எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்ப வகுப்புகளான ப்ரைமரி SCHOOL-இல் 1 முதல் 4-ம் வகுப்பு வரை தமிழ் அல்லது மலையாளவகுப்பு வரைப் பயின்று 4-ஆம் வகுப்பில் தேர்வு எழுதி ஜெயித்த பிறகு படிக்க வேண்டிய வகுப்பை தமிழ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 5-ம் கிளாஸ் படிக்கணுமா அல்லது ENGLISH பள்ளிக்கூடத்தில் சேர்ந்து preparatory class படிக்கணுமா என தீர்மானிக்க வேண்டும். சில இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் preparatory class-இல் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.அதில் அதிக மார்க்குகள் எடுத்தால் தான் preparatory class admission கிடைக்கும்.
1938-39-இல்நடந்த நுழைவுத்தேர்வை 2-ஆம் வகுப்பில் பாஸான ஒரு மாணவரை,அதிக புத்திசாலி மாணவராக இருந்ததால் எழுத அனுமதித்தார்கள். அப்படி எழுதிய மாணவர் தான் அதிக மதிப்பெண் எடுத்தார்.அதிக மதிப்பெண் எடுத்த காரணத்தால் preparatory class-இல் படித்து தொடர்ந்து Ist form முதல் VI th formவரை படித்தார். III form ,VI form Examinations were government examinations.
VI th form தேர்வு எழுதும் போது age exemption வாங்கி எழுதி வெற்றி பெற்றார்.
அதாவது அந்த மாணவர் தமது 13-ஆம் வயதில் E.S.L.C தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின் கல்லூரியில் Intermediate வகுப்பில் சேர்ந்து படிக்க நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பம் போட்டார்.16 வயதினர் தான் கல்லூரியின் சேரமுடியும் என்ற விதியைக்காரணம் காட்டி அட்மிஸன் மறுக்கப்பட்டது.
1944-ல் பாசான பின் எங்கேயும் படிக்காமல் சும்மாவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது ஊரில் உள்ள ஒரு நூலகத்திற்கு தினமும் போய் தமிழ் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
காலம் இவருடைய இந்தக் கோலத்தைப் பார்த்தும் பார்க்காதது போல் நகர்ந்து கொண்டே இருந்தது.சுமார் எட்டு வருட காலம் உருண்டோடியது...
தான் இவ்வளவு நாள் சும்மாவே இருந்து விட்டோமே என்று மன உளச்சலுக்கு ஆளானார்.அவர் மிகவும் மனவேதனை யோடு இருந்ததை காலம் கருணையோடு பார்த்தது. அதனால் கல்லூரியும் மலர்ந்தது. ஆம்...... அவருக்காகவே நாகர்கோவிலில் ஒரு புதுக் கல்லூரி உருவானதோ என்று நினைக்கும்படியாக இந்துக்கல்லூரி 1952-இல் தொடங்கப்பட்டது. அந்த வருடமே கல்லூரியில் சேர்ந்தார்.1954-ல் Intermediate Examination எழுதி திருவிதாங்கூர் பலகலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக (First Rank ) வெற்றி பெற்றார்.
திருவனந்தபுரத்தில் B.A(Horns) படித்து முடித்தார்.1957-ஆம் ஆண்டு தான் படித்த இந்துக்கல்லூரியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.
அவர் யாராக இருக்க முடியும் ?.
வேலப்ப சார் தானே?
ReplyDelete