கல்லூரிகளில் படிக்கும் போது பலதரப்பட்ட ஆசிரியர்களை ,அவர்களின் ஈடுபாட்டை கண்டு பிரமித்தது உண்டு .நான் கல்லூரியில் வேலை பார்க்கும் போதும் ஒரு சில மூத்த ஆசிரியர்கள் மாணவர் போற்றும் அளவுக்கு மதிப்புடன் விளங்கியதும் உண்டு .
என்னைவிட வயது குறைந்த ஆசிரியர்கள் செய்யும் பணி மெச்சத்தகுந்ததாக இருந்தால் அவரைப் பற்றி மேலும் அறிய முற்படுவது என் இயல்பு .என்னைக் கவர்ந்த ஒருவர் ............... அவரைப் பற்றிய சில தகவல்கள் .......
ஒருநாள் என் வகுப்பின் வெளியே ஒரு பையன் ஓட அவன் பின்னால் அந்த ஆசிரியர் ஓடி அவனை சாலை வரை சென்று பிடித்து முதல்வர் முன்னால் கொண்டு போய் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தார். என்ன காரணம்..? இவரது வகுப்பிற்கு வெளியே நின்று தொந்தரவு செய்து கொண்டிருந்தவனை அதுவும் வேறு வகுப்பு படிப்பவனைப் பிடித்துக் கொடுத்தார்......!
நானே அவரிடம் போய் கேட்டேன்.,” இதெல்லாம் தேவை தானா.......இப்படிக் கள்ளனை விரட்டும் போலீஸ் போல் நீங்களும் ஓடணுமா....?”.......
அவர்,” நம்ம க்ளாசில் படிக்கும் பையன்கள் நல்ல பையன்கள்... இவர்களில் ஒருவன் கூட இதுபோல் அந்தப் பயல் செய்வது போல் செய்து நாசமாகி விடக்கூடாதல்லவா .."..
கல்லூரியின் நன்மைக்காகவும் General Discipline-க்காகவும் தான் அவனை விரட்டிப் பிடித்தேன்.......என்றும் சொன்னார் .
இது போல் பல தடவை நடந்ததுண்டு.....
அவரது வகுப்பில் படிக்கும் மாணவன் லெக்ஷ்மணனிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது
அவன் சொன்னது..." பாடம் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லித்தருவார்......."
மேலும் பல.... அவரது பெருமைகளையெல்லாம் சொன்னான்
Laboratory-யில் சுற்றிச் சுற்றி வந்து எப்படி பரிசோதனை செய்யணும், தேவையில்லாமல் கெமிக்கல்ஸை வீணாக்கக் கூடாது...... தேவைக்கு அதிகமாக கெமிக்கல்ஸ் கேட்கக் கூடாது..... இப்படியெல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து கல்லூரிக்கு ஏற்படும் வீண்செலவைத் தவிர்த்து வந்தார்.......
அந்த ஆசிரியர் குறுகிய கால பயிற்சி ஒன்றுக்காக பூனா பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.அங்கு திறமையான ஆசிரியர்களின் நட்பு கிடைத்தது. அப்பொழுதே அவர்களின் திறமையை தான் பணி செய்யும் கல்லூரிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டார்.
காலச் சக்கரம் உருண்டது. ஆசிரியப் பணியோடு ஓய்வு பெற வேண்டிய அவர் சூழ்நிலை காரணமாகத் துறைத்தலைவரானார்.
மாணவர்களுக்கும் தனது வேதியல்துறை ஆசிரியர்களுக்கும் பயன் படும் ஒரு செமினார் நடத்த வேண்டும் என திட்டமிட்டு, பூனா பல்கலைக் கழகப்
பேராசிரியரோடு தொடர்பு கொண்டு பேசினார்.
பூனா பல்கலைகழக வேதியல்துறை ஆசிரியர்கள் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக வேதியல் பரிசோதனைக்கு ஆகும் அதிகச் செலவினால் ஏற்படும் நிதிச்சுமையை மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.
எப்படி நிதிச்சுமை குறையும்......? ஒரு சின்ன விளக்கம்:-
100 மில்லி கிராம் வேதிப் பொருள் எடுத்து அல்லது 20 சொட்டு திரவப் பொருள் எடுத்துதான் பொதுவாக ஒரு பரிசோதனையை செய்வார்கள்.
ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,அந்த அளவு வேதிபொருள் தேவையில்லை... 5 முதல் 10 மில்லிகிராம் பொருள் அல்லது ஒரு சொட்டு திரவம் தான் உண்மையிலேயே பரிசோதனைக்கு தேவை என்பதைக் கண்டு கொண்டனர்.
இந்த முறையில் பரிசோதனை செய்வதால் எந்த விதமான தவறும் இல்லை ,தரமும் குறைவதில்லை.
செலவு குறைவு என்பது ஒரு நன்மை தான் என்றாலும் இந்த முறையில் செய்யும் பரிசோதனையால் வேறு பல நன்மைகளும் உண்டு.
அதிக நச்சு வாயுக்கள் வெளியேறுவதில்லை...இதனால் சுற்றுச் சூழல் அதிக அளவில் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது...பரிசோதனை செய்ய அதிக நேரம் ஆகாது ....மிக எளிதாக செய்து கிடைக்கும் முடிவின் தரமும் நிரந்தரம் என்பதால் இந்தப் பரிசோதனை முறையை தெ.தி.இந்துக்கல்லூரி உட்பட தென் மாநில ஆசிரியர்களும் பயிற்சி பெறவேண்டும் என எண்ணினார் துறைத்தலைவர்.
அவரது முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத் தலைவரும் முதல்வரும் துணையாக இருந்தனர்......
குறைவான செலவு,பரிசோதனை செய்யும் மாணவர்களின் உடல் நலம் பேணப்படும் என்பதனை குறிக்கோளாகக் கொண்டு 2011 பெப்ருவரி மாதம் தேசிய அளவிலான நுண்ணிய அளவிலான வேதியியல் பரிசோதனை செய்யும் பயிற்சிக்கான ஒரு முகாம் நடந்தது.
3 நாட்கள் மிகவும் பயனுள்ள இந்த Work shop இந்துக்கல்லூரியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தன....
This National Level Workshop sponsored by University Grants Commission was organised by the Department of Chemistry,S.T.Hindu College in collabration with the Department of Chemistry, University of Pune.
இது போன்ற ஒரு பயன்பெறத்தக்க பயிற்சி முகாம் இந்தத் துறையில் நடந்தது இதுதான் முதல் முறை.
இத்தகு பெருமையான பல காரியங்களைச் செய்து முடித்து ஓய்வு பெற்ற ஆசிரியரை......... பேராசிரியர் முருகன் சாரை அவரது வீட்டில் சென்று பார்த்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
கண்டிப்பும் கனிவும் கொண்ட அவர் ஓய்வு பெற்றதால் சோர்வாய் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாய் காணப்பட்டார்.
"ஒய்வு பெற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் முதியோர் இல்லங்களாய் செயல் படும் பல கல்லூரிகள் நம் நாட்டில் உண்டுமே. அதுபோல் நீங்களும் எங்காவது .....என்று கேட்க நினைத்ததைப் புரிந்து கொண்டு
அவர்,” ஆண்டவன் கிருபையால் அதிக வருடங்கள் ஆசிரியராக பணி செய்து நான் ஓய்வு பெற்றது எனக்கு மிகத் திருப்தியாய் இருக்கிறது ,
பஞ்சபூத மருத்துவம் மூலம் சேவை செய்ய நினைத்துள்ளேன்.
நம்ம காலேஜ்ல நடந்த ஒர்க் சாப் -ல் கிடைத்த அறிவை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் பயன்படச் செய்யணும்.........” என்றார்.
அவர் நினைத்த பயன் தரும் பணியை இன்றும் செய்து கொண்டு வருகிறார்.
தென் இந்தியாவில் நுண்ணிய அளவிலான பரிசோதனை செய்வதைப் பிரபல படுத்தியவர் பேராசிரியர் சு.முருகன் என்றால் அது மிகை அல்ல.அவர் தான் முன்னோடி .........
கேரளாவில் இருந்தும், கர்னாடகாவில் இருந்தும் பேராசிரியர்கள் இந்த வொர்க் ஷாப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ் நாட்டில் உள்ள பல கல்லூரி ஆசிரியர்கள் அந்த வொர்க் ஷாப் -ல் கலந்து கொண்டதால் அதன் பயனை, பங்கு கொள்ளாத மற்ற கல்லூரி ஆசிரியர்களும் அறிந்து பேராசிரியர் முருகனை அணுகி தங்கள் கல்லூரிக்கு வந்து விளக்கமாக பேசும்படி அழைத்தனர்.
