆச்சரியம் . என் மீது பன்னீர் தொளிப்பது போன்று இருந்தது என வானத்தைப் பார்த்தேன். கருமேகக்கூட்டம்...... மழை தூறல்.......ஆஹா ! எத்தனை துல்லியமாக கேலண்டரில்....... நனைந்து கொண்டே போகும்போது எனது மொபைல் ரேடியோ “ அக்னி நட்சத்திர வெயில் இன்றோடு முடிவடைகிறது” ........Good bye to AGNI STAR
என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்
Sunday, May 29, 2011
Thursday, May 26, 2011
Thursday, May 19, 2011
எந்தன் கண்ணில் கட்டி ஒன்று வந்ததே
கண்ணில் என்ன வீக்கம்...கக்கட்டியா? ஒரு ஓட்டுத்
துண்டை உரைத்துப்போடு சரியாயிடும். போட்டேன்.
ஒட்டுத்துண்டுதான் கரைந்து காணாமல் போனது.
சிறு செங்கல் துண்டு ஒன்றை கண்ணில் சுற்றிக்
கிணற்றில் போடச்சொன்னார்கள். அந்தத் துண்டு
கரைவது போல் கட்டிக் கரைந்துவிடும். .செங்கல்துண்டு
கிடைத்தது. கிணறு.....கஷ்டப்பட்டு கொண்டு போட்டேன்.
கிணற்றில் போட்ட கல் கரைந்ததா....தெரியாது. ஆனால்
கண்னில் உள்ள கட்டி கரையவே இல்லை.
முன்னதை விடப் பெரியதாய் மாறி இருந்தது. +
வலது கை விரலை இடது உள்ளங்கையில் வைத்து
தேய்த்து சூடானதும் விரலில் கட்டியின் மேல்
வைத்தால் கட்டி போய்விடும்.....காலையில்
துப்பினியை தேய்த்தால் தேய்ந்து விடும்....
நாட்டு மருத்துவர் எண்ணெய் தந்து தலையில்
தேய்த்து குளிக்கச் சொன்னார். எண்ணைய் தீர்ந்தது
ஆனால் கட்டி ஆணவத்துடன் அப்படியே இருந்தது.
எனக்கு இப்போது கட்டியை பிடித்துப்போயிற்று...
Extra fitting ஒன்று இருந்து விட்டுப் போகட்டுமே
என்ற மன நிலை... நாட்கள் நகர்ந்தன்.....
கண்ணில் கண்ணாடி போடுவதற்காக என் மகன்,ஏப்ரில் 12
செவ்வாயன்று கண்மருத்துவ மனைக்குப் போகும் போது
காரில் எல்லோரும் போனோம். பெயரைப் பதிவு செய்யும்போது
என்னைக் கேட்காமலே என் பெயரையும் 50/-ருபாய் கொடுத்து
பதிவு செய்து அட்டையை என்னிடம் தந்தான் என் மகன்.
ஒரு வித எரிச்சலுடன் இருந்த என்னை அழைத்துப் போனாள் வெண்ணிற ஆடை
தரித்த பணிப்பெண்....Vision test , Pressure test, blood test எல்லா சோதனைகளும் முடிந்தன. வெறும் கட்டிதான். கீறி எடுத்து விடலாம் என்றார்கள்.
மருத்துவரைச் சந்திக்கு முன் என் முன்னால் சுவரில் கண்ணில்
இருக்கும் கட்டியின் படம் கேன்சர் கட்டி என்ற பெயருடன்
என்னை பயமுறுத்திக்கொண்டே இருந்தது.
என் மனம் அதற்கு ஒப்பாமல் கட்டியுடனே திரும்பினேன்.....
ஒரு மாத காலத்தில் எனக்கு கிடைத்த இலவச ஆலோசனைகள்
என் மனதை மிகவும் நோகடித்தது. என் பேரனுக்கும் அது
விளையாட்டுப் பொருளானது. மனதை திடப்படுத்தினேன்.
நாள் குறித்தேன். மே மாதம் 16 2011. திங்கள் காலையில்
ராமு கார் ஓட்ட நெல்லை பயணம் 10.30 மணிக்கு..போகும்
முன் என் அன்னை தந்தை படத்தை வண்ங்கினேன்.....
