Saturday, March 3, 2012

என்றோ ஒரு நாள் நடந்த சம்பவம் இன்றென் நினைவில்

Posted by Picasa

நான் இந்துக்கல்லூரியைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்ணத்தில் என்னிடம் கிடைத்த ஆண்டுமலரைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1976-77-ம் ஆண்டு மலரின் ஒரு பக்கம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
ஆசிரியர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்ட விவரம் ஒன்றினைக் கண்டேன்.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.35 வருடங்களுக்குப் பின் பார்த்து படித்ததும் நான் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை....பரிசு வாங்கின நாளில் கூட இந்த அளவு சந்தோசப்பட்டேனா....... தெரியவில்லை.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் வந்து போகிறது.

என் நினைவலையில் வந்த ஒன்று........ April மாதம் கல்லூரிக்கு விடுமுறை....ஆனால் பையன்களுக்கு Examination நேரம். முதல் ஆண்டு B.Sc கணித மாணவர்களை Extra class எடுப்பதாகச் சொல்லி விடுமுறை நாளில் வரச் சொல்லி இருந்தேன்.அது தான் கடைசி class.
அதே நாளில் துறைத்தலைவரும் அந்த class மாணவர்களை அவரது extra classs-க்கு வரச் சொல்லவே பையன்கள் நான் ஏற்கனவே class வைத்திருப்பதாக சொன்னதும் ..........அவர் சற்று யோசித்து,” உங்களுக்கு வேற நாளும் இல்ல. அதனால நீங்க மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்திருங்க” என்று சொல்லி விட்டார்.
துறைத்தலைவர் எனக்கு நெருங்கிய உறவினர். அவர் என்னிடம்,” நீ class எல்லாம் முடிச்சாச்சுன்னுல்லா சொன்ன......அப்பறம் எதுக்கு Extra claas........"

நான் ,” இரண்டு வருட பழைய question paper-ல் உள்ள கணக்குகளை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கணும்.அதனால தான் வரசொன்னேன்”

மாலையில் கடுக்கரைக்குப் போனேன். நான் அப்போது ஊரில் இருந்து தான் கல்லூரிக்கு வருவேன்.

வீடு போய் சேர்ந்ததும்  மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த எனது அத்தை அதாவது என் அப்பாவின் தங்கையின் வீட்டுக்குப் அவங்கள பார்க்கப் போனேன்...........மிகவும்  serious condition..... நான் அங்கேயே இருந்தேன். 

எனது அத்தை...........அவளது கடைசி மூச்சு நிற்கிறது.........

 வெகுநேரம் நின்றுவிட்டு  எங்க வீட்டுக்கு போனேன்.

அப்பா வீட்டில் தூங்காமல் இருந்தார்.

நான், ”அப்பா!..... நீங்க ஏன் கீழத்தெருவுக்கு வரல்ல”

அப்பா,” என்னத்தப் போய் பாக்க ......தம்பி அய்யாவு போயிற்றான்.......இப்பம் இவளும் போயிற்றா ........ என்னோட வயசு குறஞ்சவள்ளா......நான் கல்லு மாரி இருக்கேன்......” சொன்ன அப்பாவின் கண்ணில் கண்ணீர் வடிகிறது.அது என் நெஞ்சையும் என்னவொ செய்வது போல் இருந்தது .

அப்பாவிடம் நாளைக்கு கல்லூரிக்கு கண்டிப்பாக நான் போயே ஆக வெண்டும் என்ற நிலமையைச் சொன்னேன்.

“நீ போய் க்ளாசை எடுத்து முடிச்சுட்டு வந்துரு.......மத்தியானத்துக்குப் பிறகு தானே இறுதி சடங்கெல்லாம் இருக்கும்.......”

காலையில் கல்லூரிக்குப் போய் எனது வகுப்பை நான் நடத்திக் கொண்டிருந்தேன்.துறைத் தலைவர் வந்தார்.

அவர் என்னை வெளியே அழைத்து,” பொன்னப்பா!..... நீ  வரமாட்டன்னுல்லா நினைச்சேன்........வந்துற்றியே...... நீ எத்தனை மணி வர class எடுப்ப.......எனக்கு அரை மணிக்கூர் வேணும்.....”

நான் 12 மணி வரை பாடம் நடத்தி விட்டு கடுக்கரைக்குப் போனேன்.

நான் கல்லூரிக்குப் போனதும் வந்ததும் யாருக்குமே தெரியாது........என் அப்பாவைத் தவிர.........  

1 comment:

  1. இன்று நான்கு வருடங்களுக்கு முன்னால் பதிவு செய்த வரிகளைப் படிக்கும்போது கண்களின் ஓரம் ஈரமானது.

    ReplyDelete