ஓய்வு பெற்ற பின் அவ்வாறு பேச போன கல்லூரிகளின் எண்ணிக்கை 25 .
சென்னையில் லயோலா கல்லூரி,வைஷ்ணவா கல்லூரி ,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி , திருச்சியில் பெரியார் ஈ .வே.ரா கல்லூரி , சீதாலக்ஷ்மி ராமசாமிக் கல்லூரி ,மதுரையில் பாத்திமா கல்லூரி ,மீனாட்சி கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ,.........பல கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றியும் பரிசோதனைகளை செய்தும் காட்டியதால் திருப்தி அடைந்த அந்தக் கல்லூரிகள் இப்பொழுது பின்பற்றி வருகின்றன .
மேலும் பல கல்லூரிகளுக்கும் போக தயாராய் இருக்கிறார்.
காந்திகிராம் ரூரல் பல்கலைகழகத்துக்கும் சென்று உரையாற்றினார் .
மிகவும் தன்னடக்கம் உள்ள முருகன் சார் அவராகவே கடிதம் எழுதியும் பல கல்லூரிக்கு போய் உரையாற்றுகிறார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முருகன் சாரை நாடினால் அவர் ஓடிப்போய் அந்தக் கல்லூரிக்கு பயன்தரும் அளவுக்கு நுண்ணிய அளவிலான பரிசோதனையை சொல்லிக் கொடுக்கிறார்.
இவராகவே கல்லூரியை தேடியும் போகிறார்..........
தென் இந்தியா முழுவதும் இந்த பரிசோதனையை பரப்பி மாணவ சமுதாயமும் ஆசிரியர்களும் பயன் பட வேண்டும் என்பது தான் இவரது கனவு.
அவரது நியாயமான இந்த கனவு நனவாகட்டும் ........ வாழ்த்துக்கள் .
For any clarification you may contact him.
His Mobile no: 09443313526. land line no:04652260342.
e-mail: mgansthc@gmail.com
மாணவ சமுதாயம் பயன் பெற ஓடி ஓடி உழைக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்
முருகன் அவர்களின் விலாசம் :- 124 (2F /25 ) , "வசந்தம் ", அணஞ்சபெருமாள் சாலை ,நியு கவிமணி காலனி ,பொன்னப்பநாடார் நகர்,
நாகர்கோவில் -629004.

பேராசிரியர் முருகன் இன்று (19-02-2012) பூனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். மேலும் நுண்ணிய பரிசோதனை ( for Physical Chemistry) -பூனா பல்கலைகழகம் நடத்தும் இரண்டு நாள் -செயல் முறை வகுப்பில் கலந்து மேலும் அறிவு பெற
தனது சொந்தச்செலவில் போகிறார். தென் மாநில கல்லூரிகளுக்கு இந்த சுற்று
சூழல் பாதுகாப்பு தரும் பரிசோதனை முறையை பரப்ப வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையோடு ஒய்வு பெற்ற பின்னும் படித்துக் கொண்டே இருக்கிறார்.
Dear Sir, Thank you very much for your initiative.All the credit goes to my teachers for they are responsible for what I am today. The credit for the micro scale experiments in chemistry goes to Dr.S.L.KELKAR, Retired Professor of Organic Chemistry, Pune University,Pune. Thanks are due to one of my fellow participants, Dr.SANGEETA JAGTAP, who insisted me to be with the ORGANIC team. s.murugan
ReplyDeleteபேராசிரியர் முருகன் இன்று (19-02-2012) பூனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். மேலும் நுண்ணிய பரிசோதனை ( for Physical Chemistry) -பூனா பல்கலைகழகம் நடத்தும் இரண்டு நாள் -செயல் முறை வகுப்பில் கலந்து மேலும் அறிவு பெற
ReplyDeleteதனது சொந்தச்செலவில் போகிறார். தென் மாநில கல்லூரிகளுக்கு இந்த சுற்று
சூழல் பாதுகாப்பு தரும் பரிசோதனை முறையை பரப்ப வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையோடு ஒய்வு பெற்ற பின்னும் படித்துக் கொண்டே இருக்கிறார்