“என்னா பயம் பயப்படுகிறீர்கள்.... நான் இரண்டு தடவை
ஆப்பிரேசன் பண்னியிருக்கிறேன்......” என் மனைவி
“ உனக்கு பண்ணும்போது நான் பயந்தது எனக்கு மாத்திரம்
தானே தெரியும்” நினைத்துக்கொண்டேன்....மணி
12.15க்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டினேன்.இரண்டரை
மணிக்கு வரச்சொன்னார்கள்.ஒரு ஹோட்டலுக்குப் போனோம்
அங்கே எங்களை வரவேற்றது முதல் அமைச்சர் பதவிப் பிரம்மாணம் எடுக்கும் குரல்.
சரியாக 3.45 என் கண்ணில் ஒரு திரவத்தை சொட்டு சொட்டாக
விட்டார்கள்.மேசையில் ஏறிப் படுத்தேன். என் பக்கத்தில் மிகவும்
அதிக பிரகாசமுள்ள ஒளி என் கண்ணில் படும்படி ஒரு லைட் ஸ்டேண்ட் வைக்கப்பட்டது. மருத்துவர் அருகில் வந்தாள்...
“இப்போ ஒரு ஊசிபோடுவேன். லைட்டா வலி இருக்கும்...
அதன் பிறகு வலி ஒன்றும் இருக்காது.சரியா?.....”
’ம்ம் ‘ என்றேன்
ஊசி போடும் போது இல்லாத வலி, எடுக்கும்போது
இருந்தது .கண்இமையில் இருந்த கட்டிக்கு காரணமாய்
இருந்த பகுதியை அகற்றியதை உணர்ந்தேன். வலி இல்லை.
“ எல்லாத்தையும் எடுத்தாச்சு....சரியா ?”
நான் THANKS என்றேன். கக்கட்டி இருந்த இடது கண்ணை
மூடி கட்டுப் போட்டு விட்டதால் சற்று தடுமாறி வெளியே
வந்தேன். ஒற்றைக் கண்ணுடன் வீடு வந்து சேர்ந்தேன்...
காலையில் மருத்துவமனையில் சென்று எல்லாம் முடிந்து
வெளியே வரும்வரை பணியில் இருந்த பெண்கள் மிகவும்
அன்பாய் செய்த உதவி, செய்யும் தொழிலில் உள்ள ஆர்வம்,
நேர்மை போற்றுதர்க்குரியது. மிகவும் பாதுகாப்பாக இருந்ததையும் உணர்ந்தேன்.
நான் போனது அரவிந்த் கண் மருத்துவமனை
Wednesday, May 11, 2011
Tuesday, May 10, 2011
விவாதம்....
by A Ponnappa Pillai on Tuesday, February 1, 2011 at 3:18pm.மனதில் தோன்றியது
முகநூலில் அரசியல் விவாதம் சில கண்டேன். என் மனதில் தோன்றியதை பதிவு செய்ய விரும்பினதால் .........................................
நாகரீகமான வார்த்தைகளைப் புறம் தள்ளி KEY BOARD
கீயே உருகிடும் கடும் சுடு சொற்களை உபயோகித்திடும்போது
வாதம் தடுமாறித் தடம் மாறி இடம் மாறிப் போகுது
உருவம் தெரியாத யாரோ ஒரு முகனூல் நண்பரால்
உருவம் தெரிந்த நண்பர் ஒருவரை கடுமையான
வரிகளால் சுடும்போது வேதனை தான் மிஞ்சுகிறது
இருப்பினும் நம் நண்பரின் பொறுப்பான பதில் வரிகள்
பொன்னான வரிகளாய் மின்னிடு்ம்போது மனம் இதமாகிறது
“வன் சொற்களும் வேணடாம்,வரம்பும் மீற வேண்டாம்;
யாகாவாராயினும் ‘கை’ காக்க” என்ற சுயகட்டுப்பாடுடன்
பதிவு செய்யப்பட்ட மரபும் மீ்றா மின்னிய வரியின் உரிமயாளரை
உவகையுடன் உள்ளன்போடு பாராட்டுகிறேன்
கருத்துக்கள் உருவாகவேண்டும்
கருவிலேயே கலைத்து விடவேண்டாம.
