மே மாதம் 9 திங்கள் நாள் திருமண மண்டபத்தில் நான்.
கூட்டத்தில் இருந்தாலும் தனியே ஒரே சிந்தனையில்.....
ப்ள்ஸ் டூ ரிச்ல்ட் வருமே .என்னிடம் என்னை மதித்து ஆசிர்வாதம்
வாங்கி எக்ஸாம் எழுதிய சுப்பிரமணி எத்தனை மார்க்கு என்று இன்னும்
சற்று நேரத்தில் போண் பண்ணுவான் ......அதிக எதிர்பார்ப்பில் நான்.
அங்கிருந்த கிருஷ்ணன் என்னைப்பார்த்து என்னருகினில் வந்து ,”சார், என் மகள்
பாசாயிட்டா..”
போண் இன்னமும் வரவில்லயே.....ஏன்...எதிர்பார்த்த மார்க்கு இல்லையோ
மணி பத்தும் தாண்டி விட்டதே....எனக்கோ கோபம்......
நாமே பேசலாமே.... என் பாக்கெட்டில் கைவைத்தேன்....பகீர் என்றிருந்தது.!
அங்கே போண் இல்லை....குப்பென்று வியர்வை... வெயில் கொடுமையும் கூட
என் உறவின நண்பர் தன் போணில் என் நம்பரை அழைத்தார்....வெகு தொலைவில்
ஒருவர் போணை எடுத்து பேசுகிறார்....அவரிடம் போய் கேட்பது சரியில்லை.....
யாரோ அழைத்தார்கள் சாப்பிட ..... சாப்பிட்டேன்....
என் மகன், காரிலும் போண் இல்லை
என்று கூறினான்.அஞ்சு வருடத்திற்கு முன்னால் வாங்கிய ராசியான போண் போச்சே என் மனம் என்னை ஞாபகமூட்டியது.....
சிம் நம்பரை ப்ளாக் பண்ணி புது சிம் வாங்கணும்.... சி்ந்தனை படபட்த்துக்கொண்டே இருந்தது.
காரில் என் அமைதியினால் எல்லோருக்குமே மன இறுக்கம்......
வீட்டின் கதவை என் மகன் திறந்தான்.... நாங்கள் உள்ளே போனதும்
“நமசிவாய..... நமசிவாய.....ஓம் நமசிவாய...”
ஆங்....மேசையின் மீது மின்னிக்கொண்டும் ஒலித்துக்கொண்டும்
என்னை ஏழனமாக பார்த்துக் கொண்டிருந்த்தது......என் மொபைல்.
இந்த உண்மை கதையை படிக்கும் போது, கட்சிகள் கண்முன் வருகின்றன...
ReplyDelete