செய்வதறியாது திகைத்து நின்ற ராஜேந்திரனும் சரச்சந்திரனும் அந்த அம்மாவின் பின்னால் நின்று கொண்டிருந்த சாந்தியைப் பார்த்தார்கள். அவள் உள்ளே வரும்படி சைகை செய்ததால் இருவருக்கும் ஒரு உத்வேகம் வந்தது.
ராஜேந்திரன் ,” அம்மா... நீங்க ஒரு பொம்பளையா இருந்துகிட்டு இப்படி வந்தவங்களை குறச்சலாக்கப்படாது.... அப்படி என்ன எங்களப் பாத்தா கொள்ளக்காரன் மாதிரி தெரியா..... ஒரு நல்ல காரியத்துக்காக வந்திருக்கோம்.... நீங்க இப்படி எல்லாம் அவமானப்படுத்தப்புடாது....நீங்க செய்யது கொஞ்சம் கூட நல்லா இல்ல...” என்று கூற அவள் சற்று நகர்ந்து பின்னால் போனாள். ஆனால் உள்ளே வாங்கோ என்று ஒரு வார்த்தை கூட சொல்லிக் கூப்பிடவில்லை.
முக்காலும் நன்ஞ்சாச்சு.... முழுதும் நனைஞ்சா என்னா....குறைஞ்சா போயிரும் என்று இருவரும் உள்ளே போனார்கள்.
ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்...., “ நாங்க இப்பொ எதுக்கு வந்திருக்கோம்னு கேக்காமலேயே ஏன் இப்படி கோபப்படுறீங்க...... நாங்க உஙக மக சாந்திக்கு .........”. பேசி முடிக்கவே இல்லை. அதற்குள் அவள், “ ஏம்பொண்ணுக்கு மாப்பிள்ள பாக்குதுக்கு நீங்க யாரு.....” உரத்த குரலில் கத்தினாள்.
அந்தச் சமயம் சாந்தி இரண்டு கப்பில் காப்பியோ தேயிலையோ கொண்டு வந்து அவளது அம்மையை ,” எம்மா...எம்மா ...” கூப்பிட்டாள். கோபத்தில் நின்ற அவள் திரும்பிப் பார்க்காமலேயே இவர்களைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
அந்தச் சமயம் சாந்தி இரண்டு கப்பில் காப்பியோ தேயிலையோ கொண்டு வந்து அவளது அம்மையை ,” எம்மா...எம்மா ...” கூப்பிட்டாள். கோபத்தில் நின்ற அவள் திரும்பிப் பார்க்காமலேயே இவர்களைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
ராஜேந்திரன் , “ எதுக்கம்மா கோப்படுறீங்க.....இப்பம் என்ன நடந்து போச்சு...... நாங்க பேசுவதைக் கொஞ்சம் கேளுங்க....அதுக்கு முன்னால ஒங்க மகா என்னவோ கொண்டு வந்திருக்காள்ளா ....அத வாங்கித் தாங்கோ.....” என்றான்.
திரும்பிப் பாத்தவள் வேண்டா வெறுப்புடன் அந்த கப்பை வாங்கி இருவரின் பக்கத்தில் வைத்தாள்.....
அவர்கள் இருவரும் கப்பில் உள்ளதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள்.....
சாந்தியின் அம்மா, “ நீங்க ஆம்பிளைகிட்டெல்லா பேசணும்... அவங்க ராத்திரி ஒம்பது மணிக்குதான் வருவாங்க....” இருவரையும் விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.
இவளிடம் பேசுவது ஒரு பயனையும் தராது என்று முடிவுக்கு வந்த இருவரும் ,பேச்சை அத்தோடு முடித்து விட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்ப எழுந்தார்கள்...... சற்று மறைவாக நின்ற சாந்தி கைகூப்பி வணங்குவதைப் பார்த்த இருவரும் கனத்த மனத்தோடு வெளியே வந்து என்ன செய்ய என ஒன்றுமே தோணாமல் தெருவில் நடந்து சென்றனர்.
ராஜேந்திரன் சரச்சந்திரன் சாரைப் பார்த்து,“ சார்...... நான் ஒண்ணு சொன்னா நீங்க கோபப் படக்கூடாது...... நான் இனிமேல் இந்த முயற்சியில் மேற்கொண்டு இறங்க வேண்டுமானால் அந்தப் பையன் கணேஷை நான் பாக்கணும்.... அவனிடம் பேச்ணும்...” சொன்னான்.
