Monday, September 12, 2011

என் குவைத் பயணம்............2ஒரு மாத காலமாக குவைத்துக்கு போய் பேரனைப் பார்க்கப் போகும்போது என்னவெல்லாம் கொண்டு போகலாம் எவ்வளவு கொண்டு போகலாம் என விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கூறினார்கள். விமானப் பயணத்திற்கு நான் எடுத்த டிக்கட்டை எடுத்துப்பார்த்தேன். ஒரு நபருக்கு 23 கிலோ லக்கேஜுடன் 7 கிலோ கையில் கொண்டுபோகலாம்,அப்படியானால் 60 கிலோ எங்களுக்கு கொண்டு போகலாமே.

பேரனுக்கு செயின் செய்து சுதாவின் அப்பா எங்களிடம் தந்து கொண்டு போகச் சொன்னார்கள். அதைக் கொண்டு போலாம்,போகக்கூடாது என்று விதவிதமாகக் கூறினார்கள். என்ன ஆனாலும் ஆகட்டும் என்று கையில் கொண்டு போகும் பையில் வைத்து விட்டோம்.

நள்ளிரவுக்குப்பின் புறப்பட்ட கார் ராமு ஓட்ட 2.20-க்கு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது. காரில் தூங்கியதால் சீக்கிரம் வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு.

ராமு ஒரு ட்ராலியை எடுத்து வந்து எல்லாப் பெட்டிகளையும் ஒழுங்காக அடுக்கித் தந்தான் . என் வாச்சைப் பார்த்தேன். மணி 2.30.

CHECK IN என தகவல் பலகையில் காணப்பட்டதால் ட்ராலியை தள்ளிக் கொண்டு முன்னேறினேன். கூட்டம் கூடுதலாகவே இருந்தது.
வாசல் பக்கம் நின்ற ஒருவர் பாஸ்போர்ட், டிக்கட்டைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் எங்களிடம் தந்தார். உள்ளே போனதும் என் வலதுகை பக்கம் போகும்படியாக ஒரு அம்புக்குறி வழி காட்டியது . ஆனால் எங்கள் எதிரே நின்ற ஒருவன் இடது பக்கமாகப் போக கையைக் காட்டினான். சற்றுக் குழப்பத்துடன் அங்கே போனோம் .அங்கு ஒரு மெஷின் பெட்டிகளை ப்ளாஸ்டிக் பேப்பரால் பொதிந்து கொண்டிருந்தது. கட்டணம் 100/-. எனக்கு வேண்டாம் எனத் தோன்றவே அம்பு காட்டிய திசையிலேயேப் போனோம்

ஸ்கேன் பண்ணும் இடத்தில் போய் நின்றோம். அங்கும் வரிசையில் தான் நின்றோம். எங்கள் லக்கேஜ்கள் எல்லாவற்றையும் அங்கிருந்த ஒருவன் எடுத்து வைத்தான். அவையனைத்தும் வைத்திருந்த கண்வேயர் நகர்ந்து அடுத்த நிலைக்கு வந்ததும் இன்னொருவன் ட்றாலியில் எடுத்து வைத்தான்...அடுத்து எங்கே போகணும்....போர்டிங்க் பாஸ் எங்க வாங்கணும்.

என் கண்களில் QUATAR AIRWAYS போர்ட் தெரிந்தது. அங்கேயும் போய் வரிசையில் நின்றோம்.வரிசை நகர நகர நாங்களும் ஊர்ந்து போய் கொண்டிருந்தோம்..ஒருவன் இரண்டு ஃபார்ம் தந்தான் எதற்கென்றே என்னிடம் சொல்லல்ல. வருவதற்கு முன்னமே இதனையெல்லாம் தினேஷ் என்னிடம் கூறியிருந்தான்..சின்னச் சின்ன சந்தேகம் வரவே என் பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன். அவருக்கும் தெரியல்ல

ECR stamp affixed என்பதில் 2 கட்டம் (பாக்ஸ்).ஒன்று Yes....அடுத்தது No. எதில் டிக் பண்ணுவது.எனது பாஸ்போர்ட்டை ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்தேன்.எதிலும் எதுவும் இல்லை. அதனால் ’ ‘நோ’ என்பதில் டிக் பண்ணினேன்........... லக்கேஜ் எடை சம்பந்தமாக கூடுதல் எனக் கூறி திருப்பிக்கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த எனக்கும் சற்று சந்தேகம், நமது எடை மெஷின் காட்டிய அளவு சரியாக இருக்குமா..... கூடுதலா இருந்தா கொஞ்சம் சாதனங்களை எடுக்கணுமே..... எதை எடுப்பது.........

