Sunday, March 25, 2012

முழு வெத்தலையை போட்டால் கடன் தராத பாட்டா........


வங்கிகள் இல்லாத காலம்….கூட்டுறவு சங்கமும் இல்லாத அந்த நாட்களில் மக்கள் தமது திடீர் தேவைகளுக்கு பணம் தேவைப் பட்டால் என்ன செய்வார்கள்………
பாத்திரங்களை பணயம் வைத்து ருபாய்க்கு அரை அணா அல்லது ஒரு அணா வட்டிக்கு கடன் வாங்குவதுண்டு…..அனேகமாக பெண்களுக்கிடையேதான் தான் இந்த கொடுக்கல் ….. வாங்கல் பரிவர்த்தனை நடக்கும்.  இப்படி வாங்குவது பெரிய தொகையாக இருக்காது…..

பெரிய தொகை தேவைப்பட்டால்என்ன செய்வார்கள்………வயல் வைத்திருப்பவர்களுக்கு(விவசாயிகளுக்கு) கடன் கொடுப்பவர்கள் ஊரில் உண்டு. அப்படிக் கொடுப்பதைக் கோட்டக்கடன் என்பார்கள்…..
கடன் வாங்கியனுக்கு வயல் இருக்குமல்லவா…… அவன் அவனுக்கு கிடைக்கும் நெல்லை வட்டியும் முதலும் சேர்த்து அறுவடை முடிந்த உடன் கொடுக்கவேண்டும்.

அதாவது வயல் அறுவடை முடிந்து களத்தில் இருக்கும் நெல்லை, கடன் கொடுத்தவனே வந்து வாங்கிக் கொண்டு போயிருவான்……
வயல் இல்லாதவன் தங்க செயினோ மோதிரமோ பணயம் வைத்து பணம் கடன் வாங்குவது உண்டு…..

அன்றாடம் வேலை செய்து காலம் கழிக்கும் தொழிலாளர்களுக்கு தேவை என்று வரும்போது என்ன செய்வார்கள்………இப்படிப்பட்டவர்களுக்கும் கடன் கொடுப்பவர்கள் ஊரினில் உண்டு…….

அப்படிக் கொடுப்பவர்……ஒருவர் ……..அவர் ராமலிங்கம் பிள்ளைப் பாட்டா……
அதிக வட்டி வாங்க மாட்டார்…….பணயப்பொருளாக எதனையும் கேட்கமாட்டார்……மிக அதிகமான தொகையினை யாராவது கேட்டால் தாளில் உறுதி மொழி எழுதி வாங்கிக் கொண்டு கொடுப்பார்……

கடன் வாங்க வருபவனது முகத்தை பார்த்தே கொடுக்கலாமா….. வேண்டாமா எனக் கணித்து விடுவார்……… வீட்டில் வந்து கடன் கேட்பவர்களை பாட்டா அன்பாக உபசரித்து ,  “மக்கா, என்ன விசயம்…
ருபாய்க்கு அப்படி என்ன அவசரம்……..”. கடன் வாங்க வந்தவன் பேசுவதை வைத்தே உண்மை பேசுகிறானா………பொய் சொல்கிறானா……என்பதைக் கண்டு பிடிச்சுருவாரு…”

அவருக்கு எதிரில் இருக்கும் செயர் அல்லது பென்ச்சில் அமரச்சொல்வார்…… இருந்தால் பணம் கொடுக்க மாட்டார்…….

பாட்டா வெத்தல போடும் பழக்கம் உள்ளவர்……கடன் வாங்க வந்தவனை வெத்தலை போடச் சொல்வார்…….
வெத்தலை தட்டத்தில் இருந்து அவன் வெத்தலையை எடுப்பதை மிகவும் கூர்மையாக பாத்துக்கொண்டே இருப்பார்....
அவன் வெத்தலையை கிழித்துப் பாதியைப் போட்டால் அவனுக்குப் பாட்டா கடன் கொடுப்பார்.
 சும்மாதானே கிடைக்குது என முழு வெத்தலையை சுண்ணாம்பு தடவிப் போட்டால் , அவனுக்கு கடன் கொடுக்க மாட்டார்.

No comments:

Post a Comment