Monday, September 26, 2011

சில விவரங்கள்..நான் தெரிந்து கொண்டவை

நான் குவைத்துக்கு வந்து பல இடங்களுக்கும் காரில் போகும் போது சாலைகளில் பச்சைப் பசேல் என்று சின்னச் செடிகளும் மரங்களும் நிற்பதைக் கண்டு என்னுடன் வந்தவர்களிடம் என் ஆச்சரியத்தைக் கூறினேன்.

குவைத்தின் climate-க்கு ஏற்ற செடி அவைகள். எல்லாமே ஒரே செடிதான்.வெட்டி விட்டால் அவை குற்றுச்செடி...வெட்டாமல் விட்டால் மரம். மிகக்கொஞ்சம் நீர் போரும்.வெயிலிலும் தாக்குப் பிடிக்கும்.அதிக நேரம் அந்த மரத்தின் பக்கம் மனிதர்கள் நிற்பது நல்லதல்ல என்றும் கூறுகிறார்கள்

நான் மேலும் குவைத்தைப் பற்றி அறிய விரும்பினேன். நண்பர் மகாதேவன் அனுப்பிய மெயிலில் இருந்த தகவல் இதனை எழுத மிகவும் உதவியாய் இருந்தது......

குவைத் ஒரு சிறிய நாடு. நாட்டின் தலைநகரத்தின் பெயர் KUWAIT CITY. மத்திய கிழக்கு நாடுகளில் மிக வசதியான பணக்கார நாடு. மொத்த நிலப்பரப்பு 7500 சதுர மைல் (19424 சதுர கீமீ)

குவைத்தின் வடக்கு மேற்குப் பக்கம் ஈராக்கு என்ற ஒரு அரபு நாடும், தெற்குப் பக்கம்
Soudi Arabia நாடும் இருக்கிறது.கிழக்குப் பக்கம் Arabian gulf.

Failaka,Bubiyan,Werba....எனச் சின்னத் தீவுகளும் இந்த நாட்டில் உள்ளன. ஆறுகளோ,நதிகளோ
இங்கு இல்லை.

மொத்த ஜனத்தொகை-----1.2 million. இவர்களில் 6 லட்சம் பேர் இந்நாட்டினர்.இவர்களை Kuwaithi எனக் கூறுகிறார்கள்.

குவைத்நாட்டின் HEAD அமீர் என அழைக்கப் படுகிறார். இவர் அரசியல்,நிர்வாகம் நடத்த ஒரு பிரதான மந்திரியை நியமிக்கிறார்......

இங்கு அரபிக் மொழிதான் தேசியமொழி. English is also an official language. இந்தமொழியை வலமிருந்து இடமாக (right to left) எழுதுகிறார்கள்....வாசிக்கிறார்கள். நாம் இடமிருந்து வலமாக எழுதுகிறோமல்லவா.

இங்கு இந்தி் மொழி அதிகம் பேசப்படுகிறது. Tagalog என்ற ஒரு மொழியும் பேசப்படுகிறது..

நிர்வாக வசதிக்காக நாட்டை 5 பகுதிகளாக அதாவது 5 GOVERNATES எனப் பிரித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கவர்னேட்டுக்கும் தலைநகரம் உண்டு.They are KUWAIT CITY,HAWALI,Faewaniya,Jahra,Ahmedi.

இது எப்படி இருந்தாலும் நமக்கு பழக்கத்தில் மிகவும் தெரி்ந்த பகுதிகள் மூன்றுதான்.

குவைத் சிற்றியும் அதன் அண்மையில் இருக்கும் புற நகர் பகுதி 6th ring road-ன் தெற்குப் பக்கமா இருக்கும் இடங்கள்.....,Messilah to தெற்கு நோக்கிச் செல்லும் Ahmedi,மேற்குப் பகுதியான Jahra,....

ஜூலை ,ஆகஸ்டில் வெயில் மிகக் கூடுதலாக இருக்கும்....55 டிகிரிச் சூடு. குளிர் காலத்தில் குளிர் கூடுதலா இருக்கும்.....0 டிகிரி குளிர்.

பெட்றோல் விலை 9 ருபா.தண்ணீர் விலையும் அதிகமில்லை.கடல்நீரை குடிநீராக்கும் ப்ளாண்ட் தான் குவைத் முழுவதும் தண்ணீர் தருகிறது.

எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 8 முக்கிய தொழிற்சாலைகள் உள்ளன.

petroleum refinery,Chemicals,Liquified natural gas,HeavyIndustry (Steelpipe and truck asembly,Ship building,Cement,Food processing,Light Industry (building material,furnitures,paper)

இவை எல்லாமே நெட் தந்த தகவல்.எப்போ பதிவு செய்யப்பட்டது எனத் தெரியவில்லை.எதனையாவது மாற்ற வேண்டுமானால் எனக்கு தெரிவித்தால் திருத்தலாம்...

நான் காரில் முன்சீட்டில் அமர்ந்ததும் பெல்ட்டை இப்பொழுதெல்லாம் நானாகவே போட்டுருவேன்.போடாவிட்டால் போலீஸ் பிடித்து விடுவாரே.மறக்காமல் பாஸ்போர்ட்டையும் விசாவையும் எடுத்துருவேன்.Traffic police யாரையும் எங்கேயும் தெருவில் நிற்பதை பார்க்கவில்லை.மூன்று வண்ண விளக்கு பளிச்..பளிச் என எரிந்து கொண்டிருக்கும் போலீஸ் காரை பல இடங்களில் பார்த்தேன்....சட்டப் படியே மிகவும் ஒழுங்காக எல்லாம் நடக்கின்றன.காரின் வேகம் குறிப்பிட்ட வேகத்தை விட தாண்டிப்போனால் சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கேமரா காரின் நம்பரை பதிவு செய்து விடும்....கார் ஓணர் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்...

இதுவே எனக்கு இப்படியும் சட்டத்தை மதிக்கிறார்களே மக்கள் என்பதும் நம்ம ஊரில் இந்த நிலை இல்லாததால் வியப்பு தானே.

No comments:

Post a Comment