இன்று பங்குனி நாளை விசு
கனி காண கனி வாங்க
சந்தைக்கு போனேன் அழகான பொட்டி
பொட்டி நிறைய கனிகள்தான் . ஆனால்
அத்தனையும் சொத்தை .கேட்டேன் நல்லது
ஒன்றினை .இன்றில்லை என்றான் ......
எனக்கு ஒரே மனக் குழப்பம், என்ன செய்ய என்று.
கனி ஒன்றாவது வேண்டுமே நாளைக்கு....
நானோ நொந்துபோய் எடுத்தேன் உள்ளதில்
நல்ல கனி ஒன்றினை ..கைவிரலில் ஏதோ
ஒன்று பட்டு வட்டமான வடு கருமைநிறத்தில்
சந்தையை விட்டு வெளியே வந்தேன் ...மொழி தெரியா
காவலர் கேட்டார் அடையாள அட்டையை ....
இல்லைஎன்று நான்சொல்ல அவன் எனை புல்லைப்போல்
பார்த்து கேவலப்படுத்தி விட்டு விட்டான்.
கனி எனைப் பார்த்து சிரித்தது ......பின் அந்தக்கனி
எனைக் கேட்டது "இன்று தேர்தல்... ஓட்டுப் போட
எத்தனை மணிக்கு போகப் போகிறாய் ?....கைவிரலில்
கருமை ......போனால் நீ உள்ளே ........அடையாள அட்டையும் இல்லை ..."
ஆஹா ! சொத்தைக் கனியா பேசுகிறது ....நான் கனியைப்பார்த்து,
"கனியே ! உன்னை தேர்ந்தெடுத்த என்னை காப்பாற்றி விட்டாய் "
நன்றி .....நன்றி .......
கனி மீண்டும் பெசியது,” என்னை தெரிந்து எடுத்தாய். நான் செய்த உதவி கூட
எந்திரத்தை அமுக்கி வாக்களிப்பாயே அவன் உனக்கு செய்யமாட்டான்”.
”இது 49 இல்லை........வேறொரு பெயர் வைக்கலாமே.........” கனி தான்
ஆம் சொத்தைக்கனிதான் பேசுகிறது......
No comments:
Post a Comment