Saturday, March 10, 2012

திருவண்ணாமலை விசிறி சாமியார்

ஜனுவரி மாதம் திருவண்ணாமலைக்கு போய் வந்ததை என் மைத்துனன்

 ராஜேந்திரனிடம் கடுக்கரையில் அவன் வீட்டில் வைத்து சொன்னேன்.

 ‘விசிறி சாமியாரின் ஆஸ்ரமத்துக்குப் போனாயா ?’ என கேட்டான்

 ‘இந்தத் தடவை போகவில்லை’ என்றேன்

‘அவர் உயிரோடு இருக்கும் போது அவர பாத்திருக்கியா.....’ எனக் கேட்டான்.

 ‘இல்லையே’ என்றேன்....

‘நான் பாத்திருக்கேன்.....அவரிடம் பேசியும் இருக்கேன்...முருகதாஸுடனும் டாக்டர் கேசவனுடனும் அவர் ஆஸ்ரமத்துக்குப் போனேன். முருகதாஸ உனக்குத் தெரியும்லா......யோகிராம் சுரத் குமாரின் பக்தர்னு.....’என்றான்.

‘ நாங்கள் அவரது முன்னால் உட்கார்ந்து அவரது பேச்சினை முழுக்கவனத்துடன்   கேட்டுக் கொண்டிருந்தோம்........சாமியைக் காண அப்போது ஒருவர் ஆஸ்ரமத்தினுள் நடந்து வந்து கொண்டிருந்தார்...... அவர் பிரபல பின்னணிப் பாடகர்......அவரைக் கண்டு நாங்கள் எழுந்து நிற்க முயலும்போது சாமி எங்களை இருக்கும் படி சைகை செய்தார்.

வந்தவரும் எங்கள் அருகிலே இருந்தார்..... சாமி அவரிடம், “ காலில் வலி ஏதாவது இருக்கா...... நடக்க சிரமப்படுவது போல் தெரிகிறதே......” என்றார்.

பாடகர்,” ஆமாம் ஸ்வாமி.... மூட்டில் கொஞ்சம் வீக்கம் உண்டு........”

விசிறி சாமியார் தன் பக்கத்தில் இருந்த எண்ணெயை இடது கையால் எடுத்து  வலது கையில் சிறிதளவு ஊற்றி பின் இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்த்து
 பாடகரது வலி இருந்த காலில் சாமியே தடவினார்.....கொஞ்ச நேரம் தடவி விட்டு அவரை எழுந்து நடக்கச் சொன்னார்.... எழுந்து நடந்தவர் சாமியைப் பார்த்தார்.....வலி போயே போச்சு என்று உற்சாகத்தில் கூறினார்.....

எண்ணெயை தரும்படி பாடகர் கேட்கவே சாமி, “ அப்பம் எண்ணெய்னால் தான் வலி போச்சா....”  என கேட்டார்....

‘மன்னிக்கணும் சாமி உங்க கை பட்டதனால் தான் வலி போச்சு‘ என்றார் பாடகர்.

பாடகர் சாமியிடம், “ நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு ஒரு தடவையாவது வரணும்........” அழைத்தார்.

 அவர் சொன்னதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்த சாமியார் ,“ Will thiruvannamalai mountain ever move ?" சொன்னார்.....சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.....

இதையெல்லாம் சொன்ன என் மைத்துனன் வேறொரு அனுபவத்தையும் சொன்னான்......

சாமியார் ஐந்து மாதுளைப் பழத்தினைக் கொடுத்து ஒரு பக்தரிடம் கொடுக்கச்சொல்லி ராஜேந்திரனிடம் கொடுத்தார்.

சாமி சொன்னது போலவே வெளியூரில் இருந்த அந்த பக்தரை சந்தித்து பழத்தினைக் கொடுத்தான்.......வாங்கியவர் மனம் உருகவே அவர் கண்ணிலும்
கண்ணீர்.......சாமிக்கு எப்படித் தெரியும் எனக்கு மாதுளை பிடிக்கும்னு......கடவுளல்லவா இது கூடவா அவருக்குத் தெரியாமல் இருக்கும்!

இது போல் பல அனுபவங்களை ராஜெந்திரன் என்னிடம் கூறினார்.

YOGI RAM SURATH KUMAR   JAYA GURU RAYA.

No comments:

Post a Comment