மகாத்மாகாந்தி கனவு கண்ட தேசம் அவர் வாழ்ந்து மறைந்த நம் நாடு இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட சிங்கார நகர நாடு ஒன்று காந்தி விரும்பிய தேசமாய் திகழ்கிறது…… அங்கே நடுஇரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாய் சாலைகளில் எங்கு
வேண்டுமானாலும் போய்வரலாம். மன உளச்சலின்றி, எந்த விதமான பயமுமின்றி வெளியே
செல்லலாம்…
முதியவர்களையும் மதிக்கும் மக்கள் வாழும் ஒரு தேசம். தேசத்தை நேசிக்கும் மக்கள்……
போகுமுன் அந்தநாட்டைப்பற்றிய தகவல்களை பல தொடர்புகளால்
அறிந்து கொள்ள முன்றேன்…. அறிந்ததனால்
மகாத்மா காந்தி என் மனத்திரையில்
பொக்கைவாயால் சிரித்துக் கொண்டிருந்தார்….
.
எதற்கு இந்தப் பீடிகை….. ஆசை….வெளிநாடு ஒன்று காணவேண்டும்……….
வெளிநாட்டுவிமானத்தில் பயணம் செய்ய வேண்டும்……….இதுபோன்ற எண்ணம் இருந்தால்…….இயன்றால் போய் காணவேண்டிய நாடுகளில் முதன்மையானது சிங்கப்பூர் என்பது தான் அதற்கு காரணம்..
சிங்கப்பூர் நாடா? நகரமா?...... நகரம் என்றும் சொல்லலாம். நாடு என்றும் சொல்லலாம். ஆம் அது ஒரு நகர நாடு. நகரமயம் ஆன நாடு. சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore)
திருவனந்தபுரத்தில் இருந்து நாலரை மணி வான்வழிப் பயணநேர தூரத்தில் உள்ளது ஒரு தீவு . அதுதான் சிங்கப்பூர் .
மலேசியாவின் தென்பக்கமுள்ள இந்த தீவை அதனிடம் இருந்து பிரிப்பது நீர்ப்பரப்பு (ஜொகூர் நீர்ச்சந்தி)…….சிங்கப்பூரை அடுத்துள்ள தீவு இந்தோனேசியா……..
1945-ல் சிங்கப்பூர் ஆங்கிலேயர்களின் கீழ் இருந்து.1963-ல் மலேசியாவுடன் இணைந்து இருந்து……. 1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிநாடானது……இன்று அந்த நாட்டின் மக்கள் தொகை 54 லட்சம்.சார்க் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று..மிகச்சிறியநாடாக இருந்தாலும் தனி நபர் வருமானத்தில் சிறந்ததாக உலகத்தில் மூன்றாம் தர நாடாக உள்ளது..... முதல் பிரதமர் லீ குவான் யூ.....இன்றைய சிங்கப்பூர் செல்வோர் வியக்கும் வண்ணம் இருக்கக் காரணமாய் இருந்தவர்....இன்று அவரது மகன் பிரதமராக இருக்கிறார்.
சுத்தம் என்றால் நினைவுக்கு வருவது அந்த நாட்டு சாலைகள்......சோலையாக ......பசுமையாக..... சுத்தமாக விளங்கும் ஒரு உன்னத நாடு.. குறைந்த குற்றமே(LOW CRIME) கொண்டநாடு.... இவற்றுக்கெல்லாம் காரணம் சட்டங்களும் தண்டனைகளும் மிக மிகக் கடுமையானவை….கொற்றவன் மகன் குற்றம் செய்தாலும் அது குற்றமே.. தண்டனையிலிருந்து தப்புவதென்பது நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று.
சுய ஒழுக்கம் உடைய மக்கள் அந்நாட்டு மக்கள்….
நானும் என் உறவினர் திரு ராசப்பன் அவர்களுடன் சிங்கப்பூர் சென்று வந்தேன்……டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி 23-ல் முடிந்த ஒரு அருமையான வெளிநாட்டுப் பயணம்..... வாழும்நாட்களில் அதனையே அசைபோட்டுக் கொண்டே பொழுதினைப் போக்கலாம்…..
நான் பார்த்தது…….வியந்தது……உணர்ந்தது……பதிவு செய்யப்படவேண்டியவைகள் என்பதால் தொடர்ந்து எழுதுவேன்…………
உங்கள் பதிவுகள் மூலம் நானும் சிங்கப்பூர் பார்த்து விடுகிறேன். தொடர்ந்து வருவேன்!
ReplyDelete