Friday, March 30, 2012

அறுவடை அன்றும் இன்றும்........


                          


Posted by Picasa நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு மத்தியானம் போகும்போது அறுவடை காலங்களில் தெருவில் நெற்கதிர்கட்டை தலையில் வைத்து மிக வேகமாக நடந்தும் ஓடியும் செல்வதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

சின்ன பிள்ளைகள் கட்டில் இருந்து நெல்லை உருகி வாயில் போட்டுக் கொறிக்க அவர்கள் பின்னால் போய் கதிரை உருகி எடுப்பதுண்டு.அது போன்ற சமயங்களில் சுமப்பவனுக்கு தெரிந்தால் அவன் நிற்காமலும் திரும்பிப் பார்க்காமலும் திட்டுவதுண்டு.

அவர்கள் தலைச் சுமட்டுடன் வரும்போது எதிரே யாராவது வந்தால்அவர்களது வேகம் தடைபடும்.
தலை சுமட்டின் முன்பக்கம் தாழ்ந்திருப்பதால் கண்ணை கொஞ்சம் மறைக்கும்.

வழி, வழி என்று சத்தம் போட்டுக் கொண்டே விரைவாக நடந்து செல்வான்.

வயல் அறுவடை காலத்தில் அறுக்க வருபவர்கள் ஒரு குழுவாக வருவார்கள். அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு களத்தில் உள்ள தொழுவில் தங்கி இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் உண்டு.

 அவனை கூரடி என்று அழைப்பார்கள்.
 கூறு என்றால் ஒரு பங்கு என்று பொருள்.

விளைந்து கிடக்கும் வயலை அறுக்கும்போது யார் எந்த பாகத்தை அறுக்க வேண்டும் என்று பிரித்துக் கொடுப்பது அந்தக் கூரடிதான்.கூறு கூறாகப் பிரித்துப் போட்டு யார் எந்தக் கூறை அறுத்து சுமந்து செல்ல வேண்டும் என்று சொன்னபிறகு அவனவனுக்குள்ள கூறை அறுக்க ஆரம்பிப்பான்.

எப்படி பங்கு வைப்பான்.?

 கூரடியின் கையில் ஒரு தடிமனான கம்பு இருக்கும்.

அந்தக் கம்பின் நீளம் தான் ஒரு கூறின் அளவு.

 வரப்பின் அற்றத்தில் இருந்து கம்பை வைத்து அதன் மறுமுனையில் இருந்து கதிரை நேராக ஒதுக்கி கொடுப்பான்.

 கதிர்களை முதலில் வேகமாக அறுத்துப் போட்டு விட்டு தாங்கள் தங்கும் இடத்துக்கு வந்து ஆகாரம் பார்ப்பார்கள். 

இதற்கிடையில் வெயிலில் காய்ந்த பின் கதிரை படை படையாய் எடுத்து பனைநாரில் வைப்பார்கள்.
ஒவ்வோரு தடவை படையை வைக்கும்போது மாத்தி மாத்தி வைப்பார்கள்.அதாவது ஒரு தடவை வைக்கும்போது கதிரின் அடிப்பாகம் இருக்கும் அல்லவா. மறுதடவை அந்த பாகத்தின் மீது எடுத்து வந்த படையின் நெல் இருக்கும் பாகத்தை வைப்பார்கள்.

இரண்டு நார் கொண்டு மிகவும் இறுக்கி கட்டி தலையில் வைத்து களத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.....

வயல் உரிமையாளன் நெற்கதிர்க் கட்டை வயலில் இருந்து எண்ணி அனுப்புவான் .களத்தில் ஒரு ஆள் எத்தனை கட்டு வந்தது என்று எண்ணுவான்.இருவர் சொல்வதும் சரியாக இருக்க வேண்டும்.

அவர்களது கூலி 21 மரக்கால் விதப்பாடு என்றால் 21 மரக்கால் நெல் கூலியாகக கொடுக்க வேண்டும்... ஒரு ஏக்கர் என்பது 21 மரக்கால் விதப்பாடு

சூடடிப்பவர்களும் ஒரு குழுவாய் இருப்பார்கள்.

