Wednesday, December 18, 2013

குறும்படத் தகடு வெளியிட்ட செந்திலுக்கு நான் எழுதிய கடிதம்

தாத்தாதம் பெயர் கொண்ட அனந்தபத்மனாபனுக்கு.
வாழ்க…. வளர்க…..
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அண்ணா என்று உரக்கக் கூவணும் போல் இருக்கிறது. எனது உடன்பிறவா சகலர்- உன் அப்பாவை நினைத்து……

காலங்கள் உனை எங்கோ அழைத்துச் சென்றது. காற்றடித்த திசையில் பறந்தாய்….. தெற்குப் பக்கம் காற்றின் திசை இருந்தால் கிரிக்கட்.
மேற்குப்பக்கமோ அலுவலகப்பணி. வடக்கே காற்றிழுத்தால் வேதனை ….கிழக்கே இப்போ காத்தடிக்குது. கிழக்கே போகும் ரயில் பயணம்…போல் நிழலில் உண்மையைத் தேடும் பயணம்..

 உன்னாலும் முடியும் தம்பி என்பதை உணர்ந்து இன்று எவரும் எதிர்பாராவண்ணம் இரகசியமாய் பொறுமையாய் ஒரு பணிதனை செய்திருக்கிறாய்…… பாரதியாய். பாரதியே நேரில் வந்துவிட்டாரோ என்ற பிரம்மையை நிகழ்த்தி இருக்கிறாய்….. இதைக் கண்டு நெகிழ்ந்திட தந்தை இல்லை…பாராட்டிட நடிகர் திலகம் இல்லை. பாரதி வேடப் பொருத்தம் மிகுந்த சுப்பையா இல்லை. இருந்திருந்தால் எல்லோர் கண்ணிலும் நீர்… அது ஆனந்தக் கண்ணிராய் வடிந்திருக்கும்…..


சிப்பிக்குள் முத்து நீ. முத்துவின் தனயன் நீ

உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு. வெள்ளைத்தாளில் வந்த வெள்ளமில்லாக் கிணறு உன் அறிவின் ஆழத்தைக் காட்டிற்று—வைரவிழாமலர்………… கணிதமும் தமிழும் கொஞ்சி விளையாடும்….கம்பனே கல்லூரிக்கு வந்தால் கலகலத்துப் போவான் என்றெல்லாம் எழுதிய போதே உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு என எண்ணினேன். எண்ணம் கனவல்ல….. நனவே… சான்று.. கதை- வசனம்- நடிப்பு என்ற மூன்றிலும் ஒற்றை மனிதனாய் “பாரதியின் பாதிக்கனவு” எனும் குறும்திரைக் காவியம்தனை வெளியிட்டது நீ என்பதுவே….

ஒன்று எனச் சொல்… அனைவரும் ஒன்றே.
வித்தியாசாகர் நினைவப் போற்றும் போதே உன் தெளிவு புரிகிறது….. எவரை எப்படி நினைக்கவேண்டுமோ அப்படி நினைத்து மிகத் தெளிவாய் அஞ்சலி செலுத்திய பாங்கு பாராட்டப்படவேண்டிய ஒன்று.

  முகம், முகவரி தந்தவர்களை வணங்கிய விதம் கவர்ந்தது…..


நடிப்பு…. என் பாராட்டுதல் கோடிக் கோடி….. ஒப்பனையாளர், கேமரா எல்லாமே மிக பாராட்டும்படி இருந்தது….. இருப்பினும் ஒலிப்பதிவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிலாமோ என்று எண்ணினேன்…. தவறு என்று சொல்ல எனக்குப் போதிய அறிவில்லை….

உன் நடிப்பு… ஆஹா… என்ன அழகு…செந்திலா இது என என் விரலை மூக்கில் வைக்கும்படியாய் இருந்தது…. என்ன ”பாவம்”…ரசித்தேன்…..

எத்துறையாயினும் நீ அத்துறையில் உன் திறமையைக் காட்டு….. பெருமை கிட்டும்….. அடக்கம் ஒன்றே உயர்ந்தது…. உன் சுபாவத்தால் எல்லோரிடமும் அன்பாய் பணிவாய் நடந்து, இன்னமும் பல முத்துக்களும் வைரங்களும் உன் கிரீடத்தை அலங்கரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்….

   எல்லாப் புகளும் இறைவனுக்கே……

அன்புடன்
தங்கப்பன்.
11-12-13


2 comments:

  1. 11-12-13 குறும்படம் வெளியிட்ட நாளில் நான் எழுதிய இந்தக் கடிதம் மேடையில் வாசிக்கப்பட்டது......
    பாரதி பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. நான் அன்று சென்னைக்கு சென்றதால் கடிதம் எழுதி அவனிடம் கொடுக்க காந்திநாதனுக்கு மெயில் மூலம் அனுப்பினேன்.....

    ReplyDelete
  2. நான் காந்திநாதனுக்கு அனுப்பிய கடித்ததுடன் எழுதிய வேண்டுகோள் ......”””நன்று என உன் மனம் சொன்னால் பகர்ப்பு ஒன்றினைக் கொடுக்க வேண்டியவரிடம் கொடுத்தால் கொள்வேன் ஆனந்தம்.”””

    ReplyDelete