கடுக்கரை ஒரு மலையோர கிராமம்.குமரி மாவட்டத்தில் நாஞ்சில்
நாட்டிற்கு நல்லோர் பலரைத் தந்து பெருமை பெற்ற கிராமம்.
காடுகளும் மலைகளுடன் ஆறுகளும் நிறைந்த ஊர்
கஞ்சியாறும் நல்லாறும் வலம் வந்தோடும் கரையோரமாய்
பச்சைக் கம்பளம் விரித்தால் போல் காணும் இடமெல்லாம்
வாழையும் தென்னையும் நெற்பயிர்-வயல் வெளியும்
காட்சி தரும் அழகான அமைதியான கிராமம்.
எல்லா ஊரையும் காத்திடும் எல்லையம்மன் போல்
எம்மூரைக் காத்திட தெற்கெல்லையில் முத்தாரம்மன்
வட எல்லையில் வாஞ்சையுடன் வாசமிருக்கும் செல்லியம்மன்
காத்திடுவாள் தினமும் அன்னை போல.
செல்லியம்மன் சிலையில் பங்கமென அறிந்து பதறிய
நல்லமனங்கொண்ட ராசப்பன் எனும் ஆறுமுகம்பிள்ளை
பாசமுடன் நேசமாய் சிலைதனை மாற்றிட முன் வந்ததால்
ஊர்கூடி முடிவெடுத்தது கும்பாபிஷேகமும் நடத்திட
திருப்பணிக் குழு உதயமாகி கீழத்தெரு காந்தி அதற்குத்
தலைவருமாகி உதவியாய் ஜெயச்சந்திரன் செயலாளராகி
இராஜேந்திரன் என்ற ஆறுமுகம் பிள்ளை பொருளாளருமாகி
முழுமூச்சுடன் தன் பணிதனைத் துவங்கியது.
ஊர்கூடித் தேர் இழுப்பது போல் நற்பணி செய்யும்
திருப்பணிக்குழுவுக்கு தோள் கொடுத்து உதவினர் ஊர்மக்கள்.
ஊர்முழுக்க உணர்ச்சியாய் உற்சாகமாய் ஊக்கம் கொடுத்தனர்.
கோபுரம் இல்லாக் கோவில் என்ற நிலை மாறி இன்று
கோபுரத்துடன் அம்மன் கோவில் பிரமாணடமாய் காட்சி
தருவது கோவிலின் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் இருக்கிறது.
காண்போரெல்லாம் கண்டு மகிழ்ந்து வியப்புற்று
தன்னை மறந்து வணங்கிப் பாராட்டுகிறார்கள்.
கோபுர தரிசனம் கோடிப் புண்ணியமாமே
தரிசனத்துக்கு கோபுரமே தந்த சித்திரை
தாமோதரன் என்ற சுப்பிரமணியபிள்ளைதம் குடும்பத்துக்கு
எத்தனை புண்ணியமோ.... அந்த உத்தமருக்கு
அத்தனையும் அள்ளிக் கொடுப்பாள் அன்னை.
ஓயாது உழைத்திட்ட கோவில் திருப்பணிக் குழுவுக்கு
தாராளமாய் நிதிதனை அள்ளிக் கொடுத்த ஊராரால்
கோபுரத்துடன் வடக்குவாசெல்லி அம்மன் கோவில்
பேரழகாய் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்
அதுவும் குறைந்த நாட்களில் நிறைவாய் முடிந்ததும்
அன்னையவள் அருளால் தானே....
புதுப் பொலிவுடன் திகழும் வடக்கு வாசலும்
தெற்கு வாசலும் பக்த பெருமக்களை
வா...வா...என்றழைத்து அருள் பெற்றுச்
செல்லுங்கள் என வரவேற்கின்றன
கும்பாபிஷேக நாளாம் தை மாதம் பதினைந்தில்
வருகை தந்து,அன்னையவள் தரும் அருளுடன்
விருந்தினையும் அருந்திச் செல்லுமாறு
திருப்பணிக்குழு அன்பாய் அழைக்கிறது.....
ஓயாது உழைத்திட்ட கோவில் திருப்பணிக் குழுவுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteThank you for the comments. I will convey this to the THIRUPPANIK KUZHU.
Delete