மனிதரை என் வரிகளில் பதிவு செய்ய நான் விரும்பினேன் ...........
1970 களில் நான் கண்ட ஒரு மனிதர். அரசியல் அறிவும் ,மனித நேயமும் கொண்ட நல்லவர்.
நான் எனது அறையில் இருந்து எதனையோ படித்துக் கொண்டிருந்த வேளையில் என் முன்னால் யாரோ நிற்பது போன்று தோன்றவே நிமிர்ந்து பார்த்தேன் .
எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே ......!
கருத்த ஒல்லிஎன்றும் தடிமன் என்றும் சொல்ல முடியாத உருவம் .தலையில் காந்திக் குல்லா.கதர் ஜிப்பா .தோளில் ஒரு தொங்கும் பை.
நான், அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க , அவர் பதில் சொல்வதற்குள் , எங்கள் துறைத் தலைவர் ," அண்ணாச்சி ! வாங்கோ ..... என்ன விசயமாய் வந்திருக்கீங்க .........." எனக் கூறி அவரை அவர் அருகே வரும்படி அழைத்தார் .
பேசி முடித்து வெளியே போனார். அவர் போனதும் அது யார் சார் என தலைவரிடம் கேட்டேன்.
ஹ...ஹா..... என சிரித்து அவர் யார் என்பதனை சொன்னார்.
எனக்கும் ஞாபகம் வந்து விட்டது. ஒஹ் ! அவரா இவர் ?
யார் இவர் ?
அநீதியைக் கண்டு பொங்குபவர்.......! நியாயத்துக்காக போராட விரும்புபவர்.
முனிசிபல் மைதானத்தில் மேடை போட்டு பேசுவார் .அரசின் தவறான கொள்கைகளை விளாசுவார் .....மாவட்ட பிரச்சனைகளை அலசுவார். மேடையில் தரக்குறைவான வசனம் பேசவே மாட்டார்..... மேடைப்பேச்சு முடிந்ததும் கேள்வி கேட்கலாம். பதில் சொல்வார்.
ஒரு சைக்கிள் . அதில் தான் எங்கும் பயணிப்பார் . " பூமேடை முழங்குகிறார் " என அவரே செலவு செய்து போஸ்டர் அடித்து ,அவரே சுவரில் கொண்டு ஒட்டுவார். இது போன்ற செயலால் அவர் கேலி செய்யப்பட்டார் . ஆனால் அவர் எதற்கும் கவலை படுவதில்லை.கேலி செய்தாலும் பொருட்படுத்துவதுமில்லை
.
அவர் பாட்டுக்கு துரு பிடித்த சைக்கிளில் வலம் வருவார்.
அவரை யார் பார்த்தாலும் சிநேக பாவனையில் சிரிப்பார். தன சைக்கிளில் பின்னால் ஏறி வரும்படி அழைப்பார்.....
தனது சொத்துக்களை விற்று தன் காலத்தைக் கழித்தார்.அவருக்கென்று நாகர்கோவில் நகரத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.
நான் அவரது பேச்சைக் கேட்டதே இல்லை.
இந்த ப்ளாக் எழுதுவதற்கு முன் என் நண்பர் ஒருவரை சந்தித்து அவர் பேசியதில் நகைச்சுவையாய் பேசியது ஏதாவது தெரியுமா ? எனக் கேட்டேன்.
அவர் சொன்னது...........
பூமேடை பேசுகிறார் :-
" எனக்கு நெருங்கிய நண்பர் . அவர் மாவட்ட ஒரு கட்சியின் தலைவர்....தமிழ் நாட்டில் உள்ள பல எம்பிக்களில் அவரும் ஒருவர்.அடிக்கடி இந்தியாவின் வடக்கில் உள்ள டெல்லிக்கு சென்று வருபவர். தேர்தல் சமயம்.
நான் புத்தேரி குளத்துக் கரையில் ஒரு மாலை நேரத்தில் நின்று கொண்டிருந்தேன் . அப்பொழுது வடக்கே இருந்து ஒரு காரில் நம்ம எம்.பி வந்து கொண்டிருந்தார் . என்னைக் கண்டதும் கார் என்னருகே வந்து நின்றது. அவர் காரை விட்டு இறங்கினார்.
நான் , " சுகம் தானா.... வடக்கேல்லாம் நிலவரம் எப்படி இருக்கு....."
அவர்," நான் இப்பம் வடக்கே இருந்துதான் வாறேன்....ஏன்...என்ன விஷயம்? அங்கே விசேசம் ஒண்ணும் இல்லையே... "
பாத்தீங்களா. ஒரு தேசியத் தலைவருக்கு வடக்கு என்றால் கடுக்கரையும்,,காட்டுப்புதுரும் தான். ஆனால் இந்தப் பூமேடைக்கு வடக்கு என்றால் டெல்லி .....
தேர்தல் சமயத்தில் இவரும் போட்டி இடுவார் .... அப்படி ஒருதடவை தேர்தலில் போட்டியிடும் போது இவருக்கு கிடைத்த சின்னம் யானை .
வெள்ளைக் கொடியில் யானைசின்னத்தை பொறித்து அவர் தனி ஆளாய் நடந்தும் ,சைக்கிளிலும் சென்றும் பிரச்சாரம் செய்தார்.
அவர் தன் வாழ்வில் சொத்தை இழந்த , மனித நியாயத்துக்காக தன் வாழ்நாள் முழுவதுமே போராடிய அந்த மாமனிதன் தேர்தல்லயும் வெற்றி பெறல்ல.....
கோமாளியாகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரைப் பார்த்தனர்.
நல்லவன் வாழ்வான் என்பது நடை முறையில் சாத்தியம் இல்லையா?
நல்லவனாகவே வாழ்ந்து மடிந்த அந்த மனிதன் தான் .
பூமேடை ராமையா பிள்ளை
நானும் நாகர்கோவில்காரன் தான். நான் எப்போதோ குழுமத்தில் பூமேடை ராமையா பிள்ளை குறித்து எழுதிய கட்டுரைய எனது வலைப்பதிவில் இடுகையாய் இடவுள்ளேன். உங்களது இடுகையின் பெயரைக் குறிப்பிட்டு, இதில் வந்துள்ள படத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறேன்; நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன். மிக்க நன்றி!
ReplyDeleteநல்லதொரு பகிர்வு... அறிந்தேன்... நன்றி....
ReplyDeletehttp://settaikkaran.blogspot.in/2012/11/blog-post_2.html - மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...