நான் என்னை செதுக்கிய சிற்பிகளை என்றுமே என் மனதில் வைத்துப் போற்றுவேன்......
சிற்பக் கூடங்களும் கோவில் வடிவங்களாகவே இருக்கும் என் இதயத்தில்......
சிற்பிகள் என் ஆசிரியர்கள்.....
.
சிற்பக்கூடங்கள் நான் பயின்ற பள்ளிக்கூடங்கள்......
அ....ஆ.... படிக்க பள்ளிக்கு அனுப்பினார்கள் அறியாத வயது......
A....B....C.... இந்த வடிவம் எழுத்தாய் தெரியும் போது பதினோரு வயது
எந்தச் சண்டித்தனமும் செய்யாமல் என்னோடு மிகவும் நட்பாய் இருந்த ஒரே பாடம் கணக்குப் பாடம். கணக்குப் பாடத்தோடு உறவு நெருங்கும் போது என் வயது 15....
எனக்குப் பிடித்த பாடம் கணக்கு.....பிடித்த பள்ளி பூதப்பாண்டி பள்ளி.....எனை அணைத்து ஆதரித்த அந்த பள்ளிக்கு.... இல்லையில்லை .....கோவிலுக்கு எத்தனையோ முறை போனதுண்டு......
ஆனால் இப்போ போனபோது என்னுள்ளம் என்னைக் கேட்காமலேயே துள்ளி விளையாடியது....
ஆனந்தத்தால் நான் விட்ட மூச்சுக் காற்று கூடஅந்த இடத்தில் நறுமணமாய்... வசந்தமாய்........வீசியது.......
இதுவும் இனபம் தருகிறதே......புதிய அனுபவம் தான்......
எந்த வகுப்பில் கணிதம் படித்தேனோ அதே வகுப்பறையில் .........
இப்போ என் வயது 65.
சுவர்களை......தரையை.....பெஞ்சுகளை.....நான் அன்று இருந்த பெஞ்சுதானோ......
Board-ல் என்னவோ வெள்ளை எழுத்துக்களும் படமும் .....
என்னவென்று அருகே சென்று பார்த்தால்........ ஆச்சரியம் எனக்கு......எனக்கு மட்டுமே அது அதிசயம்......... ஆம்.... எனக்கு மட்டுதான்.
Board-ல் பாத்தது நான் படித்த கணித பாடம்.....Geometry....என் கரம் பிடித்து என்னை வாழ வைத்த பாடம் .... அதன் பிள்ளையல்லவா நான்..... என்னை அன்போடு வரவேற்கிறது
அந்த வகுப்பறைக்கு இப்போ கொஞ்சம் மெருகு கூடி இருக்கிறதே........
காரணம்.....?
கரும்பலகை இருந்த இடத்தில் கரும்பலகை இல்லை....
அந்த இடத்தில் இருந்தது ஒரு Green colour board...
பசுமையாக காட்சி தந்த Board தான் அந்தப் பொலிவுக்குக் காரணம் .......
உற்றுப் பார்த்தேன்... .......பச்சைப் பலகையா ...... இல்லை .....அது Green Ceramic Board .
ஆச்சரியம் என் கண்களில் நர்த்தனம் ஆடிக் கொண்டே இருந்தது.
Board இருந்த சுவரில் கையால் எழுதப்பட்ட ‘அறம் நம்மைக் காக்கும் ’என்ற
வரி மிகவும் பொருத்தமாய் இருக்கிறதே.......
Board-ல் "Donated by Er.P.Arumugam Pillai.Chairman,S.T.Hindu College,Nagercoil".......
சொல்லவே இல்லையே.....எப்பங்கொடுத்தாங்க .......
வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியாது....... எங்கள் கல்லூரித் தலைவர் கொடுத்தது எஙகளுக்கே தெரியாது......
அறம் செய்தவர் கடுக்கரையில் இருந்து தினமும் காளை மாட்டு ‘ வில் வண்டி’யில் வந்து படித்த முன்னாள் மாணவர். தான் படித்த பள்ளி அல்லவா. பூதப்பாண்டியில் போய் பார்க்கிறார் தனது 75-வது வயதில்..... ப்ளஸ் 2 வகுப்பறைகள் அனைத்துக்கும் பசுமை போர்டு கொடுக்க முடிவெடுக்கிறார். பெரியவர்.......கடனே என்று கொடுக்காமல் ஆத்மார்த்தமாக உள்ளன்போடு செய்து முடிக்கிறார்.......
செயல் வடிவம் ஆனபின் தான் மற்றவர்களுக்கே தெரிய வந்தது......
கோவிலுக்கு கொடுப்பது என்பது வேறு...கடவுள் தருவார். காப்பாற்றுவார்.... எதிர் பார்ப்பு இருக்கும்....
கல்விக்கூடங்களுக்கு கொடுப்பதென்பது வேறு......எந்த எதிர்பார்ப்புமின்றி செய்கிற ஒன்றல்லவா. இது தானே அறம்... அதுதான் காக்கும்.
கேட்காமலேயே கொடுப்பவன்....... அவன் யார் ?
அவன் தான் இறைவன்......!

No comments:
Post a Comment