 தலைவன் கூரடி என்றே அழைக்கப்படுவான். கதிரை வட்டமாகப் போட்டு மாடு வைத்து சூடடித்து நெல்லை தூசி நீக்கி வீசி வீட்டினுள் கொண்டு போடுவார்கள். படப்பு கூட்டவெண்டும். இவர்களது கூலி 21 கோட்டை நெல் கிடைத்தால் 21 மரக்கால் நெல். சமீபத்தில் நான் கடுக்கரைக்குப் போனபோது ,ஆட்களுக்குப் பதில் வயலிலேயே அறுத்தும் நெல்லை எடுத்து தந்து விடுகிற வண்டிகளைத்தான் கண்டேன்....


Tuesday, March 27, 2012

1952 முதல் இன்றுவரை.............


1952  முதல் 1957 வரை தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை சார்ந்திருந்தது...
துணைவேந்தர்:சர்.A.ராமசாமி முதலியார்
முதல் முதல்வர்:சத்தியவாகீஸ்வர அய்யர்(1955 வரை)
President:Thiru.K.VelayuthamPillai
Secretary:Thiru.N.Boothalingam Pillai.
Thiru.C.Subramaniam(Rasa).
the first class was engaged by Prof: L.C.Thanu. his student: Dr.D.Velappan.
Prof :L.C.Thanu was the Principal from 1971 to 1988.
Dr.D.Velappan was the principal for the year 1988-89.
***********************************************************************************
1
1957 முதல் 1966 வரை சென்னை பல்கலைகழகம்
துணை வேந்தர்: டாக்டர்.A.லெக்‌ஷ்மணசாமிமுதலியார்
முதல்வர்: Dr.B.நடராஜன்(1955 முதல் 57வரை)
Prof:V.பொன்னுசாமிப்பிள்ளை(1957 முதல் 1958 வரை)
UniMadras.png

*********************************************************************************************
1966-முதல் 1990 வரை மதுரை காமராஜ் பல்கலைகழகம்
துணைவேந்தர்:தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
முதல்வர்:Prof:V.M.ஸ்ரீதரமேனோன்(1962 முதல் 1969 வரை)
Madurai Kamaraj Univ Logo
President: P.Veerapathrapillai (1971 to 1977)
             President:T.S.Ramasamy    (1977 to 1991)        
***********************************************************************************
1990 முதல்.....................மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,திருநெல்வேலி...............................
துணை வேந்தர்:Dr.வேதகிரிசண்முகசுந்தரம்
முதல்வர்: Dr.C.பேச்சிநாதன்.(1989 முதல் 1994வரை)
2008 முதல்
Dr.A.மீனாட்சி சுந்தரராஜன் முதல்வராக பணியாற்றுகிறார்.


****************************************
Chairman-Secretary:Er.P.ARUMUGAMPILLAI


Monday, March 26, 2012

1970க்கு முன்னே கடுக்கரையில் நடந்த திருமணப்பந்தியைப் பற்றிய என் நினைவுகள்

ஆக்குப்பெரை என்பது தென்னை ஓலையால் வேயப்படுவதாகும். அதில்தான்  சாப்பாடு பந்தி வைப்பார்கள். சாப்பாடு பொங்குவதற்கு தனியாக சமையல்காரரை நியமித்து அதற்கு என்று தனியாகப் பெரையும் போடுவார்கள்.பெரை போடுபவர்கள் பூதப்பாண்டியிலும்,தெரிசனம்கோப்பிலும் உண்டு.

சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் கடுக்கரையில்  உண்டு.  அதனை வாங்கி வைத்தவர்கள் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்ற்ஸ்டிகளாக இருந்த ஒட்டடுக்கு வீடு பிச்சைக்காரன்பிள்ளை என்ற திருச்சித்தம்பலம் பிள்ளையும் கீழத்தெரு திரவியம்பிள்ளையும் தான். 
நீளமாக இருக்கும் பந்தல்….மோட்டுப்பந்தல் தான் கல்யாண வைபவங்களுக்கு போடுவார்கள்.மூங்கில் கம்புகளைத்தான் மேற்கூரைப் போடுவதற்கு பயன்படுத்துவார்கள்…..தடிமன் கூடிய கம்பை நான்கு குச்சைகளில் (மூலைகளில்) கால்களுக்காக நடுவார்கள்.பெரையின் அகலம்  எந்த அளவு..?
 அப்போதெல்லாம் தரையில் இருந்துதான் சாப்பிடணும்.. நான்கு வரிசைகள் நீளமான பந்திப் பாய் தரையில் போட்டிருக்கும். இருவரிசைக்கும் இடையே சாதம், கறிகளை விளம்புவர்கள் நடந்து போவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருக்கும்…. 4 வரிசை அமைக்க ஏதுவாக ஒரு பெரையின் அகலம் இருக்கும்..
பெரையின் மோட்டுப் பகுதியில் வைக்கோல் வைத்துப் போட்டு மூடி இருப்பார்கள்…மழை வந்தால் ஒழுகாமல் இருக்கவே அப்படிச் செய்வார்கள்….
மழை நீர் தரை வழியாக பெரையின் உள்ளே வராமல் இருக்க, பெரையைச் சுற்றி பெரையின் அடிப்பாகத்தில் ஓலையை மண்ணை  வைத்து அணைத்தும் வாசலில் வரப்பு போன்ற சிறிது தடுப்பும் இருக்கும்.
மூன்று விதமான அளவுகளில் பெரைகள் இருக்கும். பந்திப்பெரை,ஆக்குப்பெரை,கலவறப்பெரைகள் தான் அவை…… ஆக்குபெரையில் தான் அடுப்புக் கூட்டி சமையல் வேலை நடக்கும்.
மண்தரையாதலால் எல்லாப் பெரைகளிலும் மாட்டுச்சாணி போட்டு மெழுகி,புழுதி வராமல் தரையை பண்படுத்தி வைத்திருப்பார்கள்……. கலவரைப்பெரைதான் store room. பந்திபெரை தான் சாப்பாடு நடக்கும் இடம். முகூர்த்தத்துக்கு வருபவர்கள் பந்திப்பெரைத்தரையில் விரித்திருக்கும் ஜமக்களத்தில் அமருவார்கள். பெரையின் ஒரு அற்றத்தில் நாதஸ்வரக் கச்சேரி நடக்கும்….
சமையலுக்கு அந்தக் காலத்தில் நிபுணர்களாய் இருந்தவர்களில் முக்கியமானவர் பார்வதிபுரம் அப்புவும் அவரது சீடர்களும்தான்.. சமையல்காரர்கள் செய்யும் வேலயைக் கண்காணிக்க ஊரில் உள்ள ஒருவர் இருப்பார்.
முகூர்த்தம் முடிந்ததும் வெத்தலை,பாக்கு தாம்பாளத்தில் வைத்து வந்திருந்த அனைவருக்கும் கொடுப்பார்கள்… உள்ளூர் ஆட்கள் அதனை வாங்கி வெளியே போய் அவர்களது வீட்டுக்கேப் போய்விடுவார்கள்…..
பந்தியில் இருந்த ஜமக்காளத்தை எடுத்து பின் மாப்பிள்ளை வீட்டார் பந்திப்பாயில் அமர்வார்கள்.பின் இடம் இருந்தால் வயதான முதியவர்களைக் கூப்பிட்டு அமரச்சொல்வார்கள்.அடுத்த பந்தியிலும் அதுவே தொடரும்….உள்ளூர் ஆட்களை மறுபடியும் சாப்பிட அழைக்க அதன் பிறகு அவர்கள் வருவார்கள்…அதன்பிறகு தான் பெண்வீட்டார் சாப்பிடுவார்கள்.
பந்திப்பாயில் எல்லோரும் அமர்ந்தபிறகே விளம்ப ஆரம்பிப்பார்கள். முதலில் தலைவாழை இலையைப் போடுவார்கள்………தேர்ந்தெடுத்த நல்ல இலையை தான் முதலில் கொண்டு வருவார்கள்……மாப்பிள்ளை வீட்டாரின் மனம் கோணாதபடி மிகவும் பௌயமாக கேட்டுக் கேட்டு பருமாறுவார்கள்…. முதலில் உப்பு,…பின் வரிசையாக வாழைக்காய் தொவட்டல்,அவியல்,தடியங்காய் கிச்சடி,இஞ்சிக் கிச்சடி,மிளகு பச்சடி,நாரங்காய் பச்சடி,சேனை எரிசேரி,ஓலன், ஏத்தங்காய் உப்பேரி……
சாதம் போட்டதும் பின்னால் பருப்பு பப்படம் வரும்…….இதற்கிடையில் ராமச்சிவேர் போட்டு சூடாக்கிய நீரை இலையின் முன்னே இருக்கும் பித்தளைக் கப்பில் அல்லது அலுமீனிய கப்பில் விட்டுக் கொண்டே அங்கேயும் இங்கேயும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருப்பான்………பருப்பு விட்டு சாப்பிட்டு முடிந்த பின் தான் சாம்பார் வரும். அமைதியாய் சாப்பிடுவார்கள்….புளிசேரி விட்டு சாப்பிட்டபின்……பாயசம்…பழம் பால்பாயசம் போளி….வரும்.. ஒரு பாயசம் வந்த பின் அதை சாப்பிட்டு முடித்தபின் தான் அடுத்த பாயசம் வரும். நெருக்க மாட்டார்கள். இவற்றையெல்லாம் கண்காணிக்க ஒருவர் உண்டு.அவர் எந்த இலையில் எது இல்லையோ அந்தக்கூட்டை வைக்க ஆவன செய்வார்.
முதல் வரிசைக்காரர்கள் சாப்பிட்டபின் பெரைக்கு வெளியே வந்து பெரிய வார்ப்பில் இருக்கும்தண்ணீரை பனைஓலைத்தோண்டியில் கோரி எச்சிக்கையைக் கழுகுவார்கள்.
பந்தியில் ஆட்கள் அமர்ந்தபின் அவசரமாக சாப்பிட்டுவிட்டு போக யாராவது வந்தால் சின்ன பிள்ளைகளை எழுப்பி அந்த இடத்தில் அமரவைப்பது உண்டு.அதனால் அழுதுகொண்டே செல்லும் பையனை சமாதானப்படுத்தி அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிடச் செய்வார்கள்……… மெதுவாக ஒரு பந்தி முடிந்ததும் பெரையைச் சுத்தம் செய்த பின், சாப்பிடாமல் இருப்பவர்களை அழைப்பார்கள்…அழைத்த பின் தான் அவர்கள் போய் சாப்பிடுவார்கள்…
வயதான சொந்தக்காரர் யாராவது  திருமணத்துக்கு வராமல் வீட்டில் இருந்தால்  அவருக்கு சாப்பாடு அவரது வீட்டுக்கே கூடப் போவதும் உண்டு….. சாப்பிட்டு வெளியே வருபவர்களுக்கு வெத்திலை,பாக்கு,சுண்ணாம்பு கொடுக்க யானைக்கால் பெட்டியில் எல்லாவற்றையும் வைத்து கொண்டு வருவான் ஒருவன்......வேண்டியவர்கள் வெத்தலையை அவனிடம் வாங்கி போடுவார்கள்.

