Friday, September 16, 2011

ஆள்வார்கோயில் வெங்கட்ராமன் போற்றியும் குவைத் ஹோட்டலும்

நாங்கள் பொன்னப்ப நாடார் காலனியில் வீடு கட்டும்போது அந்த இடத்தில் ஒரே ஒரு ஆள் தான் அஸ்திவாரம் மட்டும் கட்டி முடித்திருந்தார்.தண்ணீர் தந்து உதவியவர்கள், பொருளைப் பாதுகாக்க இடம் தந்து உதவியவர்கள்,....எனப் பலர் உண்டு.

நான் முதலில் ஒரு store room தான் கட்டினேன்,அதனைக் கட்டுவதற்கு லாறியில் கொண்டு வந்த தண்ணீரை அவரது வீட்டுத்தண்ணீர்த் தொட்டியில் தான் பிடித்தோம்.

நான் அவரைப் பார்த்ததே இல்லை.....அவரது மனைவி தான் தண்ணீர் பிடித்துக் கொள்ள அனுமதி தந்தாள். அவரது வீடும் கட்டி முடிந்து பால் காய்ச்சுக்கும் நான் போனேன்.

என் வீட்டுக்கு வந்த அவரிடம் பேசி கொண்டிருந்தேன்.

அவர்தான் வெங்கட்ராமன் போற்றி.

குவைத்தில் வேலை பார்ப்பதாக கூறினார். அவரது அப்பா ராமகிருஷ்ணன் போற்றி. சொந்த ஊர் தக்கலைப் பக்கத்தில் உள்ள ஆழ்வார்கோயில். P.U.C வரை படித்திருக்கிறார்.

அவர் மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்ததால் வறுமை பற்றி அதிகம் அறிந்தவர்.

காலங்கள் உருண்டோடின. என் மகன் தினேஷ் குவைத்துக்கு அவரது உதவியால் வந்து வேலை பார்த்தான்....

போற்றி குவைத்தில் வேலை பார்ப்பதோடு உடுப்பி ஹோட்டலும் வைத்திருக்கிறார். நாகர்கோவிலிலும் வடசேரியில் உள்ள Hotel Udupi Internationalன் உரிமையாளரும் இவர் தான்.நாங்கள் அனைவரும் அவரை சாமி என்று தான் அழைப்போம்...

நானும் என் மனைவியும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி குவைத்துக்கு வந்தோம்.எங்களை அழைத்துக் கொண்டு போக வந்த தினேஷ் அவனது வீட்டில் சாப்பிட விரும்பினான்.ஆனால் தினேஷிடம் போண் பண்ணி அவரது ஃபாஹீலில் உள்ள உடுப்பி ஹோட்டலுக்கு அழைத்து வரச்சொன்னதால் நாங்கள் அங்கேயே போனோம். இதுதான் பொன்னப்ப சார் எனச் சொன்ன உடனே அங்கிருந்த ஊழியர் தெரியுமே எனச் சொன்னது ஆச்சரியமாகவே இருந்தது.

13-ஆம் தேதி செவ்வாய்கிழமை நாங்கள் ஃபாஹீலில் உள்ள உடுப்பி இண்டர்நேஸனல்-க்குப் போனோம்.சாமி கத்தார் போய் புதன்கிழமை வருவாதாகச் சொன்னார். ஊழியர்கள் இருவர் எங்களை நலம் விசாரித்தார்.டிஃபன் சாப்பிட்டோம்.அங்கு வேலை பார்த்த முருகன் எனக்குத் தெரிந்தவர் வடசேரியைச் சேர்ந்தவர்...அங்கும் நாங்கள் சாமி இல்லாத போதும் விருந்தினராகவே கௌரவிக்கப் பட்டோம்,

வியாழன் காலையில் அவர் காரில் வந்து அழைத்துச் சென்றார்.மதிய உணவு உண்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம்.அவரது எல்லா ஹோட்டலுக்கும் எங்களை கூட்டிக் கொண்டுபோனார்.ஐந்து ஹோட்டலிலும் இதுதான் பொன்னப்ப சார் என்று அறிமுகப் படுத்தினார்.எல்லோருக்குமே என் பெயர் தெரிந்திருக்கிறது....

நான் அவரிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.காரையும் ஓட்டிக் கொண்டே பதிலும் சொன்னார்......

