Saturday, April 30, 2011

நாயுடன் ஒரு அனுபவம்

 
Posted by Picasa



காலை......5 மணி....எனை விட்டுப் பிரியாத என் நண்பன் டெலிபோண் மணிபோல்
க்ரீங்க்...க்ரீங்....அலறினது (மொபைல் தான் என் நண்பன்)....எனக்கு பிடிக்காதது
அதனிடம் இதுவும் ஒன்று...

சுரத்தே இல்லாமல் எழுந்தேன்......கடமைகளும் முடிந்தன......

நடக்கப் போவதா..... வேண்டாமா......
மணி 5.45 ( காலையில் நடப்பது பக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு மைதானத்தில்) இன்று ஞாயிறு. ஆள் அரவமே இருக்காது.என்ன செய்ய......

”நடந்து விட்டு வாருங்கள்”...... இது என் மனைவியின் கட்டளை....
என் ஆயுளைக் கூட்ட எண்ணி சபரிமலை போய் வந்த பின் நடக்காததால் வலுக் கட்டாயமாக என்னை அனுப்பிவைத்தாள். நானும் துக்ளக் வாங்கலாமே என்ற எண்னத்தில் சாலையில் நடந்து போனேன்.

பக்கத்து வீட்டு நாயும் என்னோடு வந்தது. அவ்வப்போது எங்க வீட்...டுக்கு வந்து போகும். அல்போண்சா ஸ்கூல் நெருங்கும் போது..........இன்னமும் விடியவில்லை.இருள் கருமை நிறம் மாறப்போகிற சம்யம்....இடது பக்கமுள்ள சந்தில் இருந்து ஒரு நாயின் உறுமல்...சற்றும் அசராமல் நாய் (நண்பன்) வந்து கொண்டே இருந்தது. ..... நாலைந்து நாய்கள் ஒரே பாய்ச்சலாக எங்களை நோக்கி வந்தது.

என்னுடன் வந்த நாய் சண்டை இட தயார் இல்லையென்றாலும் திரும்பிப் போகவும் தயங்கியது (இக்கட்டில் இருந்த என்னை விட்டு போக .....)

உடனே என் கூட வந்த நண்பனை விரட்டினேன்.

அது புத்தி சாலி. புறமுதுகிட்டு ஓடியது......அந்த தெரு நாய்கள் வெற்றிக்களிப்பில் பழைய இடத்திற்கே போய் விட்டது. அவைகள் சொன்ன செய்தி:-” இது எங்கள் தெரு. உன்னுடன் இனி அது இங்கெ வந்தால்..... தொலைத்து விடுவோம்.....” நல்லகாலம்

(என்னை ஒரு ஜந்துவாகக் கூட நாலு நாய்களும் பார்க்கவில்லை)

மாநிலச் சண்டை, நதிநீர்ச் சண்டை, ஜாதிச் சணடை.......ஓ1....இவையெல்லாம் நமக்கோ.

ஒரு வழியாக ஒரு மணிக்கூர் கழிந்து . வீடு வந்து சேர்ந்தேன்.

நாய்ச் சண்டை பற்றி கூறினேன்.

நல்ல காலம். 14 ஊசியில் இருந்து தப்பினீரகள். ....இனிமேல் வெளிச்சம் வந்த பின் நடக்க போங்கள்...தெருவில் எல்லாம் போக வேண்டாம் .....

அய் ஜாலி...... அடுத்த ஞாயிறன்று நடக்க வேண்டாம்....முகனூல் நண்பர்களிடம் வரிகளாடலாமே.....

No comments:

Post a Comment