Thursday, March 8, 2012

பேராசிரியர் எல்சி சாரின் அன்பு மாணவர் தே.வேலப்பன்......

  பேராசிரியர் L.C.தாணு சாரின் 36-ஆவது இந்துக் கல்லூரி ஆண்டு விழா 1987-88
அறிக்கையைப் படித்தேன்.அதுதான் அவரது இறுதி அறிக்கையும் கூட. அந்த ஆண்டில் ஓய்வு பெறுகிறார்.

அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் அவர் தனது
முதல் வகுப்பு அனுபவத்தினை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“ I recollect the first hour of the very first day when I stepped on to the platform and began my experiment with teaching; Dr.D.Velappan was a pet student of mine belonging to the first batch."................
மேலும் பலரது பெயர்களைக் குறிப்பிட்டு நன்றிதனை பகிர்ந்த போது தனது முதல் மாணவருக்கும் இவ்வாறு நன்றி சொல்கிறார்......“ It is my pleasant duty to offer a thousand and one thanks to Dr.D.Velappan,our unassuming Vice-Principal .His identification with the instituion is so absolute that its prosperity has become the breath of his nostrils. With such a "magnificiant obsession",he has stood by me through thick and thin.as firm as rock. Indeed he is a self-effacing rare specimen of humanity.

அந்த ஆண்டுமலரின் Editor வேலப்பன் சார் தனது Editorial--ல்

" For others  one more year has silently slipped away .But for the STHC  and its esteemmed Principal L.C.Thanu,not a year but an era has slipped away. Principal Thanu has been with the STHC since its inspection (1952) and he retires this year (1988). The campus may miss very much that stately figure,stentorian voice,spotless courtesy,sportly demeanour,spontaneous generosity and sempiternal affection.His association with the STHC is so intimate and total that he has been the air,the aura of STHC.
yet (and. so) parting is always painful." Editor.....  மொத்த எடிட்டோரியலே இவ்வளவுதான்.

1986-87 ஆண்டு மலரில் இந்துக்கல்லூரி இதழியல் மாணவர்களுக்கு எல்சிசார் அளித்த பேட்டியை வெளியிட்டிருந்தார்கள்.....

 ஒரு கேள்விக்கு எல்சி சார் சொன்ன பதில்:-

” ‘நல்லாசிரியர் விருதை’ எனககுக் கிடைத்த பெருமையாக நான் எண்ணவில்லை. நான் பணியாற்றும் இந்துக் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட பெருமையாகவே கருதுகிறேன்...........”

இன்னொரு கேள்விக்கு ....

“கல்லூரி தொடங்கிய முதல் நாள் முதல் வகுப்பில் என் ஆசிரியப்பணி தொடங்கியது. கல்லூரி ஆரம்பித்த அன்று காலை 10-11 முதல் வகுப்பு நடத்திய  பெருமை எனக்குண்டு. புதிய கல்லூரியில் புதிய ஆசிரியராக முதல் நாள் முதல் வகுப்புக்குச்சென்ற நிகழ்ச்சி இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. கல்லூரியே உற்சாகச் சூழலில் விழாக்கோலத்தில் இருந்தது. மாணவர்கள் -ஆசிரியர்கள்- நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என கல்லூரி முழுவதும் வெற்றிக் களிப்பில் இருந்தது.................முதல் நாள் முதல் வகுப்பு நடத்தினேன் என்றதும் ஞாபகத்திற்கு வருகிறது. என்னுடைய முதல் மாணவர் யார் தெரியுமா? இப்போதைய நம் உதவி முதல்வர் டாக்டர் தே.வேலப்பன்
என்னுடைய முதல் மாணவர்.”

1957-58 கல்வி ஆண்டின் ஆண்டுமலரில் ,கல்லூரியில் புதியதாக ஆசிரியப்பணிக்கு சேர்ந்தவர்கள் பெயர்களின் பட்டியலை வாசிக்கிறார் கல்லூரி முதல்வர் V. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள்.அதில் கடைசிப் பெயர் D.Velappan.,Tutor in Economics.

 " The last mentioned ,I may say with pride is an old boy of this College."  என தன் உரையில்
பெருமிதத்தோடு குறிப்பிட்டார் அந்த முதல்வர்.

1957-1958 ஆண்டுமலரில் அவர் எழுதிய கட்டுரை Delhi vs Madras...  Recently Sri.C.Desmukah revealed the fact that Madras is one of the poor states of India.............The total revenue of the state in the year 1953-54 was Rs.64.9 crores.........இதுதான் அந்த கட்டுரையின் ஆரம்பவரிகள்.....

