Tuesday, February 26, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்......2


  • ஒருவர் அவர் அடைய வேண்டிய இலட்சியத்தை எப்போதுமே அவர் முன்னே வைத்திருப்பாரேயெனில், அவருடைய பார்வையில் மாஸ்டர் மட்டுமே லயித்திருப்பார்; ஏனெனில் மாஸ்டரே சகஜ மார்க்கத்தின் உண்மையான இலட்சியம்.
  • ஒரே பிராணஹுதியாலேயே ஒருவரின் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
  • நம் மனதிலும் உணர்விலும் மாஸ்டர் இருந்தால் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றியடையும்.
  • நிதானம், சமநிலை இரண்டையும் காப்பாற்றுபவர்களால் மட்டுமே கடவுளை உணர முடியும்.
  • ஆன்மீகக் கோவிலைக் கட்டுவதற்கு முக்கியமாக நமக்கு உதவிடும் இரண்டு கருவிகள் சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும் ஆகும்; அன்பு என்பது அதன் அஸ்திவாரம்.
  • சுத்திகருப்பும் தியானமும் நம் பரிணாம வளர்ச்சிதனை எட்டுவதற்கு பெரிதும் துணை புரிகின்றன.
  • நீ உண்மையைப் பேசும் விதத்தில் அன்பு தோன்றுகிறது.
  • ஒழுங்கு முறையின்றி அன்பு இயங்கிட முடியாது.
  • ஒழுக்கம் என்பது அந்தந்த தருணங்களுக்கு ஏற்ப ஒத்திசைந்து செல்வது ஆகும்.
  • அன்பில்லா ஆச்சார நெறிகள் அனைத்தும் ஏமாற்று வித்தையே.
  • மாஸ்டரை நினைவு கொள்ள முயல்வதன்
    மூலமும், அடைந்த நினைவை நிலையாக தக்க வைத்துக் கொள்வதன் மூலமும் அவர் மீதான அன்பை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
  • இப்போது எதனைச் செய்ய வேண்டுமோ அதனை இப்போதே செய்.
  • பக்தி என்பது உன் கடமையை முழுமையாகச் செய்வதாகும்.
  • மாற்றத்தை உருவாக்கும் உன்னதமான பணியில் இணைந்து பணியாற்றிடும் அனைவரும் பிறவா நிலையில் மாஸ்டரோடு இணைகின்றனர்.
  • பற்றுறுதியோடு செய்யப்படும் ஒவ்வொரு செயலும்,விவரிக்க இயலாத முறையில் மாஸ்டருடைய ஆற்றலை அவருக்கு தெரிந்தோ தெரியாமலேயோ வெளிப்படுத்துகின்றது.
  • எப்போது ஆசை மனத்திரையிலிருந்து அகலுகின்றதோ, அப்போது வாழ்க்கை ஒழுங்கு படுகிறது.
  • வாழ்வின் இறுதி இலட்சியமே கடவுள்.
  • மாஸ்டரிடத்து பற்றினை வளர்த்தால் லோகாயுத விஷயத்தில் பற்றின்மை இயல்பாகவே தன்னை வந்து ஒட்டிக்கொள்ளும்
  • சத்தியத்தை நோக்கி உள்ளார்ந்த விழிப்புநிலை ஏற்படுவதே அன்பாகும்.

    மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

    தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166




     

1 comment:

  1. இரண்டு பகிர்வுகளும் அறிந்து கொள்ள வேண்டியவை... நன்றி...

    ReplyDelete