Sunday, March 25, 2012

முழு வெத்தலையை போட்டால் கடன் தராத பாட்டா........


வங்கிகள் இல்லாத காலம்….கூட்டுறவு சங்கமும் இல்லாத அந்த நாட்களில் மக்கள் தமது திடீர் தேவைகளுக்கு பணம் தேவைப் பட்டால் என்ன செய்வார்கள்………
பாத்திரங்களை பணயம் வைத்து ருபாய்க்கு அரை அணா அல்லது ஒரு அணா வட்டிக்கு கடன் வாங்குவதுண்டு…..அனேகமாக பெண்களுக்கிடையேதான் தான் இந்த கொடுக்கல் ….. வாங்கல் பரிவர்த்தனை நடக்கும்.  இப்படி வாங்குவது பெரிய தொகையாக இருக்காது…..

பெரிய தொகை தேவைப்பட்டால்என்ன செய்வார்கள்………வயல் வைத்திருப்பவர்களுக்கு(விவசாயிகளுக்கு) கடன் கொடுப்பவர்கள் ஊரில் உண்டு. அப்படிக் கொடுப்பதைக் கோட்டக்கடன் என்பார்கள்…..
கடன் வாங்கியனுக்கு வயல் இருக்குமல்லவா…… அவன் அவனுக்கு கிடைக்கும் நெல்லை வட்டியும் முதலும் சேர்த்து அறுவடை முடிந்த உடன் கொடுக்கவேண்டும்.

அதாவது வயல் அறுவடை முடிந்து களத்தில் இருக்கும் நெல்லை, கடன் கொடுத்தவனே வந்து வாங்கிக் கொண்டு போயிருவான்……
வயல் இல்லாதவன் தங்க செயினோ மோதிரமோ பணயம் வைத்து பணம் கடன் வாங்குவது உண்டு…..

