Wednesday, November 2, 2011

இறைவா இது உன் லீலை தானே

கருவறையில் உயிர்த்த நான் பிரிந்தேன் தாய் முகம் காண
பள்ளிப்பருவம் முடித்தவன் ஊரைப் பிரிந்தேன் கல்லூரி காண
மாவட்டம் மாறினேன் இளங்கலை கணிதம் பயில
மாநிலம்தனை பிரிந்தேன் முதுகலைக்காக...

தாய் வீட்டைப் பிரிந்தேன் சேய் நான் செய்த வீட்டில் வாழ
காலம் ஓடியது இளமை போய் முதுமையில் இப்போ
நாட்டை பிரிந்து வந்திருக்கேன் என் மக்களைக் காண
வியந்து நிற்கிறேன் இறைவா இதுவும் உன் லீலை தானே.

இளமையில் உறவுக்காக வியர்க்க வியர்க்க ஒடிய இவன்
இனியாகிலும் இளைப்பாறட்டும் என நினைத்தாயா இறைவா
இன்னும் எத்தனை நாளோ நானறியேன் உன் கருணை
என்றும் எனக்கும் எந்நாட்டுக்கும் வேணுமே.

1 comment:

  1. சார் நான் உங்கள் மாணவன்.உங்கள் நாட்டுப்பற்று கண்டு மனம் மகிழ்ந்தேன்.

    ReplyDelete