Wednesday, January 4, 2012

வீடு கட்டியது இன்னொருவரின் மனையில்....

நானும் ராமுவும் எனது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டு விழா  ஒன்றுக்குப் போனோம்.விழா துவங்க சற்று நேரம் ஆனது . நாங்கள் சும்மா பலவிசயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் .


ராமுவிடம் துவாரகா நகரில் ஒருவர் விடுகட்ட பூஜை போட்டபின் வேலையும் ஆரம்பித்தபின் , அந்த மனை அடுத்தவர் மனை எனத் தெரிந்து நொந்து போன  விசயத்தைக் கூறினேன் .


ராமு என்னிடம் ,' சார், இதை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லட்டுமா ......எனது அண்ணன் ரவி வெண்ணாங்குப்பட்டு என்ற ஊரில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் வேலை பார்க்கிறான் .அவன் என்னிடம் சொன்ன விஷயம் ..."


திண்டிவனத்திற்கும் மரக்காணம் என்ற ஊருக்கும் இடையில் ஷூளம்பேடு  ரோடில் இரண்டு லேயவுட் I -ம் 2 -ம் உண்டு . அந்த இடத்தில் இருவர் மனை வாங்கினார்கள் .ஒருவர்  வாங்கிய மனையின் எண்ணும் இன்னொருவர் வாங்கிய மனையின் எண்ணும் ஒரே எண்.ஆனால் லேயவுட் வேறு.... இருவருமே வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் .580 சதுர அடி மனை .


இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்துகொண்டே தன் உறவினர்  ஒருவரின் உதவியோடு தனது வீட்டைக் கட்டினார். வருடங்கள் சில கழிந்தன.

இன்னொருவர் வீடு கட்ட தனது மனையை வந்து பார்த்தார். லேயவுட்டில் உள்ளது போல் அவர் பார்த்துக் கொண்டே வரும்போது தன் மனையில் கட்டி முடிக்கப்பட்ட விடு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வீடைத் தவறுதலாக அடுத்தவரின் மனையில் வீடு கட்டினது அப்போதுதான் தெரியவந்தது.

இனிமேல் என்ன செய்வது ?.தவறு நடந்து விட்டது.... வீட்டுவரி, மின் இணைப்பு... இவையெல்லாம் எப்படி கிடைத்தது ?

நல்லவர்கள் சிலரின் ஆலோசனைப்படி அவ்ர்கள் இருவரும் பரஸ்பரம் மனையை மாற்றி பத்திரம் பதிவு செய்தனர். பிரச்சினை அத்தோடு முடிந்தது.

நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம் தான் என ராமு கூறுகிறார்.

No comments:

Post a Comment