வெள்ளிக்கிழமை செப்டெம்பர் 30 காலையில் மங்காஃப் என்னும் இடத்திலேயே வேறு ஒரு Flat க்கு நாங்கள் மாறி தாமசத்துக்குப் போனோம். ஒரு ஹால்,2 ரூம். ,கிச்சன்,பாத்ரூம்…..
வாடகை முதலில் கொடுக்கணும். டெப்பாசிட் கிடையாது.Current,தண்ணீர் எல்லாவற்றுக்கும் தனியாக கொடுக்க வேண்டியதில்லை.வீடு முழுவதும் AC .குளிர் சமயத்தில் ஹீற்றர் தேவைப்படும் அதுவும் இருக்கிறது.
இங்கு வேலைசெய்யும் வெளிநாட்டினர் திருமணம் ஆகி மனைவியை குவைத்துக்கு தன்னுடன் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்றால் 250 KD சம்பளம் இருக்க வெண்டும். வீட்டு வாடகை மிகவும் அதிகமாக இருப்பதால் பொதுவாக இரண்டு குடும்பங்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள்.
நாங்கள் குவைத்துக்கு வரும்போது தினேஷுடன் தினேஷின் நண்பர் குடும்பமும் இருந்தது..வசதியாக வீடு கிடைத்தால் வீடு மாறிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும்போது ஏற்கனவே இருந்த மங்காஃபிலேயே வீடு கிடைத்ததால் வீடு மாறினான்.
நாங்கள் பழைய வீட்டில் இருக்கும்போது நண்பரது குடும்பம் நாகர்கோவிலில் இருந்தது. அதனால் நாங்கள் இங்கு இருக்கும்போது மிகவும் வசதியாக இருந்தது. அவர்களும்அக்டோபர் மாதம் வந்துவிடுவார்கள் எனத் தெரிந்த உடன் வீடு மாற முடிவு செய்தோம்.வீடும் பிடித்தமான இடத்தில் கிடைத்துவிட்டது.
வீட்டுக்கு வேண்டிய தேவையான furnitures வாங்கணும். இங்கிருப்பவர்கள் பொதுவாக விலை அதிகம் கொடுத்து வாங்க விரும்புவதில்லை. வாங்கினால் ஊருக்கு கொண்டு போகமுடியாதென்பதால் பழைய மேசை,கப்போர்டு……தான் வாங்குவார்கள்.இப்படி வாங்குவதற்கென்றே FRIDAY MARKET இருக்கிறது .
அந்த இடத்தில் வெள்ளிக்கிழமை தான் பொருட்கள் கிடைக்கும். மகாதேவனின் காரில் போய் அடுக்களையில் வைக்க ஒரு மர மேசை,ரூமில் வைக்க steel cupboard,கட்டில்,சாப்பாட்டு மேசை, புதிய மெத்தை எல்லாம் வாங்கினோம்.
புத்தம்புதிய வீடு. 19-ம் நம்பர் வீடு.புதிய சூழ்நிலை.நாங்கள் தான் அந்த வீட்டுக்கு வந்த முதல் குடும்பம்.வீட்டின் தரையில் கார்பெட் எல்லாம் நம் செலவில்தான் போடணும்னு சொன்னதால் அதையும் தினேஷ் தன் செலவிலே போட்டான். போட்டவன் ஒரு பெங்காளி.
நெட் கணெக்ஷன் கிடைக்க ஒரு வாரம் ஆகிவிட்டது.அதை தந்தவன் ஒரு பாகிஸ்தானி.
No comments:
Post a Comment