தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா
பேராசிரியர்
என் கடன் பணி செய்து
கிடப்பதே….. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே….என்ற வரிகளுக்கு உரிமை கொள்ளும் ஒரு உத்தமரை…வாழும்
ஒருவரை மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்…. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம்
வாழ்நாளில் இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தார்….. அதுபோலவே செயலாற்றிக் கொண்டிருக்கும்
ஆசிரியரை வெளியுலகும் அறிந்து கொள்ளவேண்டும்
என்பதற்காகவே இந்தப் பதிவு……
நான்கு புத்தகங்கள்
எழுதிய இந்தத் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பணியாற்றி 2011-இல் ஓய்வு பெற்ற
CHEMISTRY பேராசிரியர் திரு.S.முருகன் , நுண்ணிய அளவிலான வேதியல் பரிசோதனைகள் சம்பந்தமாக
,கல்லூரிப் பரிசோதனைக்கூடங்களில் அதிகப் பொருட்செலவைக் குறைக்க microscale technique –ஐப் பயன்படுத்தவும் ,அதனால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்கப் படுவதையும்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க முனைந்து இன்றைய தேதி வரை 95 கல்லூரிகளுக்கும்
பல்கலைக்கழகங்களுக்கும் சென்று நற்பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்….. வெளி மாநிலங்களான
கேரளா (28) , கர்நாடகா(3), மஹாராஷ்ட்ரா (2) கல்லூரிகளுக்கும் போய் சிறப்புரையாற்றியும்
செய்முறைப் பயிற்சிகளை செய்துகாட்டியும் மைக்ரோ தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் மத்தியில்
விளக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆகஸ்ட் 24-இல் நடைபெறும்
தமது நூறாவது கருத்தரங்கத்திற்கு ,இவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவரது குருவான
பேராசிரியர் Dr.S.L.KELKAR பூனேயில் இருந்து வர இருக்கிறார்..
இத்தொழில்நுட்பம்
பற்றிய இவரது கட்டுரை 2013-இல் வலைதளத்தில் வேதியல் சம்பந்தப் பட்ட (The journal
of Applicable Chemistry ) இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சபூத மருத்துவரான
இந்தப் பேராசிரியர் மருந்தில்லா மருத்துவம் பற்றி நாகர்கோவில் வானொலி நிலையத்தில் பேசியது 2009-இல் ஒலிபரப்பானது.
இலவசமாகவே தம்மை
நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
இதை மட்டுமா இவர்
செய்திருக்கிறார். மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியான வகையில் அவரது செய்கை
பல உண்டு.
அது அவர் பயின்ற,
பயிற்றுவித்த தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளர்ச்சிக்காக ஐந்து லட்சம் ருபாய் கொடுத்ததைப்
பதிவு செய்வதா!
ஆசிரியர் இயக்கத்திற்கு இரண்டு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா! தன் வீட்டில்
பணிபுரிந்து ஓய்வுற்ற வயதான பெண்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா
! எதைச் சொல்வது…...
ஓசையின்றி கொடுத்துக்
கொண்டே இருக்கும் ஒப்புயர்வு பெற்ற இதயம் கொண்டவரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை……
நல்ல மனம் வாழ்க……
No comments:
Post a Comment