மூன்றடி உயரம் உள்ள இரும்பு சட்டத்தில் மேல் பாகத்தில் பறக்கும் தட்டு வடிவத்தில் உள்ள லைட் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் . கீழ்பாகம் வட்டமான பலகை இருக்கும் .பலகை தலையில் படும்படி வைத்து சுமந்து செல்வார்கள் . போய்க் கொண்டிருக்கும் போதே வெளிச்சம் மங்கினால் அதை தலையில் இருந்து கிழே இறக்கி காத்தடிப்பார்கள் .
வீடுகளில் உள்ள லைட் பார்க்க அழகாய் இருக்கும். குறிப்பிட்ட சில வீடுகளில் தான் அது உண்டு. சைக்கிள் கடைகளில் வாடகைக்கு கிடைக்கும் .அறுவடை காலங்களில்,...... கல்யாண வீடுகளில் ..... தான் உபயோகிப்பார்கள் .
mantle இது தான் முக்கியமான ஒன்று .இதில் தான் வெளிச்சம் வரும். மண்ணெண்ணெய் தான் எரி பொருள். டாங்கில் வெளிப்புறத்தில் காத்தடிக்கும் பிஸ்டன் இருக்கும். காற்றடிப்பதால் ஏற்படும் அழுத்தத்தால் எண்ணெய் ஒரு சிறு துவாரம் உள்ள குழாய் மேலே வரும். வெளிப்புறத்தில் உள்ள குழாய் சூடாய்
இருப்பதால் அது வாயுவாக மாறி mantle எரிந்து வெளிச்சம் தரும்.
குழாயை சூடாக்க ஸ்பிரிட் விட்டு எரிப்பார்கள் . அந்த mantle "EFAR ".......
அது நூலினால் செய்யப்பட்டது போல் இருக்கும் ....ஒரு தடவை எரித்தால் அதனை அதில் இருந்து தனியே எடுக்க முடியாது ....கை பட்டாலே பொடி பொடியாய் விடும் ......
ஆரம்பத்தில் இந்த லைட்டை தயாரிக்கும் கம்பனியின் பெயரே பெட்ரோமாக்ஸ்
தான் .
இப்பொழுது காஸ் லைட் வாடகைக்கு கிடைக்கிறது .......அதுவும் இதுபோல் தான் . அடிப்பக்கம் சிவப்பு கலர்....... சிறிய காஸ் சிலிண்டர் போல் இருக்கிறது ........
பெட்ரோமாக்ஸ் lantern இப்போ என்ன விலை .....வாங்கலாமோ .....எங்கே கிடைக்கும் .......
No comments:
Post a Comment