என் மகனுக்கு எழுதிய கடிதம். எழுதியவை எல்லாமே இரவல்
Dear Dinesh,
அப்துல்கலாம்-ன் அக்னிச்சிறகுகள்—புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.24-June.2000-ல் சென்னையில் நீ வாங்கியது
அப்துல்கலாமின் தந்தை தன் மகனிடம் கூறிய அறிவுரை
“அபுல்..! முன்னேற்றம் காண்பதற்காக நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு கூடு கூட இல்லாமல் தன்னந்தனியாக வானவெளியில் நாரைப் பறக்கவில்லையா ? உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியே தீரவேண்டும். எங்களுடைய அன்போ தேவைகளோ உன்னைக் கட்டுப்படுத்தி வைக்காது”......பக்கம் 36
கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள்: “உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள் அல்ல. தமக்காகவே ஏங்கிக் கொண்டு இருக்கும் வாழ்க்கையின் வாரிசுகள் அவர்கள்.உங்கள் மூலமாக வந்தவர்கள், அவர்கள். ஆனால் உங்களுக்குள் இருந்து வரவில்லை.அவர்களிடம் நீங்கள் உஙகள் அன்பை வழங்கலாம் .ஆனால் ,உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சுய சிந்தனை கொண்டவர்கள்,அவர்கள்.”..பக்கம் 36
ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் ,ரயில் ஏற்றியபோது அப்துல்கலாமின் அப்பா சொன்னது: “உன்னுடைய உடலுக்கு இந்த ராமேஸ்வரம் தீவு இடமளித்திருக்கலாம். உன் ஆன்மாவுக்கு அல்ல. எதிர்காலம் என்ற வீடுதான் உன் ஆன்மாவின் வசிப்பிடம். ராமேஸ்வரத்தில் இருக்கும் நாங்கள் யாரும் அங்கு வரமுடியாது. கனவில்கூட அது நடக்காது. கடவுள் உனக்கு அருள்புரியட்டும்,என் செல்வமே....”பக்கம் 37
“வீட்டு ஏக்கம் என்னை வாட்டினாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தேன். மூலகாரணம் என் அப்பா”....பக்கம் 38
“வாழ்க்கையில் வெற்றி அடையவேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றால் ஆசை,நம்பிக்கை,எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளை புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகிவிட வேண்டும்”....பக்கம் 40
“மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்”

2001ல் குவைத் போனவுடனேயே நான் திரும்பி வந்துவிடுவேன் என்று கூறியவுடன் அப்பா எனக்கு எழுதிய கடிதம். இக்கடிதத்தினை படித்தவுடன் எனக்கு அந்த எண்ணமே வரவில்லை. இக்கடிதத்தினை பார்த்த என் அன்பு நண்பர் ஹாரூன் கடிதத்தின் நகல் தனக்கும் வேண்டும் என்று எடுத்து கொண்டார்.
ReplyDelete