Saturday, April 30, 2011

கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப் பயணம்.....2

படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்…2.by Thankappan Arumugaperumal on Friday, April 29, 2011 at 7:22pm.

……….விமானம் புறப்படுமுன் ஒரு பொம்மை நகர்ந்து முன்னே

சென்றது.....ஓ..ஓ...., பணிப்பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

முன்பகுதியில் உள்ள செயரில் இருந்து சீட் பெல்ட்டை எப்படி

போடவெண்டும் என அவள் அணிந்து காட்டினாள்.....

நாங்கள் போய் இருந்த உடனே அதனை சரியாக மாட்டி ஒரு விதமான

எதிர்பார்ப்பில் இருந்தோம்….என் காதோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை......

மனம் இருக்கிறதே அது ஒரு குரங்கு... விமானத்தின் வேகத்தை விட மன வேக அதிகம்

தான்.”திரு முருக கிருபானந்த வாரியார் சிரித்து விட்டுப் போனார்.”......

நான் என் மனைவியைப்பார்த்தேன்......பூரித்துப்போன முகம்.....விமானம்

மிக மிகச் சரியான நேரத்தில் எங்கள் மகிழ்ச்சியை சுமந்து கொண்டு பறக்க
ஆரம்பித்தது.......பெல்ட் தேவை இல்லையே ....ஒரு கலக்கமும் வயிற்றிலும் இல்லை,முகத்திலும் இல்லை.

ஜன்னல் மூலம் வெளியே மேகக்கூட்டத்தை பார்த்தோம்......

மேகங்களில் முருகனையும் சிவனையும் தேடினாள் என் மனைவி......ஒரு குரல்..... “Do you want anything”…..தண்ணீர் தந்தாள்.

பைசா கேட்க வில்லை..... எல்லாமே ப்ரீயாகத் தருவார்கள்

என்ற நினைப்பில் ஜுஸ் கேட்டாள் என் மனைவி....மறக்காமல்


100 ரூபாய் வாங்கிவிட்டு 2 டின் ஜூஸ் தந்தாள். எங்கள் முன்னால் உள்ள செயரின் பின்னால் அந்த செயரோடு ஒட்டியிருந்த பலகையை மேசையாக்கி அதன் மீது ஜூஸ் டின்னை வைத்து குடித்தோம்....ஒரு வயது பையனின் தாயிடம் மிகவும் பாசமாக எதுவும் தேவையானால் பட்டனை அழுத்துங்கள் என்று கூறிய பணிப்பெண்ணின் பரிவைக் க்ண்டேன். அவள் பேசியது மலையாளம். Jet Airways magazine எடுத்து படிக்க முயன்றேன். முடியவில்லை.....ஜன்னல் என்னை ஈர்த்தது....வெளியே பார்த்தால் எனக்கு ஒரே ஆச்சரியம் கலந்த சந்தேகம்......விமானம் நகரவே இல்லையா?..... மிதக்கிறதா?.... ”ஆம் நகரவே இல்லையே ஏன்” ....என் மனவி என்னைக் கேட்டாள். பள்ளிக்கூடத்தில் படித்த அறிவுப்பொறி என்னைப் பேச வைத்தது......”பூமியும் சுற்றுகிறது.......அதன் மீது நாமும் (விமானம்) பறப்பதால் நிற்பது போல் உண்ர்கிறோம்”....சரியா....தவறா.....தெரியவில்லை ....அவளுக்குப் புரிந்ததா.....அதுவும் தெரியவில்லை.....எப்பொழுதும்போல் புரிந்தது போல் தலையாட்டினாள்.....மெல்ல ஒரு குரல் அறிவிப்பு....’” நாம் இப்பொழுது இவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.சரியான நேரத்தில் 12 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்து விடுவோம்’”......சில நிமிடங்களில் உயரம் குறைந்தது......வெளியே மேகமும் விமானமும் பறந்து கொண்டிருந்தன...என் கையில் இருந்த மேகஸீனை வைக்கவா...எடுத்துக்கலாமா....என் மனைவிக்கு எடுக்க மனமில்லை....அந்தநேரம் அருகில் வந்த Air hostess “ it is only for you, you can take it with you” எனக் கூறினாள். நன்றியோடு எடுத்துக் கொண்டேன். மறுபடியும் வெளியே கடல் குளம் போலவும் வீடுகள் ,தென்னை மரங்கள், பள்ளி.....சின்ன பொம்மைபோல் இருப்பதைக் கண்டு ரசித்தேன்.....ரசித்தோம்......அய்யோ இறங்கச் சொல்கிறார்களே.......மனமில்லாமல் விமானத்தில் இருந்து வெளியே வந்தோம்......என் மனைவி என்னிடம் இன்னமும் ஒரு தடவை விமானத்தில் போகவேண்டும் என கூற ‘சரி’ என்று தலையாட்டினேன்.


வெளியே வந்து என் மகன் சின்னவனைத் தேடினேன்......9.30 மணிக்கே காரில் வீட்டில் இருந்து வந்தவன் பாலராமபுரத்தில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.12.45 க்கு நாங்கள் காரில் பயணம் செய்தோம்.........

ஏன் இவ்வளவு சந்தோசம்....சந்திரமண்டலத்திற்கே போய் வந்தது போன்ற சந்தோசம்...... ஏன்......சிறுபிள்ளையா......முதியவரானால் சிறுபிள்ளைதானோ.......

என் மனைவி ஆசைப்பட்டாள்...... நல்ல மகளாய்,தங்கையாய் ஒரு கிராமத்தில் பிறந்து என் கிராமத்துக்கு வந்து நல்ல மருமகளாய், மனைவியாய் பின் பாசமுள்ள தாயாய் அன்பான மாமியாராய் , பாட்டியாய் தன் வாழ்நாள் முழுவதுமே ”பணிப்பெண்” ணாகவே என் நிழலாகவே இருக்கும் அவள் அடைந்த சந்தோசமே என் சந்தோசம்.......

இளைஞனே! ஒரு விமான டிக்கெட் எடுத்து உன் தாயிடம் தந்தையிடம் கொடு.......நன்றிப்பெருக்கால் துடிக்கும் தழும்பும் அவர்களின் கண்களைப் பார்......ஒரு தடவையாவது அவர்கள்
வானில் பறக்கட்டும்.......நாங்கள் விமான நிலயத்தை அடைந்து உள்ளே போகுமுன் எங்கள் மருமகனிட்ம் நான் கூறிய வார்த்தை“ நன்றி”.......இதைப் படிக்கும் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..... நன்றி.........இன்று தேதி 29 . நான் பிறந்தது இதே நாள் 1947.

No comments:

Post a Comment