Add caption |
18-11-2014 செவ்வாய்கிழமை காலை உணவின் போது பரிமாறிக்கொண்டே “இண்ணைக்கு எங்க போறீங்க” ....எனக் கேட்டாள் அய்யம்ம மதினி.....


மிகவும் மெதுவாக நகரும்....எந்த அதிர்வும் இருக்காது....துவக்க நாளில் ஒரு டிக்கட் 8888 சிங்கப்பூர் வெள்ளிக்கு விற்றது......
படிக்க படிக்க ஆர்வம் கூடியது.படித்துக் கொண்டிருக்கும் போது படித்தவரிகள் திடீரென பயமுறுத்திற்று... பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் விவரிக்கப்பட்டிருந்தது...ஆறுவருடங்களுக்கு முன்பு ராட்டினம் பழுதடைந்து நின்றது. காரணம் கண்ட்ரோல் ரூமில் ஏற்பட்ட சிறு தீ ...... நின்றதால் 173 பேர் அவதிக்குள்ளானார்கள் உணவும் குடிக்க ட்ரிங்க்ஸும் கொடுத்தார்கள்... இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். ஒரு மாதம் கழிந்தபின்தான் ராட்டினம் சுழல ஆரம்பித்தது. படித்துக்கொண்டிருக்கும் போதே நாங்கள் ராட்டினப் பெட்டகத்தில் ஏறினோம்.அது குளிரூட்டப்பட்ட சின்ன ரூம்...ராட்டினம் நகர்கிறதா.... நகர்வது கண்ணுக்குப் புலப்படவே இல்லை எந்த அதிர்வும் உணர்வும் இல்லை... நாம் நகரும் பூமியில் இருப்பது போல.... ரசித்துக் கொண்டிருந்த நேரம் 45 நிமிடம் முடிவதற்குள் பயணம் இனிதாய் முடிந்தது...

No comments:
Post a Comment