பயனில்லா வரிகளை புறம் தள்ளிடல் வேண்டும்.
நேரடியான விமர்சனமும் வேண்டாமே...............

எனது கணித ஆசிரியர்
அறுபத்துஏழில் என்னைக் கவர்ந்த என் ஆசிரியர்
by A Ponnappa Pillai on Friday, January 21, 2011 at 10:34am.
Before 44 years in the month of March , we were in the class room ,
our profeesor (best teacher ) entered and began to teach and
after some minutes he told that his mind was in his house and
he was unable to continue..... .He left the class room.
we did not know the reason behind. In the evening,
we heard the death of his daughter. we all went to his house
and saw him weeping. next day we attended the funeral.
the professor came nearer to us and asked us to put sand in the pit.
He told us," DON'T WORRY... I will come to the college tomorrow onwards and i will finish the syllabbus". As he said , he came and began teaching. He asked us ," do you watch a sentence in the entrance of the graveyard ". we all kept mum.....The sentence is :- “ இன்று அவர் ,நாளை நீ”.....
Then he told : " God is very cruel .He might have taken me instead of my daughter".
I never meet such a man in my life.He is a model also I did not meet him after 1967அவர் இன்றும் வாழ்கிறார் என்னில்.........
To me ,he is FIRST in the list of teachers whom I love.(He was HOD of MATHEMATICS)

எனைப்பிரிந்த மொபைல்
மே மாதம் 9 திங்கள் நாள் திருமண மண்டபத்தில் நான்.
கூட்டத்தில் இருந்தாலும் தனியே ஒரே சிந்தனையில்.....
ப்ள்ஸ் டூ ரிச்ல்ட் வருமே .என்னிடம் என்னை மதித்து ஆசிர்வாதம்
வாங்கி எக்ஸாம் எழுதிய சுப்பிரமணி எத்தனை மார்க்கு என்று இன்னும்
சற்று நேரத்தில் போண் பண்ணுவான் ......அதிக எதிர்பார்ப்பில் நான்.
அங்கிருந்த கிருஷ்ணன் என்னைப்பார்த்து என்னருகினில் வந்து ,”சார், என் மகள்
பாசாயிட்டா..”
போண் இன்னமும் வரவில்லயே.....ஏன்...எதிர்பார்த்த மார்க்கு இல்லையோ
மணி பத்தும் தாண்டி விட்டதே....எனக்கோ கோபம்......
நாமே பேசலாமே.... என் பாக்கெட்டில் கைவைத்தேன்....பகீர் என்றிருந்தது.!
அங்கே போண் இல்லை....குப்பென்று வியர்வை... வெயில் கொடுமையும் கூட
என் உறவின நண்பர் தன் போணில் என் நம்பரை அழைத்தார்....வெகு தொலைவில்
ஒருவர் போணை எடுத்து பேசுகிறார்....அவரிடம் போய் கேட்பது சரியில்லை.....
யாரோ அழைத்தார்கள் சாப்பிட ..... சாப்பிட்டேன்....
என் மகன், காரிலும் போண் இல்லை
என்று கூறினான்.அஞ்சு வருடத்திற்கு முன்னால் வாங்கிய ராசியான போண் போச்சே என் மனம் என்னை ஞாபகமூட்டியது.....
சிம் நம்பரை ப்ளாக் பண்ணி புது சிம் வாங்கணும்.... சி்ந்தனை படபட்த்துக்கொண்டே இருந்தது.
காரில் என் அமைதியினால் எல்லோருக்குமே மன இறுக்கம்......
வீட்டின் கதவை என் மகன் திறந்தான்.... நாங்கள் உள்ளே போனதும்
“நமசிவாய..... நமசிவாய.....ஓம் நமசிவாய...”
ஆங்....மேசையின் மீது மின்னிக்கொண்டும் ஒலித்துக்கொண்டும்
என்னை ஏழனமாக பார்த்துக் கொண்டிருந்த்தது......என் மொபைல்.

இன்று தேர்தல் நாள்........2010.4.13
இன்று பங்குனி நாளை விசு
கனி காண கனி வாங்க
சந்தைக்கு போனேன் அழகான பொட்டி
பொட்டி நிறைய கனிகள்தான் . ஆனால்
அத்தனையும் சொத்தை .கேட்டேன் நல்லது
ஒன்றினை .இன்றில்லை என்றான் ......