அவர், “ ஆறும்பிள்ள பறயுன்னது சரியாணு..... ஞான் இன்னுதன்னே அயாளிடத்து பறயும். அயாள் இவ்ட வரும்..... அப்பம் நிங்ஙள் அவரிடத்து சம்சாரிச்சு நோக்கு..... ” என்றார்.
சொன்னது போலவே கணேஷ் வந்தான். பார்த்ததுமே ராஜேந்திரன் அசந்து விட்டான். அழகென்றால் அப்படியொரு அழகு. ..பேசினான். ...அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது அவனது பேச்சு. பணிவான பேச்சு. ஆனால் பேச்சினில் இருந்த உறுதி. பண்பாடு போற்றப்படவேண்டும் என்பதில் உள்ள நேர்மை... எல்லாமே ராஜேந்திரனை மிகவும் கவர்ந்தது. அவன் தஞ்சை மாவட்ட்த்து சிக்கல் ஊரைச் சார்ந்த ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பையன். வசதி படைத்த நல்ல பையன்.
எப்படியும் இந்த உள்ளங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் சரச்சந்திரனை விட ராஜேந்திரனுக்கு அதிகம் வந்துவிட்டது.
அவரிடம்,“ சார் ......... நாம் ரெண்டுபேரும் நாளைக்கு கல்லூரி முடிந்ததும் கோர்ட்டுக்குப் போறோம்...... நடராஜபிள்ளையைப் பாத்து பேசுவோம்..... அடிச்சாலும் பட்டுக்கலாம்.....”
ஒருநாள் மாலை கோர்ட்டுக்கு இருவரும் போனார்கள். அங்கே நின்ற ஒரு பெண் இருவருடைய ஒரு மாணவரின் அம்மா. அவளும் அங்குதான் வேலை பாக்கிறாள்..அவள் இவர்களைப் பார்த்ததும் , “ சார்.....யாரைத் தேடுறீங்க...” கேட்டாள்.
“எங்களுக்கு நடராஜபிள்ளையைப் பாக்கணும். ஆனால் எங்களுக்கு அவரைத்தெரியாது.... நீங்க காணிச்சு தாருங்களேன்........”
சற்று தூரத்தில் கையில் எதனையோ வைத்துக் கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவள் நடராஜபிள்ளை...... நடராஜபிள்ளை ..... என உரக்க கத்த ,அந்த ஆள் இவர்கள் அருகே வந்து நின்றார்.
இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்குமுன்னே , “ நீங்க அந்த சைக்கிள் ஸ்டேண்ட்டு பக்கம் போய் நின்ணுங்கோ..... அஞ்சு மணிக்கப்பறம் வாறேன்.....” சொல்லி விட்டுப் போனார். சொல்லில் பணிவும் இல்லை....கனிவும் இல்லை.....வெறுப்பை உமிழ்ந்து விட்டுப் போனது போலவே இருந்தது......
அவர் சொன்ன இடத்தில் போய் நின்றார்கள்.... மணி அஞ்சு கழிந்தது......அஞ்சரை ஆனது....... ஆறானது....... அவர் வரவே இல்லை...... வர மாட்டாரோ......ஒரு மணிக்கூருக்கும் மேல நிண்ணாச்சு...... போயிரலாமா...... நினைத்துக் கொண்டிருக்கும்போதே நடராஜபிள்ளை இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்....... என்ன சொல்லப் போகிறாரோ......
அவரது வீட்டில் பார்த்த போட்டோவில் இருந்த முகம் நினைவில் வந்தது. ஆம் இவர்தான் நடராஜபிள்ளை......
என்ன விசயம் சொல்லுங்கோ.........என்று சப்தமாய் கேட்டுக் கொண்டே இவர்கள் அருகில் வந்தார்..... முகத்தில் கோபம் தான் தெரிந்தது.....
ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்.........
............................... இதிலும் முடியாது போல் தெரிகிறது................ அடுத்த blog-ஐ பாருங்களேன்........
அவரது வீட்டில் பார்த்த போட்டோவில் இருந்த முகம் நினைவில் வந்தது. ஆம் இவர்தான் நடராஜபிள்ளை......
என்ன விசயம் சொல்லுங்கோ.........என்று சப்தமாய் கேட்டுக் கொண்டே இவர்கள் அருகில் வந்தார்..... முகத்தில் கோபம் தான் தெரிந்தது.....
ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்.........
............................... இதிலும் முடியாது போல் தெரிகிறது................ அடுத்த blog-ஐ பாருங்களேன்........
No comments:
Post a Comment