Wednesday, January 25, 2012

கடுக்கரை கோட்டை வாசல்

 
Posted by Picasa

கடுக்கரையில் இருந்து காட்டுப்புதூர் செல்ல இன்று அழகான சாலை இருக்கிறது.சாலை இல்லா அந்த பழைய காலத்தில் அது ஒத்தையடிப்பாதையாய் வயல் வரப்பாய் இருந்தது. கடுக்கரை பழைய மகாத்மா காந்தி நூல்நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் தெரு வழியே வந்தால் ஊரின் கிழக்கற்றம் வரும். அதன்பிறகு வயல்களின் வரப்பு வழியாகத் தான் கீழக்கோயிலுக்கும், கோயில்குளத்துக்கும் செல்ல வேண்டும்.

ஊரில் உள்ள ஆடு மாடு வயல்களில் இறங்கி பயிர்களை தின்று விடாமல் இருப்பதற்காக தெரு முனையில் இரண்டு கல் நாட்டி அடைத்து வைத்திருந்தார்கள். ஆட்கள் மாத்திரமே செல்ல முடியும் அளவுக்கு இடைவெளி இருந்தது.அந்த இடத்தை “கவட்டை” என்று தான் எல்லோரும் சொல்வார்கள்.

காலங்கள் மாறியது. கடுக்கரை கே.எம். ஆறுமுகப்பெருமாள் பிள்ளை அவர்கள் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் போது கடுக்கரை- காட்டுப்புதூர் சாலை உருவானது. அந்தச் சாலைக்கு தலவர்,அவர் தங்கை மீனாட்சிதிரவியம் பிள்ளை, தம்பி கே. எம். மகாதேவன்பிள்ளை-இவர்களது வயல் பகுதிகள் சாலையாக மாறின. பஸ் போக்குவரத்து ஆரம்பமானது. அந்த குறிப்பிட்ட கவட்டைப் பகுதியில் பஸ் நிற்கும்.

பஸ்-க்காக காத்திருக்கும் மக்கள் மழை சமயத்தில் அந்த இடத்தில் நிற்க முடியாமல் சிரமப்பட்டதைப் பார்த்து கீழத்தெரு காந்தி அவர்களும் அவரது சகோதரர்களும் சகோதரியும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு Waiting Shed கட்டினார்கள். கட்டி முடிக்கப்பட்டு 22-4-1996-ல் அவர்களது சிறிய தந்தையார் தெரிசனம்கோப்பு அனந்தபத்மனாபபிள்ளையால் அந்த Waiting shed திறந்து வைக்கப்பட்டது.

“கவட்டை” என்ற பெயரை கடுக்கரை பொன்னப்பன்(ஆறுமுகப் பெருமாள்) கோட்டைவாசல் என்று மாற்றி இன்றும் அனைவராலும் அந்த இடம் கோட்டைவாசல் என அழைக்கப்படுகிறது.

பழைய அந்த புகைப்படத்தை தந்து உதவியது கடுக்கரை ராசப்பன் (Er.P.ArumugamPillai,Chairaman-Secretary,S.T.Hindu College,Nagercoil)

 
Posted by Picasa

No comments:

Post a Comment