1981-ல் முதல் தடவையாக குவைத்துக்கு வேலைக்கு வந்தார். 1994 க்குப்பின் தான் நண்பர்களின் ஐடியா படி முதன்முதலாக ஒரு ஸ்பான்சர் உதவியால் ஃபாஹீலில் உடுப்பி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தார். இப்போ ஐந்து ஹோட்டல்கள் இருக்கின்றன.ஸால்மியா, ஸர்க்,
அப்பாசியா-லும் ஃபாஹீதில் ஒரு கட்டிடத்தில் 15- வது மாடியில் உடுப்பி இண்டர்நேசனல் ஹோட்டலும் நடத்தி வருகிறார்.

தினேஷ் ஆரம்பகாலத்தில் வியாழக்கிழமை தோறும் குவைத் சிற்றியில் உள்ள ஹோட்டலுக்கு வந்து வந்து போற்றியைப் பார்க்க வருவான்.அவனுக்கென்று தனியாக ஒரு இடம் ,பெட் உண்டு...அவன் தங்கி அடுத்த நாள்தான் போவான்.அந்த இடத்துக்கு நாங்கள் வந்ததும் தினேஷ் என்னிடமும் அங்கிருந்தவர்களிடமும் கூறி மகிழ்ந்தான்.

சாமியின் நண்பர் ஒருவர் குவைத்தை சேர்ந்தவர்.எஞ்சீனியர்.அவர் நாகர்கோவிலுக்கு வந்தபோது என் வீட்டுக்கும் அவரை அழைத்து வந்தார் சாமி. அவரை குவைத்தில் அவருடைய அலுவலகத்தில் போய்ப் பார்க்கப் போனோம்.

என்னை சாமி அவரிடம் அறிமுகப் படுத்தினார்.அவர்..WELCOME TO KUWAIT .....
தேனீர் தந்தார்.....புறப்படத் தயாரானோம்...

தினேஷ் போட்டோ எடுக்கலாமா என விரும்பிக் கேட்க அவர் தன் சீட்டில் இருந்து எழுந்தார்.
சாமி அவரிடம் ,“நீங்கள் சீட்டில இருங்கோ” னச் சொல்ல அவர் மறுத்து எங்களோடு நிற்க போட்டோ எடுத்தான் தினேஷ்.

அடுத்த நாளும் சாமியின் இன்னொரு சின்ன பஸ்ஸில் குவைத்தைச் சுற்றிப் பார்த்தொம்.பஸ் ஸ்டேண்ட்,லிபரேசன் டவ்வர் பக்கம்,ட்விஸ்ட் பில்டிங்க்,சிற்றி முழுவதும் பார்த்தோம்.

திரும்பி வரும் போது சாமி என்னிடம் நான் பொன்னப்ப சாரோடு இப்படி குவைத்தில் சுற்றுவேன் எனக் கொஞ்சமும் எதிர் பார்க்கல...என்றார்.

நான் அவரிடம்,“எனக்கும் ரெம்ப ஆச்சரியமாக இருக்கு சாமி.....நான் குவைத்தில் வந்து சேர்ந்த உடனேயே ஒரு இந்தியர் நடத்தும் ஹோட்டலில் திருவோணச் சாப்பாடு. குவைத்தைச் சேர்ந்தவரின் அன்பான விருந்தோம்பல்....இதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு உங்களால் தானே.......”

அவர் தான் நடத்தும் கத்தார் ஹோட்டல் நஷ்டமாய் போய்க் கொண்டிருப்பதைக் கூறினார் .

சொன்னதை எல்லாம் எழுதக் கூடாதல்லவா.....

சொன்னதில் என் மனதை தொட்டது.....அவர்,“ ஆள்வார்கோயில்ல இருந்து வரும் போது நான் எதுவும் கொண்டு வரல்ல நான் நஷ்டப்படுவதுக்கு....70 க்கும் அதிகமான குடும்பங்கள் என் ஹோட்டலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...இந்தியன் ஹைக்கமிசனில் நடக்கும் விழாக்களுக்கு அழைப்பு வரும்....நான் போவதில்லை....நான் இன்னமும் அதேக் கம்பனியில் தான் வேலை பார்க்கிறேன்....”

சாமி அரபி மொழியில் நன்றாகப் பேசுகிறார். இந்தி,இங்க்லீஸ் சரளமாகப் பேசுகிறார்,துளு, மலையாளம் தெரியும்.

ஆள்வார்கோயிலில் தன் தந்தையின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்ததை இன்றும் சொல்கிறார்.

குவைத்தில் இருந்தாலும் ஆழ்வார்கோயிலை தினமும் நினவில் கொள்கி்றார்.சிவராத்திரிக்கு ஆழ்வார் கோயிலில் கச்சேரி நடத்த நல்ல ஒரு பாடகரைக் கொண்டுவர இப்பமே முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.

வேர்களை மறவாத போற்றியை என்னாலும் மறக்க முடியாது......

No comments:

Post a Comment