கன்னியாகுமரி மாவட்ட
மக்கள் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியிலும் 1947-க்குப்பின் மக்கள் ஆட்சியிலும் வாழ்ந்து
வந்தனர். மன்னர் ஆட்சி என்பது ஒருவர் நாட்டை ஆழும் ஆட்சி. இவருக்கு ஆலோசனைகள் கூறுவதற்கு
சட்டசபை உண்டு. திவான் ஒருவர் மன்னருக்கு உதவியாக இருப்பார்.அவர் திவான் என்று அழைக்கப்படுவார்.
திவானாக இருந்தவர்களில் சர்.சி.பி.ராமசாமி ஐயரும் ஒருவர்.
திருவிதாங்கூர் ஸ்ரீசித்திரைத் திருநாள் பாலராமவர்மா
தமது 19-ஆவது வயதில் 1931-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னராக மகுடம் சூட்டப்பட்டார்.கடல்
கடந்து செல்வது மறுக்கப் பட்ட நிலையில் – அந்த மூடத்தனத்தை எதிர்த்து மேலை நாடுகளுக்குப்
பயணம் செய்து அந்நாடுகளின் வளர்ச்சிதனைக் கண்டு வந்தார்.
கால காலமாக மூடநம்பிக்கையில்
ஆழ்ந்திருந்த பல பழக்கங்களை அகற்ற முற்பட்டார். எல்லா ஜாதியினரையும் கோவிலுக்குள் செல்ல
அனுமதிக்க ‘ஆலயப் பிரவேசனம்” என்ற சட்டத்தை அமல் படுத்தினார். இந்த சட்டத்தைக் கொண்டு
வந்ததற்காக மகாத்மாவால் பாராட்டப்பட்டார்.
காசி
சர்வகலாசாலை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது. 2012 ஆம் ஆண்டு மாமன்னரின் நூறாவது ஆண்டு. இவர் தான் கடைசியாக திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர். 1947-இல் இந்தியாவுடன் இணைந்தது. இணையும் பொழுது கேரளாவில் இருந்த நாஞ்சில்நாடு 1956-இல் தமிழகத்தோடு இணைந்தது.
நான் பிறந்த வருடம் 1947 ஏப்ரல் மாதம்.
நான் பிறக்கும் போது எனது மன்னர் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராமவர்மா
No comments:
Post a Comment