எனக்கு ஒரே மனக் குழப்பம், என்ன செய்ய என்று.
கனி ஒன்றாவது வேண்டுமே நாளைக்கு....
நானோ நொந்துபோய் எடுத்தேன் உள்ளதில்
நல்ல கனி ஒன்றினை ..கைவிரலில் ஏதோ
ஒன்று பட்டு வட்டமான வடு கருமைநிறத்தில்
சந்தையை விட்டு வெளியே வந்தேன் ...மொழி தெரியா
காவலர் கேட்டார் அடையாள அட்டையை ....
இல்லைஎன்று நான்சொல்ல அவன் எனை புல்லைப்போல்
பார்த்து கேவலப்படுத்தி விட்டு விட்டான்.
கனி எனைப் பார்த்து சிரித்தது ......பின் அந்தக்கனி
எனைக் கேட்டது "இன்று தேர்தல்... ஓட்டுப் போட
எத்தனை மணிக்கு போகப் போகிறாய் ?....கைவிரலில்
கருமை ......போனால் நீ உள்ளே ........அடையாள அட்டையும் இல்லை ..."
ஆஹா ! சொத்தைக் கனியா பேசுகிறது ....நான் கனியைப்பார்த்து,
"கனியே ! உன்னை தேர்ந்தெடுத்த என்னை காப்பாற்றி விட்டாய் "
நன்றி .....நன்றி .......
கனி மீண்டும் பெசியது,” என்னை தெரிந்து எடுத்தாய். நான் செய்த உதவி கூட
எந்திரத்தை அமுக்கி வாக்களிப்பாயே அவன் உனக்கு செய்யமாட்டான்”.
”இது 49 இல்லை........வேறொரு பெயர் வைக்கலாமே.........” கனி தான்
ஆம் சொத்தைக்கனிதான் பேசுகிறது......

Monday, May 9, 2011
என் முதல் மகனின் மகன்
இனிய என் பேரனே......
இன்று காலை மணி ௪.௨௯ (4 .29 )
இனிமையான நேரம். கைகள் கணினியை
இயக்கின .கூகிளில் கடிதங்களை பார்த்தேன் .
இன்பமாய் இருந்தது கண்களுக்கா ......
இல்லை காதுகளுக்கா.........
இரண்டுக்கும்தான் .இருப்பினும் அதிகமாக ஆனந்தப்பட்டது
இதயமே என் மூன்றாம் பேரனின் முதல்
இ-மெயில் எனக்கே எனக்கல்லவா .எங்கள்
இதயங்களை சோதித்து வந்தவனல்லவா நீ
இருவரல்ல ஒருவரே என்று வாழும் உன் தாய் தந்தைக்கு
இன்மகனாய் வந்த என் பேரன் நீயல்லவா .
இதை நீ படித்து பார்ப்பாய் ஒருநாள் .
இறை அருள் அறுபத்து நான்கு வயது தாத்தா எனக்கு
இருப்பின் நான் அன்றும் மகிழ்வேன்
இன்று போல்.
தாத்தா தங்கப்பன்
ஆச்சி சுப்பம்மாள்
௨௫-௧௨- ௨௦௧௦(25 -12 -2010 )

தாய் இரண்டு எனக்கு
அன்பு மகனே,
உனது தாத்தா நம்மை விட்டு போன நாள் 25-12-1981
25-12-2010 ........29 வருட்ங்கள் ஓடி விட்டன....
இன்று என் தந்தை நினைவுதினம்.
என் அப்பாவுக்காகவே படித்தேன்.
அதனால் தான் இன்றும் வாழ்கிறேன்.
அன்புச்சுரங்கமல்லவா......ஊர்மக்களுக்கு அணில் போல் உதவி செய்த பெரியவரல்லவா.....
அன்றும், இன்றும்....என்றும் எனக்குப் பெருமை அந்தப்
பெரியவரின் மகன் என்ற ஒன்று மட்டுமே.
உனக்கு ஒன்று தெரியுமா?.....
எனக்கு தாய் இருவர்.....!
என் தந்தையும் எனக்குத் தாயே.

Subscribe to:
Posts (Atom)