அன்றாடம் வேலை செய்து காலம் கழிக்கும் தொழிலாளர்களுக்கு தேவை என்று வரும்போது என்ன செய்வார்கள்………இப்படிப்பட்டவர்களுக்கும் கடன் கொடுப்பவர்கள் ஊரினில் உண்டு…….

அப்படிக் கொடுப்பவர்……ஒருவர் ……..அவர் ராமலிங்கம் பிள்ளைப் பாட்டா……
அதிக வட்டி வாங்க மாட்டார்…….பணயப்பொருளாக எதனையும் கேட்கமாட்டார்……மிக அதிகமான தொகையினை யாராவது கேட்டால் தாளில் உறுதி மொழி எழுதி வாங்கிக் கொண்டு கொடுப்பார்……

கடன் வாங்க வருபவனது முகத்தை பார்த்தே கொடுக்கலாமா….. வேண்டாமா எனக் கணித்து விடுவார்……… வீட்டில் வந்து கடன் கேட்பவர்களை பாட்டா அன்பாக உபசரித்து ,  “மக்கா, என்ன விசயம்…
ருபாய்க்கு அப்படி என்ன அவசரம்……..”. கடன் வாங்க வந்தவன் பேசுவதை வைத்தே உண்மை பேசுகிறானா………பொய் சொல்கிறானா……என்பதைக் கண்டு பிடிச்சுருவாரு…”

அவருக்கு எதிரில் இருக்கும் செயர் அல்லது பென்ச்சில் அமரச்சொல்வார்…… இருந்தால் பணம் கொடுக்க மாட்டார்…….

பாட்டா வெத்தல போடும் பழக்கம் உள்ளவர்……கடன் வாங்க வந்தவனை வெத்தலை போடச் சொல்வார்…….
வெத்தலை தட்டத்தில் இருந்து அவன் வெத்தலையை எடுப்பதை மிகவும் கூர்மையாக பாத்துக்கொண்டே இருப்பார்....
அவன் வெத்தலையை கிழித்துப் பாதியைப் போட்டால் அவனுக்குப் பாட்டா கடன் கொடுப்பார்.
 சும்மாதானே கிடைக்குது என முழு வெத்தலையை சுண்ணாம்பு தடவிப் போட்டால் , அவனுக்கு கடன் கொடுக்க மாட்டார்.

Monday, March 19, 2012

என் பெயரை மறந்த குறத்தியறை பள்ளியில் படித்த தாஸ்.......

மாலையில் 3 மணிக்குப் போன மின்சாரம் எப்போ வரும் ? தெரியாது....ஆனால் போகும்போது சொல்லாமல் கொள்ளாமல் போய்விடும்.......வெயிலின் தாக்கம் சற்று கூடுதல்........மணி 5.30......வீட்டில் இருக்க முடியவில்லை......நடந்தது போலும் இருக்கும் கடைக்குப் போனது மாதிரியும் இருக்கும் என்றெண்ணி வெளியே கிளம்பினேன்.....ஒரு பையையும் கையில் எடுத்துக் கொண்டேன்...பைக்கும் காசு கேப்பானே....

சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, “ கடுக்கர ....கடுக்கர....” என சத்தம் வந்தது..... எங்கிருந்து யார் இப்படி ......?  ஒரு கடையில் இருந்து ஒரு ஆள் என்னை நோக்கி என்னருகே வந்தார்.

“உங்க பேரு தெரியல்ல ....அதான் அப்படிக் கூப்பிட்டேன்......” என்றார்

எரிச்சலுடன் இருந்த நான் அவரைத் தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள்வில்லை... நிக்காமல் அந்த இடத்தை விட்டு போக சற்று நகர முயன்றேன்....

“உங்க அண்ணன் இப்போ எங்கே இருக்கான்.”  கேட்டான்

 “கடுக்கரையில் இருக்கான்”

‘என்னத் தெரியல்லியா?’

நான், “ தாஸ் தானே நீ.... மாணவர் தலைவர் தேர்தல்ல உன்னை எதுத்து நிண்ணது என் அத்தான் சிவதாணு ......எல்லாமே ஞாபகம் இருக்கு...” என்றேன்.

 “ நான் அவனைத்தான் ஒன் அன்ணன்னு நினச்சுகிட்டு கேட்டேன்” என்றான்

“அப்படியா.... அத்தான் இப்போ இல்ல.....” என்று சொன்னேன்......

