Friday, December 26, 2014

Singapore----6 Singapore Flyer....(சிஙகப்பூர் பறக்கும் ராட்டினம்...)



Add caption

18-11-2014 செவ்வாய்கிழமை காலை உணவின் போது பரிமாறிக்கொண்டே “இண்ணைக்கு எங்க போறீங்க” ....எனக்  கேட்டாள் அய்யம்ம மதினி.....


நீங்களும் வாருங்களேன்...நீங்க பாக்காத இடங்களுக்கு நாம எல்லாரும் போலாமே....திட்டம் தயாரானது. அவர்கள் மூன்று பேர் போகாத.... போகணும்னு  ஆசைப்பட்ட  இடங்களான Zoo, River safari -க்கு போக முடிவு செய்து மதிய உணவு தயாரித்து போகத் தயாரானோம்.... நல்ல மழை.... டாக்ஸியில் போனோம்.....சிங்கப்பூர் வெள்ளிகளை அள்ளித் தந்து கொண்டே இருந்தாள் மதினி.ZOO .பார்த்துவிட்டு நாங்கள் சிங்கப்பூர் ஃப்ளையெர்க்குப் போனோம் .இரண்டு டிக்கட்டுகள் 48 வெள்ளி கொடுத்து வாங்கினோம்.....அண்ணனும் மதினியும் வெளியே காத்திருக்க நாங்கள் அசுர ராட்டினம் இருக்கும் இடம் நோக்கிச் சென்றோம்.....காத்திருந்த வேளையில் என் மொபைல் போணின் உதவியால் சிங்கப்பூர் ஃப்ளையர் பற்றி அறிய துளாவிக் கொண்டிருந்தேன்.....

உலகில் மிக அதிகம் உயரம் கொண்ட Giant wheel (165 metre ) இது. லண்டனில் உள்ளதை விட 30 மீட்டர் அதிக உயரம்....இரண்டரை வருட உழைப்பில் உருவானது... 28 பேர்கள் கொள்ளளவு கொண்ட 28 கேபின்கள் உள்ளன,,,,ஒரே சமயத்தில் 784 பேர் கண்டு களிக்கலாம்...அதிக உயரத்தில் இருந்து கொண்டு சிங்கப்பூரைக் கண்டு மகிழலாம்....   பக்கத்துத் தீவான இந்தோனேசியாவையும் காணலாம்........

மிகவும் மெதுவாக நகரும்....எந்த அதிர்வும்  இருக்காது....துவக்க நாளில் ஒரு டிக்கட் 8888 சிங்கப்பூர் வெள்ளிக்கு விற்றது......
படிக்க படிக்க ஆர்வம் கூடியது.படித்துக் கொண்டிருக்கும் போது படித்தவரிகள்  திடீரென பயமுறுத்திற்று... பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள்   விவரிக்கப்பட்டிருந்தது...ஆறுவருடங்களுக்கு முன்பு ராட்டினம் பழுதடைந்து நின்றது. காரணம் கண்ட்ரோல் ரூமில் ஏற்பட்ட சிறு தீ ...... நின்றதால் 173 பேர் அவதிக்குள்ளானார்கள்  உணவும் குடிக்க ட்ரிங்க்ஸும் கொடுத்தார்கள்... இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். ஒரு மாதம் கழிந்தபின்தான் ராட்டினம் சுழல ஆரம்பித்தது.                                            படித்துக்கொண்டிருக்கும் போதே நாங்கள் ராட்டினப் பெட்டகத்தில் ஏறினோம்.அது குளிரூட்டப்பட்ட சின்ன ரூம்...ராட்டினம் நகர்கிறதா.... நகர்வது கண்ணுக்குப் புலப்படவே இல்லை எந்த அதிர்வும் உணர்வும் இல்லை... நாம் நகரும் பூமியில் இருப்பது போல.... ரசித்துக் கொண்டிருந்த நேரம் 45 நிமிடம்  முடிவதற்குள் பயணம் இனிதாய் முடிந்தது...



No comments:

Post a Comment