Thursday, September 29, 2011

என் மனைவி சொன்னாள்.சொன்னதைச் செய்தேன்

கணிதத்துறையின் தலைவர் ஆவதற்குமுன் நான் நாகர்கோவில் செண்ட்ரல் றோட்டறி சங்கத்தில் தலைவர் பதவியைத் தவிர சில முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றி இருக்கிறேன்.என்னை தலைவராக்க எல்லோரும் விரும்பிய சமயத்தில் தலைவராக விரும்பாத ஒரே காரணத்தினால் சங்கத்தில் இருந்து விலகி விட்டேன். நான் சங்கத்தின் பல நண்பர்களிடம் (மறைந்த P.N.S முதலாளி மிக முக்கியமானவர்)
வேண்டிக் கேட்கும்போது கல்லூரியில் படித்த பல மாணவர்களுக்கு அவர்கள் பண உதவி செய்தனர்.கடுக்கரை ஊர் பையன்களுக்கும் School books கொடுத்தார் P.N.S அவர்கள்

நான்,பேராசிரியர்கள் முருகன், ராஜையன் மூவரும் மட்டுமே சேர்ந்து தேவையான சமயத்தில் சில ஏழை மாணவர்களுக்கு பண உதவி செய்து வந்தோம்.யாரிடமும் இதைப் பற்றி அதிகம் சொல்வதில்லை.எங்களுடன் ஒரு சில ஆசிரிய நண்பர்களைச் சேர்க்க நினைத்து அது முடியாமல் போனது மட்டுமல்ல...கிண்டல் செய்ததால் சொல்வதில்லை.

அந்த சமயத்தில் எங்க வீட்டுக்கு பால் போடும் பையன் என்னிடம் -----த்தில் இருந்து ஒரு பையன் ஃப்ஸ்ட் ஈயர் மேத்ஸ் படிக்கிறான் ---ணு பேரு...தெரியுமா சார் எனக் கேட்டான்.
அவனது நிலமை பற்றியும் கூறினான்.என் மனதினில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

செருப்பு கூட காலில் போடாமல் பேண்ட் அணிந்து வந்த கதையையும் அடுத்தநாள் கல்லூரிக்குப் போனதும் அறிந்தேன்.

என் மனைவி என்னிடம்,“ நீங்கள் அந்த சங்கத்தில் இருந்த போது எவ்வளவு பணம் செலவழித்திருப்பீர்கள்....இந்த பையனுக்கும் என்னமாம் ஹெல்ப் பன்ணுங்களேன்.”

------ கோயிலுக்குப் போன ஒரு நாள்.....சுற்றுப்பிரகாரத்தை சுற்றி வரும்போது என் மனைவியிடம், “ அந்தப் பையனின் அண்ணன் இந்தக் கோயிலில் தான் வேலை பார்க்கிறான்.இண்ணைக்கு இந்தக் கோயிலில் வைத்து அவனை நாம் கண்டால் மூன்று வருட படித்த செலவை நாமே எடுத்துக்கலாம்” என நான் சொன்னேன்.

நேரம்தான் ஒடிக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பையனைக் காணவில்லை. சரி...நாம் போவோம் என இருந்த இடத்தை விட்டு எழுந்தேன். கொஞ்சம் இரிங்கோ...வெய்ட் பண்ணுவோம் என மனைவி கூற போகாமல் நின்று கொண்டிருந்தேன்.

என் முதுகில் ஒரு ஆள் தட்டி பொன்னப்பா எப்படி இருக்கே என்ற சப்தம் கேட்டு நான் திரும்பினேன்.அவன் என்னுடன் குறத்தியறையில் படித்தவன்.பகவதீஸ்வரன் அவன்.பல ஆண்டுகளுக்கு அப்புறம் அன்று தான் அவனை பார்க்கிறேன்.

--- த் தெரியுமா ? நான் கேட்டேன்.

விசயத்தைச் சொன்னேன். உடனே அவன் போய் அந்தப் பையனை அழைத்து வந்தான்.

அவனைக் கண்டதும் என்னைத் தெரியுமா ? என கேட்க அவன் தெரியாது எனச் சொன்னான்.
“ஒன் அன்ணன பாக்கணுமே. எங்கெ இருக்கார்”

அண்ணனைப் பார்த்தோம்.அவரிடம் கவலைப்பட வேண்டாம்.மூன்று வருடமும் படித்தச் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தோம்.அதன்படியே அவன் படித்து பாஸாகி போனான்.