“ஓ நமச்சிவாயா”.......எனது மொபைல்........ராமுதான் பேசினான். அவன் வெளியே நாங்கள் பார்க்கும் தூரத்தில் பார்க்கக் கூடிய இடத்தில் நிற்பதாகக் கூறினான்.. வாருங்கள்......அழைத்தார்கள்..

அந்த மேசையின் அருகில் போய் பாஸ்பொர்ட், டிக்கட் எல்லாம் கொடுத்தேன். விசிட் விசாவில் போகிறீர்களா எனக் கேட்டாள் அலுவலகப் பெண். ஆமாம் எனக் கூறி விசாவைக் கொடுத்தேன்.PCC எடுத்தீங்களா?

அப்படின்னா என்ன அது? என நான் கேட்டேன். police clearance Certificate என்றாள். .’நான் எடுக்கல்ல. அதை எங்க எடுக்கணும்’. சைகையால் வெய்ட் பண்ண சொன்னாள்..

“என்னடா இது புதுக் கொடுமையாய் இருக்கு”.......என் மனைவியைப் பார்த்தேன்....... அவளதுமுகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது. அவளை சமாதானப்படுத்தினேன். இன்னொருவர் அந்த சமயத்தில் அங்கு வந்தார்.எங்க விசாவைப் பற்றியும் பி,சி.சி பற்றியும் கேட்டதில் இப்போ அதெல்லாம் வேண்டாம் என அவர் கூற ,எங்கள் பெட்டிகள் எடை பார்க்கப்பட்டது.

நல்லவேளை தடங்கல் இல்லாமல் 3 பெட்டிகளும் நகர்ந்து போனது.எல்லா பெட்டிகளிலும் டேக் கட்டினார்கள். கைப்பையில் கட்ட 3 ஆரஞ்ச் கலர் டேக் தந்தாள் போர்டிங்க் பாஸ் தந்தார்கள். அதில் TRV to DOHA என்று இருந்தது.

அதைப் பற்றி கேட்டேன். அவர்கள் டோஹா போய் சேர்ந்ததும் அங்கு தருவார்கள் எனக் கூறவே நாங்கள் சற்றுக் குழப்பமானமான மன நிலையிலேயே நகர்ந்தோம். வெளியில் நின்ற ராமுவைப் பார்த்து அவனை போகும்படி கையால் சைகை காட்டிவிட்டு விரைவாக இமிகிரேசன் கௌண்டருக்குப் போனோம்.

ஒரு நீண்ட வரிசை அங்கே போய் நின்றோம். வரிசை நகரவே இல்லை.இடைஇடையே வரிசையில் வராதவர்கள் எங்களுக்கு முன்னமே போய் இமிகிரேசன் முடித்துவிட்டு போய்க் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்த ஒரு ஊளியரிடம் இப்பமே மணி 4-00 ஆகிறது எனக்கு 5 மணிக்கு ஃப்ளைட்டில் ஏறணுமே....எனக் கூறினேன்

ஒருவழியாக கௌண்டர் அருகே வர முடிந்தது. விசிட் விசா.....ரிட்டேண் டிக்கட் இருக்கா எனக் கேட்க நான் எல்லாவற்றையும் கொடுத்தேன். அதன் பிறகு கஸ்டம் செக்கிங்க் முடிந்து 4.40க்கு விமானத்தில் ஏறினோம்........................................

(இன்னமும் முடிய வில்லையே.......தொடரும்).

No comments:

Post a Comment