Monday, September 19, 2011

என் வரிகளையும் ரசித்தவருடன் ஒரு நாள்

சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தோவாளை மகாதேவன் பிள்ளையின் காரில் சும்மா ஊரைச் சுற்றி பார்க்கலாமே என்று அவர் அழைத்ததாக தினேஷ் போண் பண்ணிக் கூறவே சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் உள்ளநாளில் இன்று பள்ளிக்கூடம் போகவேண்டாம் எனச் சொன்னால் மகிழுமே அதே போன்று நானும் மகிழ்ந்தேன்.

நானும் அவர் காரில் முன்சீட்டில் பெல்ட் போட்டு அவருடன் போனேன்.

என்னுடன் பேசிக்கொண்டே காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தார். ஸ்பீடாகப் போனது போன்ற ஃபீலிங்கே இல்லை. காரணம் இங்குள்ள ரோடு தான்.எல்லா கார்களும் எங்களை விட வேகமாகச் சென்று கொண்டிருந்தன.

“ உங்கள் ப்ளாக்கை நான் தினமும் படிப்பேன்.நன்றாக இருக்கிறது.நாஞ்சில்நாடன் எழுதுவது போலவே எழுதுகிறீர்கள்.”

அவர் நமக்காக எழுதுகிறார்.... நான் எனக்காக எழுதுகிறேன். எங்கள் காலேஜுக்கு வந்த அவரிடம் பேசியிருக்கேன்.தலைகீழ்விகிதங்கள் படிச்சிருக்கேன். நாஞ்சில் நாட்டுப் பேச்சும் கலந்த அவரது எழுத்து மிகவும் அருமையானது. சிவாஜி கணேசன் நடித்தார்.அவருக்குப்பின் கமலஹாசனாகட்டும்,ரஜினிகாந்தாகட்டும் நடிப்பதற்கு வேண்டி நடந்தால் கூட அது சிவாஜியைப் போல் தான் இருக்கும் .நாஞ்சில்நாடனைப் படித்தபிறகு தான் நான் எழுதவே ஆரம்பித்தேன்.இதுபோன்று ப்ளாக் ஒன்று create பண்ண idea கொடுத்ததும் ஒரு நாஞ்சில்நாட்டுக்காரர் தான்....கோவையில் வாழும் பூதப்பாண்டி ஊர்க்காரர்...அவரும் ஒரு நூலை எழுதிய எழுத்தாளரே...திரைச்சீலை எழுதிய ஜீவானந்தன்.ஆகவே அவரைப் போலத்தான் என்னால் எழுதவே முடியும்.....

மகாதேவன்பிள்ளை “எனக்கு நாஞ்சில்நாடனையும் தெரியும்,ஓவியர் ஜீவாவையும் நன்றாகத் தெரியும்”என்றார்.

அவர் மேலும் சொன்னார்: “நேரில் சொல்வதைவிட...சொல்லமுடியாததைக் கூட எழுதினால் அதற்கு effect கொஞ்சம் கூடுதல்தான்”.

ஆம்..அது உண்மைதான்.

நான், “எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எல்லோருமே இலக்கிய எழுத்துக்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு படிச்சிருக்கீங்களே. வேலைப் பழு அதிகமா இருக்கும்.வீட்டிற்கு வருவீங்க...சாப்பிடுவீங்க...தூங்குவீங்க...TV பாப்பீங்க...இப்படித்தான் நான் நினச்சேன்...அண்ணைக்கு புத்தேரி தினேஷ் வந்து பேசிக் கொண்டிருந்தார்;நாஞ்சில் நாட்டு வரலாறு பற்றிய பேச்சு அது. அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை மிகவும் சந்தோசப்படுத்தியது.ஒரு கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.ஊருக்கு போனபின் தான் விடையைத் தேடணும்.மனம் திறந்த அந்தப் பேச்சு அவர் போன பின்னும் என்னுள்ளே இருந்து கொண்டே என்னை தட்டிகொடுத்து மேலும் எழுதணும்னு ஊக்கப் படுத்தியது. கடுக்கரையைப் பற்றிய அவரது நினப்பு என் வரிகளைப் படித்ததால் மாறியதாக சொன்னார்....குவைத்தில் இருந்தாலும் குமரி மாவட்ட வரலாறு எழுதிய அ.கா.பெருமாள் பற்றியும் தினேஷ் பேசுகிறார் . நாடு விட்டு நாடு வந்தபின்னும் நாகர்கோவிலைப் பற்றியும் என்னால் பேசமுடிகிறதே...இந்தப் பேச்சு தொடர்ந்தது.

நான் கேட்டேன்,“ வந்த அண்ணைக்கே கேக்கணும்னு நினைச்சேன், நாங்க வந்தோம்லா முத நாள். காலையில் வந்த கத்தார் ஏர்வேய்சில நாங்க வராததால் தினேஷின் மனசு ரொம்ப கஸ்டப்பட்டிருக்கும்.அவனது அம்மைக்கு அது தான் பெரிய விசயமாய் தோணி என்னை எப்படியாவது தினெஷுக்கு சொல்ல முடியுமா பாருங்கள் என்றாள். அவள் ஃப்ளைட்ட விட்டதுக்குக் கூட கவலைப் படாமல் மகன் தேடித் தடுமாறுவானே என்று தான் புலம்பிக் கொண்டிருந்தாள். நாம் வந்தது பஸ்ல இல்ல. நாம் இங்கே காத்திருப்பது அவனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.கவலைப்படாதே என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். நீங்க என்ன செய்தீங்க”

”காலைல நான் வரல்ல...தினேஷும் மாதவனும் வந்தார்கள்.அவர்கள் கத்தார் ஏர்வேய்ஸில் விசாரித்தார்கள்.நீங்கள் தோஹா ஏர்போர்ட்டில் இறங்கியதையும் 2.30 மணி ஃப்ளைட்டில் வருவார்கள் எனவும் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு வீட்டிற்குப் போய் திரும்பி குவைத் ஏர்ப்போர்ட்டுக்கு வரும்போது என்னுடைய காரில் வந்தோம்”

நானும் மகாதேவன் பிள்ளையும் ஒரு பெரிய சூப்பர் மார்க்கட்,தாஜ்மகால் போன்ற மாஸ்க்,தண்ணீர் சுத்தீகரிப்பு ப்ளாண்ட்,கடற்கரை ,சுல்தான் செண்டர், பெரிய ஃபிஷ் மார்க்கட்
எல்லாம் பார்த்தோம். இந்தியன் ரெஸ்டாரெண்ட்-ல் போய் என்.வி சாப்பாடு சாப்பிட்டோம்.

திரும்பி வரும் போது காரில் இருந்தே குவைத் டவ்வரை பார்த்தேன். 4 மணியளவில் என்னை வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போனார்.

லிஃப்ட்டில் 8-ஆவது மாடிக்கு வந்து வீட்டுக்கு வந்தேன் .

தினேஷ் படிக்க தந்த நாஞ்சில்நாடன் எழுதிய ‘எட்டுத் திக்கும் மதயானை’-ஐ எடுத்துப் படிக்க எடுத்தேன்.

அட்டையின் அடுத்துள்ள பக்கத்தில் எழுதியிருந்த வரிகள்:- அன்புள்ள நண்பர் திரு.சி.மகாதேவன் அவர்களுக்கு நட்புடன் நாஞ்சில்நாடன் - 15/4/03.

No comments:

Post a Comment