Saturday, March 17, 2012

85 வயதான ஆசிரியரும் 75 வயது மாணவரும் 60 வருடத்திற்கு பிறகு சந்தித்த வேளையிலே.......



சர்.சி.பி.ராமசாமி மெமோரியல் உயர்நிலை பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறது?

பூதப்பாண்டி அரசு மேல் நிலைப்பள்ளி........

யார் இந்த சி.பி.?

114 வருடம் வயதான இந்தப் பள்ளி அரசு பள்ளியா...?

அரசர் பள்ளியா..?          

 சர் சி.பி. ராமசாமி ஐயரின் பெயர்  இந்தப்பள்ளிக்கு எந்த வருடத்தில் சூட்டப்பட்டது . ஏன் சூட்டப்பட்டது ? பலரிடம் கேட்டேன்.

 யாருக்குமே தெரியவில்லை.

 சர்.சி.பி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாய் இருந்தவர்.

கன்னியாகுமரி மாவட்டம் 1940-50 களில் கல்வியில் மிகவும் முன்னணியில் இருந்த ஒரு மாவட்டமாக திகழ்ந்தது.

 இதற்கு காரணமே சி.பி தான்.....

1946-ல் அவர் கொண்டு வந்த கட்டாயக் கல்வித்திட்டம் தான்.

 கல்வி ஸ்தாபனத்துக்கு தனி மனிதர் பெயர் சூட்டப்படுவதை விரும்பாத ஒருவரான சி.பி யின் பெயரையே அரசு பள்ளிக்கு வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.....
114 வயதான பள்ளியின் ஆண்டுவிழா 13-02-2012 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
தலைமை திரு.அ.கோலப்பபிள்ளை

  திரு.பெ.ஆறுமுகம்பிள்ளை சிறப்பு விருந்தினர்.....

தலைவருக்கு இவர் ஏன் பொன்னாடை போர்த்துகிறார்..... நான் எங்கள் கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளையிடமே கேட்டேன்.

 அவர் சொன்னார்.“ கோலப்பபிள்ளை சார் அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்த போது நானும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன். என்னுடைய ஆசிரியர்....”

“உங்களுக்கு போட்ட பொன்னாடையை
அவருக்கே போட்டீங்களா...?” நான் கேட்டேன்.

 “ சே...ச்சே.......இங்கிருந்து நிகழ்ச்சிக்கு போகும் போதே எனது 85 வயது ஆசிரியரை கௌரவிக்க வேண்டும் என நினைத்தே நான் பொன்னாடையை வாங்கீட்டுப் போயிற்றேன்....”

திரு அப்துல் கலாம் தான் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோதும்க்கூட பொது இடங்களில் தனது ஆசிரியரை மதிக்கத் தவறியதே இல்லை........

75 வயதுப் பெரிய ஒருவர் 85 வயதான தனது ஆசிரியரை மேடையில் பாராட்டிப் பொன்னாடை அணிவித்தது பெருமைப் படும்படியான நிகழ்ச்சி யென எனக்கு தோணியது........அது நெகிழ்ச்சியானதும் கூட........

 நான் இதனை முடிக்குமுன் சில வரிகள்...........................

 நானும் அவரது மாணவனே.......

S.S.L.C படித்த அந்த சமயத்தில்,
1962-63 ல் நான், கிருஷ்ணன்,சிறமடம் சங்கரன்.......கோலப்பபிள்ளை சாரிடம் Tution
படித்தோம்.  Tution முடிந்ததும் அரசியல் பேசுவார்.அவருக்கு ராஜாஜியைப் பிடிக்கும்.....அதனால் சுதந்திரா கட்சியையும் பிடிக்கும்...... நீல வண்ணக் கொடி...அதன் நடுவில் ஒற்றை நட்சத்திரம்.....ராஜாஜி எழுதும் Swarajya  பத்திரிகையை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்.... நேருவின் கொள்கைகளை ஆதரித்துப் பேசமாட்டார்....நாங்கள் நேர் மாறாக ஆதரித்துப் பேசுவோம்.... பொறுமையாகக் கேட்டு அமைதியாக எங்களுக்கு பதில் சொல்வார்......கோபப்படாமல் அரசியல் பேசுவார்.....

நான் அவரிடம் கற்ற பாடம் ஆங்கிலம்மட்டுமல்ல..... அரசியலும்தான்......

நாகரீகமாகப் பேசவும் , பேசாமல் இருக்கவும் கற்றதே அவரிடம் தான்.....
Posted by Picasa

1 comment:

  1. கோலப்பபிள்ளை சார் சமீபத்தில் மறைந்தார். அவருக்கு என் அஞ்சலி.

    ReplyDelete