Thursday, September 8, 2011

என்னுடன் ஆசிரியராக வேலை பார்த்த என் மாணவர்கள்.

நான் நேற்று 7-9-2011 அன்று காலையில் இந்துக்கல்லூரிக்குப் போனேன்.

தண்ணீர் குடித்தாலோ,சுடு நீர் குடித்தாலோ பல்லில் கூச்சம் இருந்தது.கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் பிரசாத்

ஒருஹோமியோபதி மருத்துவர்.அவரிடம் ஏற்கனவே வாங்கிய மருந்தில் என் பல்லில் எற்பட்ட கூச்சம் போய்விட்டது. அதை அவரிடம் சொல்லி,“இனிமேல் பல் கூச்சம் ஏற்பட்டால் மருந்து வேண்டும். கொஞ்சம் அதிகமாவே தாருங்கள். நான் குவைத்துக்குப் போறேன்” . அவர் உடனே எனக்கு தெவையான மருந்து தந்தார். அதுவும் இலவசமாகவே தந்தார். எனக்கு மட்டுமல்ல..... எல்லோருக்குமே இலவசமாகவே கொடுப்பது வழக்கம் தான்.


என்ன செய்யலாம் குவைத்தில் 2 மாதம் பொழுதைப் போக்க.


கல்லூரியில் பணியாற்றும் காந்திநாதன் தந்த idea படி புஸ்தகங்களை வெளியில் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஆறுமுகப்பெருமாளும் வீட்டுக்கு வந்து கொஞ்சம் புக் தந்தார்.


ஆசிரியர் ராமகிருஷ்ணனைப் பார்த்து நான் விடைபெறும்போது,“ நான் எழுதும் blogg-ஐப் பார்ப்பீர்களா ? நான் என் ஆசிரியர் (உங்க அப்பா) பெயர் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். படியுங்கள் எனக் கூறினேன்.


ஆறுமுகப்பெருமாள் என்னிடம்,“ சார்.... எத்தனை வருடம் உங்களுடன் பழகியிருக்கிறேன். என் பெயர் ஒரு இடத்தில் கூட இல்லையே!” என்றார்.


“ அப்பம் நீஙக எல்லாம் படிச்சீங்களா....” என்று கேட்டேன்.


படித்ததைச் சொன்னார் . குவைத்துப் போகும் சமயம் ஒரு ரசிகர் கிடைத்து விட்டார் . மிக்க மகிழ்ச்சி.


அவரைப் பற்றி என் வரிகள்:-

எனது மாணவர் இவர்.

என்னுடன் பணியாற்றியவர். இப்போ H.O.D of Computer Science.He is a very good teacher. இவர் ஆராய்ச்சி செய்து Ph.D பட்டம் பெற்றவர்.M.S. University Convocation- நிகழ்ச்சியில் ஒரே ஒரு தடவைதான் நான் கலந்து கொண்டேன். அது இவர் டாக்டர் பட்டம் வாங்கிய அந்த ஃபங்க்ஸன் தான்.


இவர் சிங்கப்பூர் செமினாரில் கலந்தது ஒரு முக்கியமான பெருமை தரும் நிகழ்ச்சி.பல செமினார்களை நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரியில் International Seminar ஒன்று நடத்தினார்.

நான் பணியாற்றிய சமயத்தில் என்னுடன் கல்லூரிக்காக முழுக்க முழுக்க ஈடுபாட்டோடு துணை நின்று எங்கள் பணியில் எந்தத் தவறும் ஏற்படாதவாறு

பார்த்துக் கொண்ட சிலரில் இவர் முக்கியமானவர்.


யார் என்ன சொன்னாலும் பொறுமையாக இருப்பவர்.அதிகமாக இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

தன்னுடைய முயற்சியால் இன்னமும் பெரும் புகழ் அடைய ஆண்டவன் அவருக்கு அருள் புரிவான்.

நான் ஓய்வு பெறுவதற்கு முன் என் மன அமைதிக்காக என்னுடன் பல கோயில்களுக்கு வந்தவர்.என் மகளின் திருமணத்துக்கு அவரால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தவர்.


அவரது பெயரும் என் அப்பாவின் பெயரும் ஒன்றே. நான் ஏதாவது அவரைப் பற்றி சொன்னால் ,“ஞாபகம் வச்சுங்கோ என் பெயர் என்னண்ணு, ஒங்க அப்பாவாக்கும்”, என கூறுவதை மிகவும் ரசிப்பேன்


அவரைப் போன்று அவரது மகனும் மகளும் எங்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.

என் மாணவர்களில் இந்துக்கல்லூரி ஆசிரியரகள்.

1. Dr.S.ஆறுமுகபெருமாள்

2. P.சுவாமிநாதன்

3.T.தனலெட்சுமி

4.Dr.T.சிதம்பரதாணு

N.Siva is working as Principal of NSK Polytechnic College, Chenbagaramamputhur.

No comments:

Post a Comment