
வடக்கு வீட்டுக் குடும்பத்தின் காரணவர் என்று வயது மூப்பின் அடிப்படையில் ஒருவர் பதவி வகிப்பார்..அவர் தான் அந்தக் குடும்பத்தில் முதல் மனிதர்.. திருமணப்பத்திரிகையில் அந்தக் காரணவர் பெயரை முதன்மைப் படுத்தி ,அவர் அழைப்பது போல் இப்படிக்கு என்ற இடத்தில் அவர் பெயரை அச்சடிப்பார்கள்..
ஆனால் இப்பொழுது அந்த முறை மறைந்து போயிற்று.. காலமாற்றம் கோவில் கொடைவிழா நடப்பதிலும் ஏற்பட்டது .ஆனால் எப்படியோ கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன .
பலரது முயற்சியால் அவ்வப்போது கொடை விழாக்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.. இந்த வருடம் May மாதம் கொடை சிறப்பாக நடந்து முடிந்தது..
தனது 70 வயதிலும் ஒரு இளம் வயது வாலிபன் போல் அலைந்து ,கஷ்டப்பட்டு மிக அழகாய் கொடியினை நடத்தி முடித்த முருகன் அவர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள் .
வடக்கு வீட்டு முருகன் என்ற பெயர் வடக்கு வீட்டுக் குடும்பத்தில் உள்ள எல்லோருமே அறிந்த பெயர்..
தனது மகன் கொடை க்கு வராதிருந்தது அவருக்கு வருத்தம் இருந்ததோ இல்லையோ எங்கள் எல்லோருக்கும் இருந்தது..
வடக்கு வீட்டுக் குடும்பத்தில் ஒரு முருகன் ........ அவன் செயல் அழகன் ......
No comments:
Post a Comment