வழக்கம் போல் கடுக்கரைக்கு போய் ராஜேந்திரன் வீட்டில் நான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கையில் ஒரு தோல் பையுடன் அங்கு வந்தார். பார்த்தால் சீட்டுப் பணம் வசூல் செய்பவரைப் போல் தோற்ற மளித்தார்.அவரை அதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை.
அவர் தோவாளை ஊரைச் சேர்ந்தவர் என்றும் பலரை காசிக்கு அழைத்துச் செல்பவர் எனவும் அறிந்து கொண்டேன்.
அவர் மே மாதம் காசி செல்ல விரும்புபவர்கள் பெயரையும் அதற்குண்டான கட்டணத்தையும் வாங்குவதற்காக வந்திருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னரே இரயிலில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் ஜனுவரி மாதம் முன்பதிவு செய்யவேண்டும்.அதுக்குப் பணம் வேணுமே. பணம் வாங்குவதற்காக அங்கு வந்தார்.
எத்தனை பேரைக் கூட்டிக்கொண்டு போகிறார் என்ற என் கேள்விக்கு 80-க்கும் அதிகம் என்ற பதில் கிடைத்தது. கடுக்கரையில் இருந்துதான் கூடுதல் ஆட்கள் என்றும் சொல்லப்பட்டது. அழைத்துக் கொண்டு செல்பவரைப் பற்றி மிகவும் புகழ்ந்தும் சொல்லப்பட்டது.
அவரது பெயரென்ன?
“காசி முருகன்”.
காசி சிவனைத் தரிசிக்க வருடம்தோறும் ஆட்களை அழைத்துச் செல்வது ஒன்றே இவரது பிரதானப் பணியாய் இருப்பதால் இவர் பெயரோடு காசியும் ஒட்டிக் கொண்டது.
காசி முருகன் என்னிடம் பேச ஆரம்பித்தார்.
“நீங்க காசிக்குப் போயிருக்கிறீர்களா ?”
“ஆமாம் 2009 -இல் போயிருக்கேன்.”
இந்த சந்திப்பு நடந்த மாதம் ஜனுவரி 2012. அந்த நாளில் என் மனைவியும் கடுக்கரைக்கு என்னுடன் வந்தாள். காசி முருகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவள் என் அருகில் இருந்தாள். அவளுக்கு காசிக்குப் போகணும் என்ற ஆசை அரும்பியது. மெல்ல என்னிடம் , காசிக்கு நாமும் போலாமா? என்று கேட்டாள்.
“நீ வேண்டுமானால் போயிற்று வா. நான் வரவில்லை ”என்றேன்.
நான் சொன்னதை நிராகரிக்கும் மன நிலையிலேயே இருந்த அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
அவளை சமாதானப்படுத்தும் விதமாக ,“ இப்பந்தானே போயிட்டு வந்திருக்கோம். கொஞ்சம் பொறுத்துக்கோ. விமானத்தில் இருவருமே அடுத்த வருஷம் போலாம். போனதடவைப் போகும் போது எவ்வளவு கஷ்டப்பட்டோம்.”
காசிமுருகன் விடை பெற்றுப் போனபின், அக்டோபர் மாதம் காசிக்குப் போனால் சீதோஷ்ணநிலை நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொன்னார்.
நான் சொன்னேன். “அதிக எண்ணிக்கையுடன் அவர் அழைத்துக்கொண்டு செல்வதால் பல சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கூடுதல். மனதளவில் எனக்கு இஷ்டம் இல்லாமல் இருந்ததால் இது போன்ற பயணம் வேண்டாம்.”
”நீ அக்டோபர் மாதம் எங்களுடன் காசி யாத்திரைக்கு வா.நானும் அந்த டூரில் உண்டு. ஜுன் மாதம் பேரு கொடுத்தாப் போரும் . கண்டிப்பா வாருங்க. நிச்சயம் இந்த தடவை உங்களுக்குப் பிடிக்கும்” என்றார் ராஜேந்திரன்.
”அதெல்லாம் சரி! யார் நம்மை காசிக்கு அழைத்துக் கொண்டு போகிறார் ? முதல்ல அதைச் சொல்” என்றேன்.
பெயர் சொன்னான்.
பெயரைக் கேட்டதும் நிச்சயம் நாங்கள் வருவோம் என்று சொன்னேன்.
ஜுலை மாதம் எங்கள் பெயர்களையும் போட்டோவுடன் இணைத்து அவரிடம் கொடுத்தோம் . ஒரு ஆளுக்கு 3800 /- Senior citizen என்றால் 3500/- ருபாயும் கொடுத்தேன். பயண நாள் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி.
புண்ணிய யாத்திரை ஆரம்பம் ஆனது.

காசி பயணமா? உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்....
ReplyDeleteword verification எடுத்து விடுங்களேன். கருத்திட தொந்தரவாக இருக்கிறதே....
ReplyDelete