என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்
Friday, September 30, 2011
புத்தேரி தினேஷின் மகன் பகவத்தின் பிறந்த நாள்
என் மகன் தினேஷ் ,“ புத்தேரி தினேஷ் அவரது மகனின் பிறந்த நாள்-க்கு உங்களையும் கூட்டிற்று வரச்சொன்னார்.இங்கு கோஹினூர் ஹோட்டலில் வியாழக் கிழமை சாயந்திரம் 7 மணிக்கு போணும்”.
என்னுடைய அனுபவத்தில் இது ஒரு புது அனுபவம். அதுவும் முதல் அனுபவம். மறக்க முடியாத அனுபவம். விழா நடந்த இடம் வெளிநாடாக இருக்கலாம்.உள்ளே நுழைந்ததும் பல தெரிந்த முகஙகள்,கடுக்கரை,தோவாளை,புத்தேரி,சீதப்பால்,பறக்கை .சுசீந்திரம் ஊர்களில் இருந்த அனைவரையும் கண்டேன்....நாகர்கோவிலில் இருந்தது போன்ற உணர்வு தான் இருந்தது.
எங்கள் பக்கத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தார்.என்னிடம்,“ நல்லா சாப்பிடுங்க...நாம் தான் சாப்பிடணும்...அப்பம்தான் சார் மிச்சம் ஒன்ணும் இருக்காது....”
பெப்பர் சிக்கன் திங்கணுமே..... நல்லா இருந்தது...நான் போய் எடுத்து வந்தேன்...
அழகான அரங்கத்தில் குமரி மாவட்டமே சங்கமமாய் கூடிய அந்த நாளில் நான் ஒருவனே 65 வயது இளைஞன்.
Face book -ல் பார்த்து ராமனாதன் சோணாசலம் குவைத்தில் இருப்பதாக அறிந்து கொண்டேன்.அவனை பார்க்கணும் என்று என் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.ஆனால் அது சூழ்நிலை காரணமாக பார்க்க முடியவில்லை.
நான் அரங்கில் நுழைந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் என்னருகே வந்து வணக்கம் சொன்னார்.
நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.அவர் தான் ராமனாதன்.அவரது ஊரும் எனது ஊர் என்பதால் நாங்கள் இருவரும் அதிக நேரம் பெசிக் கொண்டிருந்தோம்.அவருடைய அப்பா,தாத்தா......பழைய ஆட்கள் பற்றியே பேசி மகிழ்ந்தோம்.
நேரம் ஆனதால் எல்லோரும் விடை பெற்று சென்று கொண்டிருந்தார்கள் .
புத்தேரி மாதேவன்பிள்ளையிடம் ,“இங்கே வந்திருப்பவர்களில் பாதிக்கும் மேல் உங்களால் தான்....எனக்குத் தெரிந்து நம்ம ஒசரவிளையைச் சேர்ந்த O.P.K பிள்ளை தான் நிறைய பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கார்.அவருக்கு அடுத்தது நீங்கள் தான்...”.
பிள்ளையிடம் விடை பெற்று,தினேஷிடமும் விடை பெற்று வெளியே வந்தால் , ஓஓ..ஓ நாம் இவ்வளவு நேரமும் இருந்தது குவைத்திலா....
தோவாளை மகாதேவனது காரில் வீடு வந்து சேர்ந்தோம்.மிகவும் சந்தோசமாய் இருந்தது...
Subscribe to:
Post Comments (Atom)
i am from osaravilai. happy to read about the great opk pillai thhatha.
ReplyDelete