Tuesday, February 14, 2012

மருந்தில்லா மருத்துவம் கண்ட முருகன்



எனது நண்பர் ஒருவர் தெ.தி .இந்துக் கல்லூரியில் வேதியல் துறைத் தலைவராக வேலை பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் . அவரின் பெயரை ஆசிரியரின் மறுபெயர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறந்த மனித நேயம் கொண்ட ஆசிரியர்.
தனது பணிக்காலங்களில் வாடிய முகம் கொண்ட மாணவரைத் தேடிப் போய் உதவி செய்த நல்லவர் இவர்.ஆசிரியர் பதவிக்கே பெருமை சேர்த்த இவரை எப்படிப் புகழ்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
இவரது பணிக்காலம் 2010 ஜூன் மாதம் முடிவடைந்தது .சட்டப்படி அவர் 2011 மே மாதம் வரை வேலை பார்க்கலாம் .ஆனால் போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என எண்ணி பதவி நீட்டிப்பு வேண்டாம் என முடிவெடுத்தார்.

இவரது சேவை ,கல்லூரிக்குத் தேவை என உணர்ந்து அவரை நியமப்படி தொடர்ந்து வேலை பார்க்கசொன்னார்கள் . இப்படி கல்லூரி நிர்வாகம் ஒருவரைக் கேட்டது இது தான் முதல் தடவை .........

இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு அவரது வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தது. ஒருநாள்(15- 5-2005)  அவருக்கு முகத்தில் paralysis  வந்தது ,ஆங்கில மருத்துவம் பார்த்து சிறிது குணம் அடைந்தார் .இருப்பினும் முகம் முதலில் இருந்தது போல் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அவரது உறவினர்களில் ஒருவரின் ஆலோசனைப்படி பஞ்சபூத மருத்துவர் இருந்த சேலத்துக்குப் போய் அவரிடம் சிகிச்சை பெற்றார் . அந்த மருத்துவர்  இவருக்கு எந்தவிதமான மாத்திரையோ மருந்தோ எதுவும் கொடுக்காமல் ACU PRESSURE  சிகிச்சை மூலம் மருத்துவம் பார்த்தார். ஏற்கனவே வாயில் இருந்த புண்  ,அதனால் உண்டான தொந்தரவு எல்லாமே மறைந்தன . மூன்று பல்களை பிடுங்க வேண்டிய நிலையில் இருந்த பல்லும் சரியாகி விட்டது.

வீடு திரும்பிய அவர் மனதில் படித்த நாமே மருந்து சாப்பிட்டு பக்க விளைவுகளுக்கு ஆளாகிறோமே..........மருந்தில்லா மருத்துவத்தை நாம் படித்தால் என்ன .......... சிந்திக்க ஆரம்பித்தார்.........

யார் இவருக்கு மருத்துவம் பார்த்தாரோ அவரையே குருவாக எண்ணி அவரிடமே படித்து பஞ்ச பூத மருத்துவரானார். இன்று அவர் ஒரு சிறந்த மருத்துவர். கட்டணம் வாங்காத மருத்துவர். தான் பெற்ற சுகத்தை இவ்வையகம்
பெறட்டும் என்று மனிதன் பால் அக்கறை கொண்டு மாத்திரமே இதனை இரண்டு
இலட்சம் ரூபாய் செலவு செய்து படித்து முடித்தார்.

அவர்தான் பொன்னப்ப நாடார் காலனியில் இருக்கும் பேராசிரியர் முருகன் இவர்தான் மருந்தில்லா மருத்துவம் கண்ட முருகன்.


you may visit the blog of Prof.Dr.S.Murugan.:-http://www.muruganshealthtips.blogspot.in/

1 comment:

  1. பேராசிரியர் முருகன் அவர்கள்15-2-12 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். பஞ்சபூத மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும்போதே அந்த மருத்துவத்தின் பலனை உணர்ந்து உடனேயே அவரிடம் மருத்துவம் படிக்க சிஸ்யனாக சேர்ந்து விட்டதாக சொன்னார்.

    ReplyDelete