1957-ல் தான் பயின்ற இந்துக்கல்லுரியிலேயே ஆசிரியப்பணியை ஆரம்பிக்கிறார் அந்த மாணவர்.......அதுவும் அவரது முதல் பேராசிரியர் போதித்த பொருளாதார ஆசிரியராக.... அத்துறைத்தலைவராக, துணைமுதல்வராக, முதல்வராக..... எல்லாமே பேராசிரியர் பயணித்த பாதையிலேயே பயணித்து ஒய்வுக்குப்பின் அவரைப்போலவே இவரும் நிர்வாகக் குழுவிலும் இயக்குனராக இருந்தார்.

அவர்தான் இரவிபுதூர் தேனாவேலப்பன் என்றழைக்கப்படும் DV சார்.....

கல்லூரி Emblem-தனை விவரித்து இயற்றிய DV சாரின் கவித்துவமான வரிகள்
“கல்லூரி வாழ்த்து" என்னும் தலைப்பில் கல்லூரி Hand Book--ல் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

1961-ம் ஆண்டு கடுக்கரை கிராமத்தில் The Census of India survey  நடத்தியது. அந்த   book "Volume IX, Madras,Part IV , Village Survey Monographs,13.Kadukkara.......... 12 வருடங்களுக்குப் பின் 1973-ல் கடுக்கரை ஊரில் ஒரு  Resurvey எடுக்கப்பட்டது. இந்த 12 வருடங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா
என்று பார்ப்பதற்காக வேலப்பன் சார் தலைமையில் ஒரு குழு கடுக்கரைக்கு வந்து ஊர்மக்கள் பலரை சந்தித்து கேள்விகள் கேட்டு பதிவு செய்தனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில் Planning Forum, S.T.Hindu College,  Nagercoil  வெளியிட்ட நூல் தான் ,“ A VILLAGE IN TWELVE YEARS, A Socio Economic Resurvey of KADUKKARAI Village- 1973. D.V sir is the President of this forum.

தன்னுடைய பேராசிரியர் எழுதிய முக்கியமான பத்திரிகைகளில் பிரசுரமான கடிதங்களை தொகுத்து 'Views on News' என்ற நூலை வெளியிட்டார்.....

 இந்துக்கல்லூரி Economics துறையில் Hindecon என்கிறபெயரில் அமைப்பினை தனது சொந்தப் பணத்தினை நிதி ஆதாரமாக வைத்து ஆரம்பித்தார். அது இன்று ஆல்போல் தழைத்து சாதனைகள் செய்து கொண்டிருக்கிறது....


குமுதம் பத்திரிகையில் ஏன் வேண்டாம் இந்தத் திராவிடம் ? கட்டுரை எழுதி முதல் பரிசு வாங்கிய இவர் பல பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார்..

       அ.கா.பெருமாள் ,N.T.கிருஷ்ணன் எழுதிய நூல்களில் வேலப்பன் சாரின் அணிந்துரை அல்லது அவர் பெயர் ஆசிரியரின் முகவுரையிலாவது இருக்கும்.

அவரது அன்னையின் பேரால் இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்கிவருகிறார்...

அவர் வாழும் ஊரில் உள்ள திருமலையில் வீற்றிருக்கும் முருகன் கோவில் பக்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து பல நல்ல காரியங்களை செய்திருக்கிறார்.

Dr.D.Velappan தனது ஒரே ஆண்டறிக்கையில் இறுதியாக விடைபெறுவதை,             “ It is true that in the mortal world  with time ,normally,the mother leaves the son first, but here ,the son has to leave the mother,after all I am a mortal".......இப்படி கூறுகிறார்....

என்னிடம் ஒருநாள்,“ பொன்னப்பா...... இங்க கொஞ்சம் வந்துட்டுப் போப்போ.....”
 அவர் அருகே போனதும் ,“ நீ ஒரு Endowment -க்கு 1000/- கொடுத்து உனக்கு பிடித்த யாருடைய பெயரிலாவது maths மாணவனுக்கு பரிசு கொடுக்கலாமே.....” என்றார்.

நானும் சார் சொன்னது மாதிரியே செய்தேன்.கணித பாடத்தில் நான் கொடுத்ததையும் சேர்த்து 5 prize களையும் கணினித் துறைக்கு 1ம் நான் தான் முயற்சி செய்து endowment  ஆரம்பித்தேன்.

இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் Dr. D.VELAPPAN.........

Posted by Picasa

No comments:

Post a Comment