நானும் கடுக்கரை ராஜேந்திரனும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காலையில் காட்டுபுதூர் சாலையில் நடந்து போகும்போது காட்டுப்புதூர் பண்ணையார் பற்றிய ஒரு தகவலை என்னுடைய ப்ளாக்-ல் பதிவு செய்ததை சொன்னேன் . அதைக் கேட்ட ராஜேந்திரன் ," உனக்கு இது போல் எழுதும் பழக்கம் உண்டா?",எனக் கேட்டார் . ஆம் என்று சொன்னதும் அவர் தனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்.
பறக்கையில் இருந்து ஒரு நந்தினி என்ற பெயருடைய பெண் நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞரும் படித்துக் கொண்டிருந்தார் .
அவர் அவளை மிகவும் நேசிக்க அவளோ அவரது நேசத்தை பொருட்படுத்தாமல் புறக்கணித்து வந்தார் .மேலும் அவரைப் பற்றித்தன்னுடைய ஆசிரியர்களிடம் குறை சொல்லி தன்னை மனதளவில் தொல்லை தருவதாகவும் சொன்னார் . மனம் வருந்திய இளைஞர் அவள் மேலுள்ள காதலை நெஞ்சினில் சுமந்த படி த்தனது படிப்பை முடித்து விட்டு வேலை தேடி போய்விட்டார் .
நந்தினியும் பக்கத்து ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பாத்து வந்தார். அந்த சமயத்தில் ஒருவனை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் . அவளது வாழ்க்கை ரம்மியமாகப் போய் கொண்டிருக்கும்போது விதி விளையாடி காலன் அவளது கணவனை கவர்ந்து கொண்டான் .
காலம் நகர்ந்து கொண்டே இருந்தது .மகள் வளர்ந்து படிக்க ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிற்று .
கதவுகளில் ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்குமே .நந்தினிக்கும் ஒரு கதவு திறந்து டெல்லிக்கு அவளை அழைத்தது . அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது . மகளுடன் மகளுக்காக வாழ்ந்து வந்தா .
தன் வேலை முடிந்து மாலையில் நடந்து செல்லும் போது தன் பேரை சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தா.
அவள் எதிரே ஒருவன் . "என்னைத் தெரியவில்லையா ......நீ நந்தினி தானே ..."
எனக் கேட்டான் .
சற்று ஆச்சரியத்துடனும் சங்கடத்துடனும் ஆம் என்று தலை அசைத்த வாறே நீ ராமகிருஷ்ணன் தானே .....நீ இங்க தான் இருக்கியா ? எனக்கேட்டாள் நந்தினி. நான் இங்க தான் வேலை பாக்கேன். நீ எப்படி இங்க வந்தே. மாப்பிள்ளைக்கு இங்க தான் வேலையா? என ராமகிருஷ்ணன் கேட்டார். நானும் என் 11 வயது மகளும் தான் இங்க இருக்கோம். நான் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பாக்கேன். நந்தினி சொன்னாள். “கணவர் எங்க வேலை பார்க்கிறார் எனக் கேட்க கணவர் இறந்த விசயத்தை அவள் சொல்கிறாள்” உங்களுக்கு கல்யாணம் ஆயிற்றா என அவள் கேட்க இல்லை யென தலயை அசைக்கிறார். நான் திருமணமே வேண்டாம் என இருந்துவிட்டேன் . நான் உன்னைதான் மணக்க வேண்டும் என்றிருந்தேன். நீ மறுத்து விட்டதால் நான் கல்யாணமே களிக்கல்ல. இருவரும் சிலநாட்கள் கழித்து மறுபடியும் சந்திக்கின்றனர். நந்தினியை மணக்க தான் தயாராக இருப்பதைக் கூறுகிறான். ’எனது மகளுக்கு 11 வயதாகிறது. நம் திருமணம் நடந்தால் அது அவளைப் பாதிக்கும். அதனால் வேண்டாம்’ என்கிறாள் நானே உன் மகளிடம் பேசுகிறேன் என கூறிய ராம்கிருஷ்ணன் மகளிடம் பேசி பூரண அனுமதி பெறுகிறார். இப்பொழுது இருவரும் திருமணமாகி ஓருயிராய் மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர். சினிமாவில் மாத்திரமே நடக்கும் இது போல். மிகவும் சந்தோசமாக இருந்தது கேட்பதற்கு. சாவி பத்திரிகை ஆசிரியரின் மகளின் திருமணமும் இது போன்றதுதான். அது சினிமாவாகவும் வந்தது. ராமகிருஷ்ணனும் நந்தினியும் ஆறுமுகம் பிள்ளை (ராஜேந்திரன்),வேணுகோபால் ஆகிய இருவர்களின் மாணவர்கள். ராமகிருஷ்ணன் வேலை பார்ப்பது ஒரு தனியார் தொலைக் காட்சியில்.
என்னிடம் சொன்ன ஆறுமுகம் பிள்ளையின் முகம் மிகவும் பூரிப்புடன் காணப்பட்டது .தனது மாணவர்கள் இருவரும் திருமணம் செய்து சந்தோசமாய் இருப்பதை அறிந்து கொண்டதால்.

No comments:
Post a Comment