2001 ஜுனில் H.O.D ஆனதும் ஒரு ஃப்ண்ட் உருவாக்கினேன். கணிதத் துறை ஆசிரியர்கள் மாதம் 50/-ருபாய் போட்டு அந்தப் பணத்தை பேராசிரியர்கள் சுந்தரேசன்,சுவாமினாதன் பொறுப்பில் தனலட்சுமி வங்கியில் deposit பண்ணினோம்.முருகன் சார் மாதம் 100/- தந்தார். வசதியில்லா பல மாணவர்கள் அதனால் பயன்பெற்றனர்.

எனது மகள் பெயரில் தட்சணாமூர்த்தி சாமி சன்னதியில் அர்ச்சனை பண்ணுவதற்காக ------ கோயிலுக்கு ஒரு வியாழக்கிழமை போனோம்.எங்கேயோ போய்க் கொண்டிருந்த ஒரு T.V.S 50 எங்கள் அருகாமையில் வந்து நின்றது. பார்த்தால் அந்தப் பையன் ---.
அவரே வந்து மிகவும் திருப்தியாக நீண்டநேரம் அர்ச்சனை பண்ணி ப்ரசாதம் தந்தார்.

நான் ,’ படிக்கல்லியா மேற்கொண்டு’ எனக் கேட்டேன். “Forward-ஆக இருப்பதால் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை....வீட்டுச் சூழ்நிலையால் வெளியேயும் போகமுடியல்ல....” என்று சொல்லிவிட்டு எனக்கு வேறொரு கோயிலுக்குப் போணும்.உங்கள பாத்ததினால தான் வந்தேன் எனக்கூறி விட்டு போய் விட்டார்.

2004-ல் நாகர்கோவில் ரயில்நிலையத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த போது ஒருவர் என் பின்னாலேயே வந்து சார் என்னத் தெரியல்லையா....நான் தான் -------.இப்ப ஒரு கல்லூரியில் Physics lecturer ஆக இருக்கிறேன். நீங்களும் ராஜையன் சாரும் தான் சார் படிக்கும்போது உதவி செய்தீங்க......ராஜையன் சார நான் கேட்டதாச் சொல்லுங்க...
நின்று பேசவும் முடியவில்லை. சரிப்பா....ரெம்ப சந்தோசம் எனச் சொல்லிவிட்டு நான் ரயிலில் ஏறினேன்.

2004-ல் M.S.University Convocation function-ல் ஆறுமுகப்பெருமாள் டாக்டர் பட்டம் வாங்குவதை முன்னிட்டு நான் ராமகிருஷ்ணனுடன் போனேன்.பட்டம் அளிப்பு விழா முடிந்தது.
ஒருவர் என் அருகே வந்தார்.

“சார்...என்னத் தெரியல்லியா...நாந்தான் சார்-------.நாரூல்ல railwar station-ல வச்சு பாத்தோம்லா.....”

நான் அவனுக்கு கை கொடுத்து வாழ்த்தும் கூறினேன்.அவன் மகிழ்ந்ததை என்னால் விவரிக்க முடியவில்லை

“சார்....ராஜையன் சார்ட்ட இதச் சொல்லணும் சார்...அவர் இல்லாட்டா நான் இல்ல...”

முடிக்குமுன் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சர்ச்சை.

“இதையெல்லாம் எழுதினால் செய்ததை சொல்லிக் காட்டுவது போல் இருக்குமே.அந்தப் பையன்களே படிக்க நேர்ந்தால் உங்களைப் பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா” இது அவள்.

நான் சொன்னேன், “ நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான். நான் Blog எழுத ஆரம்பிக்கும்போதே இதை எழுத நினைத்துக் கொண்டிருந்தேன்.என் மனசிலும் தம்பட்டம் அடிக்கக்கூடாதே என்ற எண்ணம் வந்து எழுதவில்லை.ஆனால் இதை படித்தவர்களுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தால் நல்லதுதானே...”

போற்றுபவர்கள் போற்றட்டும்....அதனால் நான் எழுதினேன். எழுதி முடித்தபின்னும் என் மனைவியின் பேச்சு அச்சுறித்தியதால் பெயர், ஊர்,சில நெருடலான தகவலைத் தவிர்த்து பதிவு செய்திருக்கேன்...

நல்லதை யார் சொன்னாலும் கேட்க வேண்டும்லா.

என் மனைவி சொன்னாள்.சொன்னதைச் செய்தேன்

No comments:

Post a Comment