தாஸுக்கு வயது 68 .... வழுக்கைத்தலை. பாக்க 75 வயதுக்கு மேலான தோற்றம்....

அவன் சொன்னது...... அவனுக்கு இரண்டு பிள்ளைகள்..... மூத்தவள் பெண்.....அவளுக்கு 5 பெண் பிள்ளைகள்......பின் ஒரு மகன்........

மகன் கோட்டயத்தில் ஏசி மெக்கானிக்காக இருக்கான்......நல்ல படிக்கல்ல....ஒரே அசத்து..... சொன்னால் ஒண்ணும் கேக்க மாட்டான்......வீட்டுக்கு வந்தாலும் அவன் பேசினாலும் நான் பேச மாட்டேன்.....ஆனால் அவன் மிகவும் வசதியாய் இருக்கான்...... அவனுக்குள்ள சொத்தை தனது அக்காளுக்கே கொடுத்து விட்டான்.................

“நல்ல பையன் தானெ .ஏன் பேசாமல் இருக்க” நான் கேட்டேன்.......

“இப்போ ஊரில் உள்ள வீட்டை விற்று அவனது அம்மைக்கு ருபாய் கொடுக்க சம்மதிச்சிருக்கான்...... அவ கீழ விழுந்து ஆஸ்பத்திரியில் இருக்கா........”

“ உனக்கு நல்லது தானே செய்திருக்கான்... .....” இது நான்.

“அவன் கல்யாணம் செய்திருக்கும் பெண் வேறு ஜாதிப் பொண்ணு...... கல்யாணத்துக்கும் கூட நாங்க போகல்ல..... அவன் கூப்பிடல்ல....... எப்படி அவன் கிட்ட பேச முடியும்......அவனுக்கு இப்போ 90 ஏக்கர் சொத்து இருக்கு......18 கடை இருக்கு.....மாமனார் இல்ல....... நாங்கள் கோட்டயத்துக்குப் போனதே கிடையாது....”

 “நான் அவனிடம் ஒரு பைசா வாங்கமாட்டேன்......”

“அதெல்லாம் சரி.... நீ இப்ப என்ன செய்துட்டிருக்கெ......” என்று கேட்டதும்

அவன் “ ஒரு தெம்பு புடிச்சவன்ற வேல பாத்துக்கிட்டுருக்கேன்...” என்றான்.

”புடிக்கல்லண்ணா அந்த ஆளுகிட்ட ஏன் வேலை பாக்குற....”

அப்படிப்பட்ட ஆள்ட்டதானெ பணம் நெறைய இருக்கு......என்ன செய்ய.....விதி.... இன்னும் எத்தனை நாளோ ....போகிற நாள் போகட்டும்......

மிகவும் அன்பாய் குறத்தியறை பள்ளியில் படித்த அனைவரையும்
 பெயர் சொல்லி விசாரித்தான்....அவன் சொன்ன பெயர்கள் அத்தனையும் வகுப்பில் படித்த பெண்களின் பெயர்களே.....

கடைசி வரை என்னிடம் என் பெயரையே கேட்கவில்லை....

 அவனைப் பொறுத்தளவில் என் பெயர் ’கடுக்கர’ தானோ என்னவோ

Saturday, March 17, 2012

85 வயதான ஆசிரியரும் 75 வயது மாணவரும் 60 வருடத்திற்கு பிறகு சந்தித்த வேளையிலே.......



சர்.சி.பி.ராமசாமி மெமோரியல் உயர்நிலை பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறது?

பூதப்பாண்டி அரசு மேல் நிலைப்பள்ளி........

யார் இந்த சி.பி.?

114 வருடம் வயதான இந்தப் பள்ளி அரசு பள்ளியா...?

அரசர் பள்ளியா..?          

 சர் சி.பி. ராமசாமி ஐயரின் பெயர்  இந்தப்பள்ளிக்கு எந்த வருடத்தில் சூட்டப்பட்டது . ஏன் சூட்டப்பட்டது ? பலரிடம் கேட்டேன்.

 யாருக்குமே தெரியவில்லை.

 சர்.சி.பி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாய் இருந்தவர்.

கன்னியாகுமரி மாவட்டம் 1940-50 களில் கல்வியில் மிகவும் முன்னணியில் இருந்த ஒரு மாவட்டமாக திகழ்ந்தது.

 இதற்கு காரணமே சி.பி தான்.....

1946-ல் அவர் கொண்டு வந்த கட்டாயக் கல்வித்திட்டம் தான்.

 கல்வி ஸ்தாபனத்துக்கு தனி மனிதர் பெயர் சூட்டப்படுவதை விரும்பாத ஒருவரான சி.பி யின் பெயரையே அரசு பள்ளிக்கு வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.....
114 வயதான பள்ளியின் ஆண்டுவிழா 13-02-2012 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
தலைமை திரு.அ.கோலப்பபிள்ளை

  திரு.பெ.ஆறுமுகம்பிள்ளை சிறப்பு விருந்தினர்.....

தலைவருக்கு இவர் ஏன் பொன்னாடை போர்த்துகிறார்..... நான் எங்கள் கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளையிடமே கேட்டேன்.

 அவர் சொன்னார்.“ கோலப்பபிள்ளை சார் அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்த போது நானும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன். என்னுடைய ஆசிரியர்....”

“உங்களுக்கு போட்ட பொன்னாடையை
அவருக்கே போட்டீங்களா...?” நான் கேட்டேன்.

 “ சே...ச்சே.......இங்கிருந்து நிகழ்ச்சிக்கு போகும் போதே எனது 85 வயது ஆசிரியரை கௌரவிக்க வேண்டும் என நினைத்தே நான் பொன்னாடையை வாங்கீட்டுப் போயிற்றேன்....”

திரு அப்துல் கலாம் தான் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோதும்க்கூட பொது இடங்களில் தனது ஆசிரியரை மதிக்கத் தவறியதே இல்லை........

75 வயதுப் பெரிய ஒருவர் 85 வயதான தனது ஆசிரியரை மேடையில் பாராட்டிப் பொன்னாடை அணிவித்தது பெருமைப் படும்படியான நிகழ்ச்சி யென எனக்கு தோணியது........அது நெகிழ்ச்சியானதும் கூட........

 நான் இதனை முடிக்குமுன் சில வரிகள்...........................

 நானும் அவரது மாணவனே.......

S.S.L.C படித்த அந்த சமயத்தில்,
1962-63 ல் நான், கிருஷ்ணன்,சிறமடம் சங்கரன்.......கோலப்பபிள்ளை சாரிடம் Tution
படித்தோம்.  Tution முடிந்ததும் அரசியல் பேசுவார்.அவருக்கு ராஜாஜியைப் பிடிக்கும்.....அதனால் சுதந்திரா கட்சியையும் பிடிக்கும்...... நீல வண்ணக் கொடி...அதன் நடுவில் ஒற்றை நட்சத்திரம்.....ராஜாஜி எழுதும் Swarajya  பத்திரிகையை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்.... நேருவின் கொள்கைகளை ஆதரித்துப் பேசமாட்டார்....நாங்கள் நேர் மாறாக ஆதரித்துப் பேசுவோம்.... பொறுமையாகக் கேட்டு அமைதியாக எங்களுக்கு பதில் சொல்வார்......கோபப்படாமல் அரசியல் பேசுவார்.....

நான் அவரிடம் கற்ற பாடம் ஆங்கிலம்மட்டுமல்ல..... அரசியலும்தான்......

நாகரீகமாகப் பேசவும் , பேசாமல் இருக்கவும் கற்றதே அவரிடம் தான்.....
Posted by Picasa

கேட்காமலேயே கொடுத்த முன்னாள் மாணவர் பொறியாளர் ஆறுமுகம் பிள்ளை

நான் என்னை செதுக்கிய சிற்பிகளை என்றுமே என் மனதில் வைத்துப் போற்றுவேன்......

சிற்பக் கூடங்களும் கோவில் வடிவங்களாகவே இருக்கும் என் இதயத்தில்......

சிற்பிகள் என் ஆசிரியர்கள்.....
.
சிற்பக்கூடங்கள் நான் பயின்ற பள்ளிக்கூடங்கள்......

அ....ஆ.... படிக்க  பள்ளிக்கு அனுப்பினார்கள் அறியாத வயது......

A....B....C....  இந்த வடிவம் எழுத்தாய்  தெரியும் போது   பதினோரு வயது 

எந்தச் சண்டித்தனமும் செய்யாமல் என்னோடு மிகவும் நட்பாய் இருந்த ஒரே பாடம்  கணக்குப் பாடம்.  கணக்குப் பாடத்தோடு  உறவு நெருங்கும் போது என் வயது 15....

