Sunday, September 18, 2011

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு

இன்று ஞாயிறு 18-ம் தேதி. நான் நாகர்கோவிலில் இருந்து வந்து இன்றோடு 10 நாளாகிறது. நேற்று இரவு தூங்கப் போகும்போதே காலை 8 மணிக்கு கல்யாண மாலை சண் டீவியில் பாக்கணும் என்று நினைத்துக் கொண்டே படுத்தேன்.

போனவாரம் 8 மணிக்கு டீவியை ஆண் பண்ணி சண் டீவியைப் பார்த்தால் அங்கே ராஜேந்தர் பெண்கள் வேலைக்குப் போவது சந்தோசமா,சங்கடமா ,காலத்தின் கட்டாயமா......கேட்டுக் கொண்டிருந்தார்.

அய்யய்யோ....குவைத் ட்டைம் 5.30 க்குல்லா கல்யாணமாலை.....

அதனால் இண்ணைக்கு காலை 5.30 க்கு முன்பே எழுந்து கல்யாணமாலை பார்த்து விட்டேன்....

இல்ல...இல்ல... கண்ணீர் விட்டேன்...கன்னம் முழுவதும் கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதை பார்த்த என் மனைவியின் கண்ணிலும் ......

பார்ப்பவர்கள் பேசியவரது பேச்சின் நயத்தால் ,அவரது நெகிழ்ந்த முகத்தால் சினிமாவில் பத்மினியோ, சாவித்திரியோ பணம் வாங்கிக் கொண்டு அழும்போது காசையும் கொடுத்து அழுவோமே அது போல நானும் உணர்ச்சி பிழம்பாய்....சே..ச்சே.....

சென்றிடுவிர் எட்டுத் திக்கும்...வெளிநாட்டுக்கு சென்றதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இழந்தது அதிகம் எனப் பேசிய பாங்கு கேட்போரை மட்டுமல்ல பார்ப்போரையும் அழ வைக்கும்.

இவர் பெற்றது அதிகம் எனப் பேசினாலும் மிக நன்றாகவே இருந்திருக்கும்.

பேசியதில் உணர்வும் இருந்தது உண்மையும் இருந்தது......மறுக்கவே முடியாது.ஆனால்

‘திரைகடலோடித் திரவியம் தேடு’ என்று என்றோ ஒருவன் சொன்னானே....அது ஏன்?

ரங்கூனிலும்,சிங்கப்பூரிலும் போய் வணிகம் செய்து நம் நாட்டின் செல்வத்தையும் பெருக்கினார்களே....அது தவறா ? அதுவும் எந்த வசதியும் இல்லாத அந்த நாட்களில்....

மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் வாய்ப்பு கிடைத்தவன் வளமோடு வாழ்வான். வாய்ப்பு கிடைக்காத மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் ? இன்று உலகமே உள்ளங்கையில்
அல்லவா உருண்டு கொண்டிருக்கிறது.


இன்று சினிமா தியேட்டரில் கூட்டமே இல்லை. பாஸ்போர்ட் ஆபீஸ்லதான் கூட்டம் அலைபாய்கிறது ஏன்....? முன்னாலெல்லாம் நினைத்த நேரத்தில் வரமிடியாத சூள்நிலை. ஆனால் இன்று அப்படியா..?

பாசம்,நேசம்.....எத்தன நாள்தான் இதச்சொல்லியே காலத்தக் கழிக்கப் போறோம்.

கல்யாணம் பண்ணிக் கொண்டால் பெற்றவர்கள் மீது பாசம் குறையுமா? குறையாதா ?

படிக்கவைத்தால் மகன் அப்பாவைப் பின்னால் கவனிப்பானா ? கவனிக்க மாட்டானா?

பிள்ளை பிறந்தால் பெண்ணுக்கு அழகு குறையுமா ? கூடுமா?

இப்படி எத்தனையோ.......விவாதிக்கலாம்.

கூளுக்கு ஆசைப்பட்டால் மீசைக்கு ஆசைப்படக்கூடாது.எதையோ ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும்.

எட்டுத்திக்கும் என்ன எல்லாத் திக்கும் எட்டும் திக்கே.எட்டாத்திக்கென்று எதுவுமே இல்லை...இல்லவே இல்லை.

வெளிநாட்டுக்குப் போயே ...போய்தான் வாழவேண்டும் என நினைத்தால் அது சரியில்ல....ஆனால் போவதே தப்பு என்று சொன்னால் அது தப்பு....

எதையும் எதற்காகவும் எப்போதும் யாரும் அதிகமாய் இழந்ததும் இல்லை......அளவுக்கு அதிகமாகப் பெற்றதும் இல்லை......

எதைக் கொண்டு வந்தோம் நாம் இழப்பதற்கு

No comments:

Post a Comment