Thursday, September 22, 2011

கையில காசில்லாம போகலாம்....பாஸ்போர்ட்,விசா இல்லாமல் வெளியே போகக் கூடாது

தமிழ் சினிமா பார்க்கப் போலாமா.......

 

நாங்கள் குவைத்துக்கு வந்த அடுத்தநாள் என் மகன் என்னிடம்,“ அப்பா...நாம் எங்காவது போகலாம்....இண்ணைக்கு நான் லீவு எடுக்கப்போறேன்....”

“ஒரண்டையும் போகாண்டாம்....நீ இண்ணைக்கு வேலைக்குப் போப்போ....ரெண்டு மாசம் இங்கதான இருக்கப்போறோம்”

“உங்களுக்கு போரடிக்கும்லா....அதான் சொன்னேன்”

வேலைக்குப் போன அவன் அங்கிருந்து போணில் , “ மங்காத்தா சினிமாவுக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணட்டுமா ?” கேட்டான்.

“நீ பாத்தாச்சுல்லா..நான் மட்டும் தான் வாறேன்...சுதா பிள்ளைய வச்சிட்டு வர முடியாதுங்கிறா அதனால அம்மையும் வரல்ல”

7 மணிக்கு படம் ஆரம்பிக்கும். கொஞ்சம் நேரத்த போனால் தமிழ் புஸ்தகம் வாங்கலாம்...

6 மணிக்கு நானும் தினேஷும் வீட்டை விட்டு கீழே லிஃப்டில் இறங்கி ரோட்டுக்கு வந்தோம்..

பஸ்ஸில போலாம் என்று நடந்து போய்க் கொண்டிருக்கும்போது அந்த வழியே வந்த டேக்ஸியை நிறுத்தி அதில் போனோம்...கடைகள் நிறைந்த ஒரு இடத்தில் இறங்கினோம்...

ப்ளாட்பாரத்திலும் சின்னக் கடை விரித்து மொபைல் விற்பனை நடந்து கொண்டிருந்தது....ஆச்சரியமாக இருந்தது...போலீஸ் வந்தால் கடைக்காரன் அங்கிருந்து ஓடிருவான் அவங்க கண்ணில் படாமல்.....

விகடன்,குமுதம்,ராணி,தேவி...வங்கினான்....விலை தலை சுற்றியது
6.45 க்கு தியேட்டர் இருந்த ஒரு இடத்துக்கு வந்தோம்....அது பல மாடி பில்டிங்க். சூப்பர் மர்க்கட், த்யேட்டர்.....இருக்கு....விலை கூடுதலான ஐ-போண் இன்சால்ட்மெண்டில் கொடுக்கும் கடையயும் பார்த்தேன்....

டிக்கட் எடுக்கணுமே....On line-ல் reserve பண்ணலாம். ATM -ல் அவன் வைத்திருந்த கார்டை போட்ட உடனே தியேட்டரின் பெயர்,நம்பர்...Ajial Cinema (3) Mankatha-Tamil (No Arabic Subtitle).....ticket வந்தது. ஒரு நபருக்கு 2 K.D.

அந்த இடத்தில் 4 தியேட்டர் இருந்தது.....

மிகச்சரியாக 7 மணிக்கு விளம்பரப் படம் ஓடியது....

படம் முடிந்து டேக்ஸிக்காக நடந்து போகும்போது பஸ் ஒன்று நின்றதைப் பார்த்து அதில் ஏறினோம்.பஸ்ஸெல்லாமே AC தான். கண்டக்டர் கிடையாது...ட்ரைவர் காசு வாங்கி ஒரு ஆட்டமெட்டிக் மெசினில் 2 டிக்கட் எடுத்துத் தந்தார்


ஞாயிறு மாலை வேலை முடிந்து ,கடைக்குப் போலாம் ,Fish market-க்கும் போய் மீனும் வாங்கலாம் என கிழம்பும் போது மகாதேவன் வந்தார்.அவரது காரில் நாங்கள் எல்லோருமே பொனோம். வாசல் கண்ணாடிக் கதவு மூடியபடியேதான் இருக்கும். நாம் அருகே போனதும் அது இரு புறமும் நகர்ந்து வழி விடும் .உள்ளே போனதும் அது மூடிக்கொள்ளும்.கடைக்குப் போய் தேவையானதை வாங்கி விட்டு அதன் பக்கத்தில் உள்ள fish market=க்குப் போனோம்.

நல்ல மீன் . அன்று அதுதான் இருந்தது....பெரியதாக இருக்குதே...வேற மீனப் பாக்கலாம் என தினேஷ் கூறினான். என் மனைவி இத வெட்டித் தாருங்களேன் என கூற தினேஷ் சிரித்துக் கொண்டே நிண்ணான்....அவன் சிரித்துக் கொண்டே, “ நம்ம ஊரிலதாம்மா வெட்டுனத வாங்குவாங்க...இங்க யாரும் வாங்க மாட்டாங்க” மலையாளத்தில் சொன்னான்.

வெளிநாட்டில் இருக்கும்போது அனைவருக்கும் ஒரே ஊர்தான். இந்தியாதான்....

எப்பவுமே அவன் கடையில் வாங்குவதால் சொன்ன விலையில் இருந்து குறைத்து மீனை 5 நாள் உபயோகிக்க வெட்டி 5 கவரில் வைத்து கொடுத்தான்.

தேங்காய் வாங்கினால் திருவித் தருகிறார்கள். மரச்சீனி கிழங்கு கிடைக்கிறது.சம்பா புட்டு மாவு இங்கே கிடைக்கும்.

நாகர்கோவிலில் வெளியே போனால் கையிலோ பையிலோ காசு இல்லாமல் இருக்காது. காசு எடுக்காமல் காலையில் Walking கூட போனது கிடையாது.இங்கோ நான் வெளியே போகும்போது என் கையில் காசிருக்காது...ஆனால் பாஸ்போர்ட்டும் விசாவும் கையில் இருக்கும். இதெல்லாம் இல்லாம வெளியே போகக் கூடாது. ஆனால் இங்கு வேலை பார்ப்பவரகள் Civil ID வச்சிருப்பாங்க.......

கையில காசில்லாம போகலாம்....பாஸ்போர்ட்,விசா இல்லாமல் வெளியே போகக் கூடாது

No comments:

Post a Comment