 எனக்குப் பிடித்த பாடம் கணக்கு.....பிடித்த பள்ளி பூதப்பாண்டி பள்ளி.....எனை அணைத்து ஆதரித்த அந்த பள்ளிக்கு.... இல்லையில்லை .....கோவிலுக்கு எத்தனையோ முறை போனதுண்டு......

ஆனால் இப்போ போனபோது என்னுள்ளம் என்னைக் கேட்காமலேயே துள்ளி விளையாடியது....

ஆனந்தத்தால் நான் விட்ட மூச்சுக் காற்று கூடஅந்த இடத்தில் நறுமணமாய்... வசந்தமாய்........வீசியது.......

இதுவும் இனபம் தருகிறதே......புதிய அனுபவம் தான்......

எந்த வகுப்பில் கணிதம் படித்தேனோ  அதே வகுப்பறையில் .........

 இப்போ என் வயது 65.

சுவர்களை......தரையை.....பெஞ்சுகளை.....நான் அன்று இருந்த பெஞ்சுதானோ......

Board-ல் என்னவோ வெள்ளை எழுத்துக்களும் படமும் .....

என்னவென்று அருகே  சென்று பார்த்தால்........ ஆச்சரியம் எனக்கு......எனக்கு மட்டுமே அது அதிசயம்......... ஆம்.... எனக்கு மட்டுதான்.

Board-ல் பாத்தது நான் படித்த கணித பாடம்.....Geometry....என் கரம் பிடித்து என்னை வாழ வைத்த பாடம் .... அதன் பிள்ளையல்லவா நான்..... என்னை அன்போடு வரவேற்கிறது

அந்த வகுப்பறைக்கு இப்போ கொஞ்சம் மெருகு கூடி இருக்கிறதே........

காரணம்.....?

கரும்பலகை இருந்த இடத்தில் கரும்பலகை  இல்லை....

அந்த இடத்தில் இருந்தது ஒரு Green colour board...

பசுமையாக காட்சி தந்த Board தான் அந்தப் பொலிவுக்குக் காரணம் .......

உற்றுப் பார்த்தேன்... .......பச்சைப் பலகையா ...... இல்லை .....அது Green Ceramic Board .

ஆச்சரியம் என் கண்களில் நர்த்தனம் ஆடிக் கொண்டே இருந்தது.

  Board  இருந்த சுவரில் கையால் எழுதப்பட்ட ‘அறம் நம்மைக் காக்கும் ’என்ற

வரி மிகவும் பொருத்தமாய் இருக்கிறதே.......

 Board-ல் "Donated by Er.P.Arumugam Pillai.Chairman,S.T.Hindu College,Nagercoil".......

சொல்லவே இல்லையே.....எப்பங்கொடுத்தாங்க .......

வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியாது....... எங்கள் கல்லூரித் தலைவர் கொடுத்தது எஙகளுக்கே  தெரியாது......

அறம் செய்தவர் கடுக்கரையில் இருந்து தினமும் காளை மாட்டு ‘ வில் வண்டி’யில் வந்து படித்த முன்னாள் மாணவர். தான்  படித்த பள்ளி அல்லவா. பூதப்பாண்டியில் போய் பார்க்கிறார் தனது 75-வது வயதில்..... ப்ளஸ் 2  வகுப்பறைகள் அனைத்துக்கும் பசுமை போர்டு கொடுக்க முடிவெடுக்கிறார். பெரியவர்.......கடனே என்று கொடுக்காமல் ஆத்மார்த்தமாக உள்ளன்போடு செய்து முடிக்கிறார்.......

செயல் வடிவம் ஆனபின் தான் மற்றவர்களுக்கே தெரிய வந்தது......

கோவிலுக்கு கொடுப்பது  என்பது வேறு...கடவுள் தருவார். காப்பாற்றுவார்.... எதிர் பார்ப்பு இருக்கும்....

கல்விக்கூடங்களுக்கு கொடுப்பதென்பது வேறு......எந்த எதிர்பார்ப்புமின்றி செய்கிற ஒன்றல்லவா. இது தானே அறம்... அதுதான் காக்கும்.

 கேட்காமலேயே கொடுப்பவன்....... அவன் யார் ?

அவன் தான் இறைவன்......!
Posted by Picasa