காலையில் அஞ்சரை மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுப் போகணும்னு நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்தாலும் ஆறரை மும்பை ரயிலைப் பிடிக்கப் போய் சேர்ந்த நேரம் ஆறு பத்து.
காலையில் வந்து சேர்ந்த ஏதோ ஒரு ரயில் காரணமாக நாகர் கோயில் ரயில்நிலையம்வெளியே பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் வந்து கொண்டிருக்கும் கூட்டம் கலைந்து கரைந்துபோக சிறிது காலநேரம் கூட அதனால் காரை நிறுத்த வேண்டிய நேரத்தில் நிறுத்தி ,நிறுத்தக் கூலி கொடுத்து முடிக்கவும் நேரம் அதிகமானது.
பிளாட்பாரம் டிக்கட் எடுக்க நீண்டவரிசை. ராமு வரிசையில் போய் நின்றான். நகர்ந்து போன வரிசையின் இடையே நுழைய முற்பட்ட முகம் தெரியாத யாரையோ ஒருவன் திட்ட அவன் பரிதாபமாய் வாரிசயின் வால் பக்கம் போய் நின்றான்.ராமு சுவர் அருகே நெருங்கிக் கிட்டே போனதும் சில்லறை இல்லையே என அதிர்ந்து ராமு பரக்க பரக்கப் பார்த்து விழியால் என்னைத் தேடினான்.
நான் லக்கேஜை தனியே விட்டுப் போக மனமில்லாமல் சிறு தூண் போல் நின்றிருந்தேன். ஒருவழியாக பிளாட்பாரம் டிக்கட் எடுத்துவிட்டு வெளியேவந்தபோது மணி 6.20
“மூன்று புறப்படுப்பாதைகள்” உண்டுமே. நம்ம ரயிலில் எதில் இருந்து புறப்படும். அங்கையே டிக்கட் தந்தவரிடமே கேட்க முற்பட சுவரில் ஒட்டப்பட்டிருந்த தாள் தந்த அறிவிப்பால் அவரிடம் கேட்கவில்லை.அவரைக் கேட்டால் சொல்ல மாட்டார் என்பதனைப் புரிந்து கொண்டேன்.
கேட்டால் சொல்வதெற்கென்றே ஒருவர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றேன்.
அவர் இரண்டாம் மேடையருகே நிற்கிறது எனத் தகவல் சொன்னார்.
படியேறி செல்லும் கடத்துப் பாதை வழியே அந்த ரயிலை அடந்து விடலாம்.ஆனால் மறுபடியும் அந்தத் திசை போகவிரும்பாமல் எதிர் திசையான தெற்கு நோக்கிச் சென்றோம். பரபரப்பும் படபடப்பும் மெல்ல என் உடலில் பரவ ஆரம்பித்தது.
இனிமேல் இப்படி வராமல் ஒரு மணிக்கூருக்கு முன்னால் வந்து விடணும். அது தான் safe.
முதல் நடை மேடையின் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் ரயிலில்
ஏறி மறுபக்கம் இறங்கினால் நம் ரயில் தானே அங்கு நிற்கிறது.
அதில் ஏற நினக்கும் போது கூடவே பயமும்- ரயில் கிளம்பிவிட்டால் என்கிற பயம் வந்ததால் என் நடை தொடர்ந்தது. விரைவாக....இல்லை...மிக விரைவாக நடக்க என்னிடம் ராமு சொன்னான்.”சார்! பயப்படாதீங்க சார். இந்த ரயில் ஒருநள் கூட சரியான நேரத்துக்குப் போனது கிடையாது......” ஆனாலும் என் நடையின் வேகம் குறையவில்லை.
பயந்தது போலவே கடக்க நினைத்த ரயில் மெல்ல முன்னோக்கி நகர ஆரம்பித்தது.
வால் பக்கத்துப் பெட்டியில் இருந்து மூன்றாம் பெட்டி தான் நான் ஏறவேண்டிய ரயில் பெட்டி. பெட்டியின் முகம் என் முகத்தைச் சுளிக்க வைத்தது.
வாசல்பக்கம் ஒட்டி இருந்தக் கணினித் தாள் என் இருக்கையை உறுதிப் படுத்தியது.
மணி மிகச் சரியாக 6.30. எனது ரயில் - இந்திய ரயில் உறுமிக் கொண்டே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. அது ராமுவை பார்த்துதான் உறுமியதோ .....

No comments:
Post a Comment