Thursday, January 12, 2012

திருவண்ணாமலை -கிரிவல நாளில் நாங்கள்

நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனுவரி மாதம் கிரிவல நாளில் திருவண்ணாமலைக்குப் போய் மலையைச் சுற்றி,நடக்க வேண்டும் என எண்ணினோம். பஸ்ஸில் போகலாமா அல்லது ரயிலில் போகலாமா ?  ஒரு வேன் பிடித்துப் போகலாமா ? எப்படிப் போவது ?

வேன் பிடித்துப் போகலாம் என்று முடிவானது. அகிலம் ட்றாவல்ஸ் -ல் போய் விசாரித்ததில் உங்களுக்கு எந்த வண்டி வேணும்? எத்தனை பேர் போறீங்க ? எனக் கேட்டார்கள் . எத்தனை பேர் என சொன்னதும் டெம்போ traveller வசதியாய் இருக்கும் என்று சொன்னார்கள் .

ஒருகிலோ மீட்டருக்கு 14  ரூபாய் என்று சொன்னவர்கள் 13 .50  க்கு சம்மதித்தார்கள் ( A.C  வண்டி ) .


எங்கள் பயணம் ஜனுவரி மாதம் 7  சனிக்கிழமை காலை 8 .30  மணிக்கு  துவங்கியது. டிரைவர் பெயர் C .T .குமார் @ துரை.

நாங்கள் திருச்சி வரை போய் அங்கிருந்து சென்னை சாலையில் உடுமலைப்பேட்டை க்கு பத்து கிலோ மீட்டருக்கு முன்னால் ஒரு மேம்பாலத்தின் அடிப்பக்கம் உள்ள இடது கைப் பக்கம் உள்ள சாலை வழியாய் போனோம்.

திருவண்ணாமலை செல்லும் வழி என அறிவிப்புப் பலகை எதுவம் இல்லை.வழியில் நின்ற போலிசிடம் கேட்டு உறுதி செய்தபின் தான் போனோம் .
 அன்னை சாரதா மடம் இடது பக்கத்திலும் வலது பக்கத்தில் அன்னை சாரதா கலைக்கல்லூரி இருப்பதுதான் நாம் திருவண்ணாமலைக்கு இடது பக்கமாக  செல்ல அடையாள இடமாகக் கொள்ள வேண்டும்.

திருக்கோயிலூர் போகாமலே திருவண்ணாமலைக்குப் போய் விடலாம். நாகர்கோவிலில் இருந்து 570.5 km தூரம்.

நாங்கள் போன நாள் கிரிவல  நாள்  ஆதலால் தங்குவதற்கு அறைகள் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனாலும் நண்பர்கள் வித்தியாசாகர், ராஜமாணிக்கம் உதவியினால் நல்ல வசதியான ஒரு ஹால் கிடைத்தது . அது நண்பர் ராஜமாணிக்கத்தின் சொந்த வீடு.

 நாங்கள் 13 பேரும் சென்னையில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் வந்த 6 பேர்களும் வசதியாக இரண்டு நாட்கள் தங்கி 9-ம் தேதி காலையில் புறப்பட்டு மாலையில் 6 மணிக்கு நாகர்கோவில் வந்து சேர்ந்தோம்

 8 -ம் தேதி மாலையில் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் நடந்தோம் .

சுகமான யாத்திரை.

1162 km  என கணக்கு பார்த்து ,டிரைவர் பேட்டா 600 ரூபாய் என 16100 /- வேனுக்கு செலவு ஆனது .மற்றபடியான செலவு toll க்கும் சேர்த்து 6378 ரூபாய் ......நாங்கள் 13  பேர் போனோம் .ஒரு ஆளுக்கு 1730 /- ரூபாய் .


Toll  செலவு விவரம் :-


நாங்குநேரி (65 +65 ),SPUDHUR(கயத்தார் பக்கம் )( 40 +40 ) ,ETURVATM (40 +40 ) ,மதுரை Corporation ( 75 +75  ) , Chittampatti (50 +50 ),பூத்குடி (50 +50 ),சமயபுரம் (35 +35 ),
திருமன்துறை (40 +40 )......Total :- 790 /-






No comments:

Post a Comment