Tuesday, September 20, 2011

செருக்கும் செருப்பும் இல்லா தியாகி பகவதி

கடுக்கரையில் பிறந்த திரு தெ.வே. பகவதிப்பெருமாள் தெரிசனம்கோப்பில் வாழ்ந்து வருகிறார். தெ.வே.பகவதி என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவர் 1947 ல் தெரிசனங்கோப்பில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்வில் தனது 11 வயதில் கலந்துகொண்டு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர்

1954 ஆகஸ்டு 11 ம் தேதி நடந்த திருத்தமிழக விடுதலை தினமாக கொண்டாடப்பட்டபோது இவர் புதப்பாண்டி அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் அப்போது மாணவர்களை ஒன்று திரட்டி அரசாங்கத்தின் தடையை மீறி ஊர்வலமாக சென்று திட்டுவிளை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது பூதை சோ. அண்ணாமலை கடுக்கரை தம்புரான் தோழப்பிள்ளை ஆகியவர்களுடன் கைது செய்யப்பட்டு புதப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பள்ளிப்படிப்பு தடையாகி படிப்பு என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1981 1982 ஆகிய ஆண்டுகளில் அரசின் சார்பில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களுக்கு அடிகோலியாக இருந்து செயல்பட்டார்.

1986 ல் இருந்து 1991 வரையிலும் தெரிசனங்கோப்பு ஊராட்சியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டு 5 ஆண்டுகாலம் அரிய பல நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டார்.

2006 ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்மாநில பொன்விழாவில் எல்லைப்போராட்ட தியாகிகளை அழைத்து தமிழக அரசு கௌரவப்டுத்தி விருதுகளை வழங்கியது. அதில் கலந்து கொண்டு அன்றைய முதலமைச்சர் அவர்களால் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

2006 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும் 72 வயதான ஒரு சுறுசுறுப்பான மனிதத்தேனியாக வாழும் தியாகி விருது பெற்ற இளைஞர்
இவர் கால்களில் செருப்பு போடுவதில்லை.

இவர் தனது இளமைக் காலத்தில் ‘கலைச்சுடர்’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்.

AD-World என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் அதன் ஆண்டு விழாவினை கொண்டாடும் போது சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிப்பார்.

2011 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஆண்டுவிழா நடந்தது.திரைச்சீலை நூலை எழுதிய கோவை ஜீவானந்தனும் கௌரவிக்கப்பட்டார். நான் பெங்களூர் சென்றதால் ஒரு வாழ்த்துச் செய்தியை எழுதி என் உறவினர் மூலம் கொடுத்தனுப்பினேன்.

அந்த வாழ்த்து இது தான்:

கடுக்கரையில் விதையாய் வீழ்ந்த
தெரிசையில் தருவாய் உயர்ந்த
ஊருக்குத் தலைவனாய் சேவகனாய்
வாழும் கலைச்சுடர் பகவதியே

நம் மாவட்ட சாதனை படைத்த
வல்லோனை எல்லோருக்கும் காட்ட
நடத்தும் பாராட்டு விழாவே நாளை
உன் சாதனைப் பட்டியலில் சேரும்

தலையில் செருக்கு இல்லை
காலில் செருப்பும் இல்லை
ஆனால் பெருமை ஒன்று உண்டு.அது
இது போல் நடத்துபவன் நீயொருவனே என்று

எம் மண்ணின் மைந்தனே
என் அண்ணனே
விழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

1 comment: